சவுதியில் மரங்களை வெட்டினால் தண்டனை என்ன?

சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் 30 மில்லியன் ரியால் ( இலங்கை மதிப்பில் சுமார் 148 கோடி ரூபா) அபராதமும், 10 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பாலைவன நாடான சவுதியில், சுற்றுச்சூழல் வளத்தை பெருக்குவதற்காக பசுமைத்திட்டத்தை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் மாதத்துக்குள் நாடு முழுவதும் 1 கோடி மரங்களை நட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக மரங்களை வெட்டுவதற்கும், எடுத்துச் செல்வதற்கும், அவை சார்ந்த மண் வளத்தை அபகரிப்பதற்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.