ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ள நிலையில், இது வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்திலும் தெற்கு ஆஸ்திரேலியாவிலும் சோதனை முயற்சியாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை இத்தாமதம் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியிருக்கிறார். கொரோனா சூழலுக்கு பிறகான 7 மாதக் காலத்தில் வெறும் 300 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் வந்திருக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளினால் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கொரோனா வைரசால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாதது ஏன்?
கொரோனா வைரசால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாதது ஏன்? என்று அமெரிக்க வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் வேக்சின் எனப்படும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க கடுமையாக உழைத்து வருகின்றன. அதில் அமெரிக்க நாடும் ஒன்று. அமெரிக்காவில் உள்ள வான்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் வைத்தியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து குழந்தைகள் அதிக அளவில் தப்பி உள்ளதை டாக்டர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். அதற்கான காரணத்தையும் கண்டுபிடித்து ...
Read More »சிறிலங்காவில் முதல் தடவையாக இரு பெண் விமானிகள் நியமிப்பு
திருகோணமலை சீனக்குடாவில்(China bay) உள்ள விமானப்படை அகடமியில் இன்று காலை சிறிலங்கா விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை அறிவித்துள்ளது.
Read More »வடக்கில் மகாஜனா மாணவி முதலிடம்
நேற்று வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.மகாஜனாக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மகிசன் இருவரும் தலா 195 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இதேவேளை மகாஜனக் கல்லூரியிலிருந்து 36 பேர் சித்தி பெற்றுள்ளனர். வயாவிளான் சிறிவேலுப்பிள்ளை வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 12 மாணவர்கள் சித்தியடைந்தனர். வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அஸ்வினியா ...
Read More »இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை நீக்கம்
மேல்மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பதற்கும் மேல் மாகாணத்துக்குள் நுழைவதற்குமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று (15) நள்ளிரவுடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »கருணா ஒரு ‘காமடி பீஸ்’ – வியாழேந்திரன்
மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்தார். முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன்; அவரது பிறந்த நாளான இத் தினத்தில் அவர் தலைமையில் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு வில்லியம் ஆல்ட் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது இதில் கலந்து கொண்ட பின் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு இலச்சம் வேலை ...
Read More »நல்லுரில் ஒருவருக்கு இன்று கொரோனா
யாழ்ப்பாணத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 157 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர் கடந்த 26 ஆம் திகதி பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றதன் காரணமாக ...
Read More »எனது குளியல் அறையில் கமரா வைத்தனர்!
சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர் என மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு சவுத்ரி சர்க்கரை ஆலையை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டனர் என மரியம் குடும்பம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. ரூ.70 லட்சம் மதிப்பிலான பங்குகளும் மரியம் பேரில் பரிமாற்றம் செய்யப்பட்டன என புகார் எழுந்தது. இந்த வழக்கிற்காக ...
Read More »ஆஸி. சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அவர்கள் அனைவரும் கோரன்டைனில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர். இது தொடர்பான படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்றள்ள இந்திய அணி ...
Read More »சவுதியில் மரங்களை வெட்டினால் தண்டனை என்ன?
சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் 30 மில்லியன் ரியால் ( இலங்கை மதிப்பில் சுமார் 148 கோடி ரூபா) அபராதமும், 10 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பாலைவன நாடான சவுதியில், சுற்றுச்சூழல் வளத்தை பெருக்குவதற்காக பசுமைத்திட்டத்தை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் மாதத்துக்குள் நாடு முழுவதும் 1 கோடி மரங்களை நட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக மரங்களை வெட்டுவதற்கும், எடுத்துச் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			