ஆஸ்திரேலியா சென்று திரும்பிய நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நியூசிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் ஆட்டம் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டது. எஞ்சிய ஆட்டங்கள் ரத்து செய்யப்பபட்டன. ஆஸ்திரேலியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய நியூசிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்ஸ் உத்தரவின்படி 15 ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பரசிட்டமோலை பயன்படுத்துங்கள் – ஆனால் அந்த மருந்து வேண்டாம்!
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை ஐப்யூபுரூபெனை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது. ;ஐப்யூபுரூபென் உட்பட சில மருந்துகள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை மேலும் ஆபத்தானதாக மாற்றலாம் என லான்செட் சஞ்சிகையில் கட்டுரையொன்று வெளியாகியுள்ள நிலையிலேயே உலக சுகாதார ஸ்தாபனமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. பிரான்சின் சுகாதார அமைச்சரும் நோயாளிகள் ஐப்யூபுரூபென் ;அஸ்பிரின் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐப்யூபுரூபென் போன்ற மருந்துகளை ஏற்படுத்துவதே நோய் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள அமைச்சர் உங்களிற்கு காய்ச்சல் இருந்தால் ...
Read More »வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு!
வவுனியாவில் பலத்த பாதுகாப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதுடன் விஷேட அதிரடிப்படையினர் காவல் துறையுடன் இணைந்து வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டதுடன் 320 காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியாவில் இன்று பலத்த பாதுகாப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதுடன் வன்னி பிராந்திய பிரதிப் காவல் துறை மா அதிபர் தம்மிக்க பிரியந்த, சிரேஸ்ர காவல் துறை அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா வவுனியா தலைமை காவல் துறை நிலைய பொறுப்பதிகாரி மானவடு ஆகியோரின் தலைமையின் கீழ் விஷேட அதிரடிப்படையினர் காவல் துறையுடன் இணைந்து வீதி பாதுகாப்பு ...
Read More »கட்டுநாயக்க விமான நிலைய பணிகள் இன்றுடன் நிறுத்தம்!
கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகள் விமானங்கள் வருகைத்தருவது இன்று அதிகாலை 4 மணிமுதல் எதிர்வரும் 25 ஆம் திகதி நள்ளிரவு வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை தருவது இடைநிறுத்தப்படுவதற்கு முன்னதாக நான்கு விமானங்கள் நாட்டை வந்தடைந்தன தம்பதிவ யாத்திரைக்கு சென்றவர்கள் உள்ளிட்ட இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் அந்த விமானங்களில் நாட்டை வந்தடைந்தனர். சென்னை, புதுடில்லி, மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து குறித்த விமானங்கள் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »பரசிட்டமோல், கோழி சூப், எலுமிச்சைச் சாறு கொரோனாவிலிருந்து மீண்ட வைத்தியர்!
பிரிட்டனில் தெற்கு லண்டனிலுள்ள கென்னிங்டனைச் சேர்ந்தவர் டாக்டர் கிளார் ஜெராடா. 60 வயதான இவர் பொது மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் (ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ்) முன்னாள் தலைவர் ஆவார். இவர் நியூயார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்று லண்டனுக்குத் திரும்பியபோது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய்த் தொற்றின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் சில நாள்கள் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் டாக்டர் கிளார். கடுமையான காய்ச்சல், நடுக்கம், தொண்டயில் புண், தலைச்சுற்றல், மூட்டுகளில் வலி, தலைக் குத்தல், தொடர்ந்து இருந்த இருமல் ...
Read More »கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கை அறிமுகப்படுத்தும் அதிரடி ஆயுர்வேத மூலிகை மருந்து!
கொரோனா வைரஸ் பற்றிய கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது சீதாராமா என்ற 2 மருந்து மூலிகை உருண்டை அல்லது 4 உருண்டைகளை பயன்படுத்துவது பொருத்தமானது என ஆயர்வேத மருந்தக கூட்டத்தாபனத்தின் தலைவர் திருமதி. சாகல அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த மருந்துகளுக்கு மேலதிகமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மல்லி, இஞ்சி உட்பட பஸ்பங்கு எனப்படும் சிங்கள ஆயர்வேத ஐந்து வகை ஒளடதம் மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார். தொண்டையில் வலி, தும்மல், ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்கு பயன்படுத்தும் சிகிச்சை ...
Read More »போலி ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம்!
கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதாகத் தெரிவித்து இணையத்தளங்களில் வெளியாகும் ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள் தொடர்பிலான தகவல்களை நம்ப வேண்டாம் என, ஆயுர்வேத திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது . அங்கீகரிக்கப்படாத மருத்துவக் குறிப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக சிலர் பரப்பிவருவதாக, ஆயுர்வேத ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார் போலி மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுள்ளார். தற்போது பரவும் Covid19 எனப்படும் கொரேனா வைரஸுக்கான சிகிச்சை வழங்க ஆயுர்வேத வைத்தியர்கள் என்ற போர்வையில், பலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆயுர்வேதப் பொருட்களை ...
Read More »உலக முழுவதும் கரோனா வைரஸால் 179,000 பாதிப்பு!
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 179,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, “ உலகம் முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் 11,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கோவிட் காய்ச்சலுக்கு 1, 79,00 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செவ்வாய்க்கிழமை உலகம் முழுவதும் 475 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் உலக முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார். சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ...
Read More »கொரோனாவை ஓழிக்க ஏற்கனவே இருக்கும் சில மருந்துகள் பயன்படலாம்!
ஏற்கனவே இருக்கும் சில மருந்துகளே கொரோனாவை ஓழிக்க பயன்படலாம் என்கிறார்கள் அவுஸ்திரேலிய மருத்துவர்கள். சீனாவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பிய சீனர்கள் சிலர், சீனாவில் சில மருந்துகள் கொரோனாவுக்கெதிராக பயன்படுத்தப்பட்டு பலனளிப்பதாக தகவல் அளித்துள்ளார்கள். அவர்கள் கூறிய செய்தியின் அடிப்படையில், அவுஸ்திரேலியாவில் வாழும் சீன நோயாளிகள் சிலருக்கு அந்த மருந்து கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கப்பட்ட அந்த நோயாளிகள் அனைவரும் நல்ல முன்னேற்றம் காட்டியிருகிறார்கள். அந்த மருந்து, ஹெச்.ஐ.விக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து! ஆக, ஹெச்.ஐ.விக்கான சிகிச்சை மற்றும் மலேரியாவுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தும் என ...
Read More »யாழ்.மாநகர முதல்வர் ஆனல்ட் பொதுத் தேர்தலில் வேட்பாளராக இணைப்பு
யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின்) சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகிறார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையக பணிமனையில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது. தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், ...
Read More »
Eelamurasu Australia Online News Portal