Tag Archives: ஆசிரியர்தெரிவு

கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது அபிலாஷைகளை நீர்த்துப்போகச் செய்ய முடியாது!

தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது மக்களின் அபிவிருத்தியும்,அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி மற்றவையை மழுங்கடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று ஆற்றிய தனது கன்னி உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு ...

Read More »

இரண்டு ஏவுகணைகளை செலுத்தி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக தென்சீனக் கடலில் விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் உள்ளிட்ட 2 ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு உள்ளது. சீனாவின் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் உளவு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF-26B, DF-21D ஆகிய 2 ஏவுகணைகளை சீனா தென்சீனக் ...

Read More »

யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் . 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்;ஷவினால் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் துணைவேந்தர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது. இலங்கையிலுள்ள பல்கலைக் ...

Read More »

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த குற்றவாளிக்கு பரோல் இல்லாது ஆயுள் தண்டனை!

நியூசிலாந்தின் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 51 முஸ்லிம் வழிபாட்டாளர்களைக் கொலைசெய்த நபருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது போன்ற தண்டனை நியூஸிலாந்தில் வழங்கப்படுவது இது முதல் சந்தர்ப்பமாகும். 29 வயதான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ப்ரெண்டன் டாரன்ட் என்ற மேற்படி குற்றவாளி, 51 கொலை குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாத செயலைச் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றை ஒப்புக் கொண்டார். தண்டனையின் போது அவர் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்துள்ளார். ப்ரெண்டன் ...

Read More »

கொரோனாவால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நியூசிலாந்தின் தற்போதைய நிலை என்ன?

கொரோனாவை வெற்றிகொண்ட நாடு என நியூசிலாந்து பெருமையாகப் பேசப்பட்டது. ஆனால் திடீர் கொரோனா பரவல் காரணமாக அந்த நாட்டின் பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் நியூசிலாந்தின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து நியூசிலாந்தின் தலைநகரிலிருந்து  விளக்குகின்றார் பிரபல எழுத்தாளர் நியூசிலாந்து சிற்சபேசன் நன்றி தினக்குரல் இணையம்

Read More »

தமிழர்களே தொன்மைக் குடிகள்! -, தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொதித்துப்போயுள்ளார்கள்!

புதிய நாடாளுமன்றின் கன்னி அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஆற்றிய உரைகள் தொடர்பாக தென்இலங்கை அரசியல்வாதிகள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் பாராளுமன்றில் பேசத்தகாத வார்த்தைகள் எதனையும் பேசவில்லை. இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் ஆதிக்குடிகள் என்பதையும், தனியானதொரு தேசம் என்பதையுமே வலியுறுத்தியிருந்தார்கள். இதற்கே, தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொதித்துப்போயுள்ளார்கள். இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும் அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் வரலாற்று உண்மைகள். இவை பேரினவாதிகளின் கூச்சல்களால் ஒருபோதும் இல்லை என்றாகிவிடாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ...

Read More »

கரோனா: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த கிம்

கரோனா வைரஸ் மற்றும் புயல் தொடர்பாக வடகொரிய அதிகாரிகளுக்கு அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்க, கரோனா பரவல் மற்றும் வடகொரியவைத் தாக்கவிருக்கும் புதிய புயல் குறித்து அதிகாரிகளிடம் கிம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில், “வடகொரிய அதிகாரிகளுடன் இணைந்து கிம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது கிம் கையில் சிகரெட் வைத்திருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் கிம் அதிகாரிகளுடன் என்ன ஆலோசித்தார் என்ற முழுமையான தகவல் ...

Read More »

சம்பந்தனை அமெரிக்க தூதுவர் சந்திக்கவுள்ளார்

திருகோணமலைக்கு இன்று செல்லும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், அம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளார். திருகோணமலை கூனித்தீவில் உள்ள பாடசாலைக் கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் கலந்து கொள்கின்றார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்லத்தும் பங்கேற்கவுள்ளார். இந்த திறப்பு விழா நிகழ்வு காலை 8.45 இற்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு நிறைவடைந்தவுடன் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ள ...

Read More »

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா உதவி!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா முன்வந்திருக்கிறது. கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின் காரணமாக மக்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள். குறிப்பாக பலரும் தமது வருமானங்களை இழக்கவேண்டியேற்பட்டது. இது சாதாரண மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்குக் கூட இடர்ப்பட வேண்டிய சூழ்நிலையைத் தோற்றுவித்தது. அனுராதபுர மாவட்ட செயலாளரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ...

Read More »

கிம் ஜாங் அன் உடல் நிலை குறித்து வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உடல் நிலை குறித்து மாறுபட்ட தகவல்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதற்கும் ஒருபடி மேலே. சர்வதேச ஊடகங்களில் அவர் குறித்த எதிர்மறையான செய்திகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை. எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சர்வாதிகாரியை போல் தடாலடியான முடிவுகளை எடுப்பவர் கிம் ஜாங் அன் என்பதையே அவரை பற்றிய செய்திகள் உணர்த்தும். ஆனால் கடந்த சில மாதங்களாக கிம் ஜாங் ...

Read More »