ஏற்கனவே இருக்கும் சில மருந்துகளே கொரோனாவை ஓழிக்க பயன்படலாம் என்கிறார்கள் அவுஸ்திரேலிய மருத்துவர்கள்.
சீனாவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பிய சீனர்கள் சிலர், சீனாவில் சில மருந்துகள் கொரோனாவுக்கெதிராக பயன்படுத்தப்பட்டு பலனளிப்பதாக தகவல் அளித்துள்ளார்கள்.
அவர்கள் கூறிய செய்தியின் அடிப்படையில், அவுஸ்திரேலியாவில் வாழும் சீன நோயாளிகள் சிலருக்கு அந்த மருந்து கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கப்பட்ட அந்த நோயாளிகள் அனைவரும் நல்ல முன்னேற்றம் காட்டியிருகிறார்கள்.
அந்த மருந்து, ஹெச்.ஐ.விக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து! ஆக, ஹெச்.ஐ.விக்கான சிகிச்சை மற்றும் மலேரியாவுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தும் என அவுஸ்திரேலிய மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
இந்த இரண்டு மருந்துகளையும், மார்ச் மாதம் இறுதிவாக்கில் நோயாளிகள் மீது சோதித்துப்பார்க்க இருக்கிறார்.
அவுஸ்திரேலியா முழுவதும், 50 மருத்துவமனைகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிலருக்கு ஹெச்.ஐ.வி மருந்தும், சிலருக்கும் மலேரியாவுக்கான மருந்தும், வேறு சிலருக்கு இரண்டு மருந்துகளும் கலந்தும் கொடுக்கப்பட இருக்கின்றன.
ஆனால், இதற்காக சுமார் 750,000 டொலர்கள் வரை தேவைப்படுவதால், நிதி திரட்டும் முயற்சியில் மருத்துவர்களின் குழு இறங்கியுள்ளது