கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதாகத் தெரிவித்து இணையத்தளங்களில் வெளியாகும் ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள் தொடர்பிலான தகவல்களை நம்ப வேண்டாம் என, ஆயுர்வேத திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது .
அங்கீகரிக்கப்படாத மருத்துவக் குறிப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக சிலர் பரப்பிவருவதாக, ஆயுர்வேத ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார்
போலி மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
தற்போது பரவும் Covid19 எனப்படும் கொரேனா வைரஸுக்கான சிகிச்சை வழங்க ஆயுர்வேத வைத்தியர்கள் என்ற போர்வையில், பலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆயுர்வேதப் பொருட்களை அறிமுகப்படுத்துவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
இவ்வாறு உத்தியோகப்பற்றற்ற முறையில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும் மருந்துப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாமென, அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம்
அதேபோல, சுகாதாரத் தரப்பினால் வழங்கப்படும் உரிய வழிமுறைகளை மாத்திரம் பின்பற்றுமாரும், அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என, ஆயுர்வேத ஆணையாளர் சத்துர குமாரதுங்க மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal