கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகள் விமானங்கள் வருகைத்தருவது இன்று அதிகாலை 4 மணிமுதல் எதிர்வரும் 25 ஆம் திகதி நள்ளிரவு வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை தருவது இடைநிறுத்தப்படுவதற்கு முன்னதாக நான்கு விமானங்கள் நாட்டை வந்தடைந்தன
தம்பதிவ யாத்திரைக்கு சென்றவர்கள் உள்ளிட்ட இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் அந்த விமானங்களில் நாட்டை வந்தடைந்தனர்.
சென்னை, புதுடில்லி, மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து குறித்த விமானங்கள் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal