பரசிட்டமோலை பயன்படுத்துங்கள் – ஆனால் அந்த மருந்து வேண்டாம்!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை ஐப்யூபுரூபெனை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.

;ஐப்யூபுரூபென் உட்பட சில மருந்துகள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை மேலும் ஆபத்தானதாக மாற்றலாம் என லான்செட் சஞ்சிகையில் கட்டுரையொன்று வெளியாகியுள்ள நிலையிலேயே உலக சுகாதார ஸ்தாபனமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

பிரான்சின் சுகாதார அமைச்சரும் நோயாளிகள் ஐப்யூபுரூபென் ;அஸ்பிரின் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐப்யூபுரூபென் போன்ற மருந்துகளை ஏற்படுத்துவதே நோய் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள அமைச்சர் உங்களிற்கு காய்ச்சல் இருந்தால் பரசிட்டமோலை பயன்படுத்துங்கள் ஆனால் மருத்துவர்கள் அந்த வகை மருந்தினை பயன்படுத்துமாறு கோரினால் அவர்களின் ஆலோசனைகளை செவிமடுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் 150ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் வகை ஐப்யூபுரூபென் மருந்துகளே உயிரிழப்பு அதிகரிப்பதற்கு காரணம் என பிரான்சின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட நான்குவயது சிறுமிக்கு புரூபென் வழங்கப்பட்டவேளை அவர் மோசமாக பாதிக்கப்பட்டார் என மிரர் தெரிவித்துள்ளது.

ஐப்யூபுரூபென் ;ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த விசாரணைகள் இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் முடிவடையும் வரை பரசிட்டமோலை பயன்படுத்துங்கள் ஆனால்; ஐப்யூபுரூபென் வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்