Tag Archives: ஆசிரியர்தெரிவு

திரைத்துறையில் நன்றி என்பதே இல்லை – அமீர்

எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர், திரைத்துறையில் நன்றி என்பதே இல்லை என்று கூறியிருக்கிறார். பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தைச் சார்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர். இதில் இயக்குநர் அமீர் பேசும்போது, ‘என்னுடைய வாழ்வில் கேட்டுப் பெறக் கூடாத விஷயங்கள் மூன்று வைத்திருக்கிறேன். கைத்தட்டல், ...

Read More »

விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்ட திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜுலை 11ஆம் திகதி நாடாளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் ஒன்றுக்கூடி, முஸ்லிம் ...

Read More »

பப்புவா நாடாளுமன்றத்துக்கு தீ – போராட்டக்காரர்கள் அட்டூழியம்!

இந்தோனேசிய அரசுக்கு எதிராக அரசு அலுவலகங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள் பப்புவா நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீவைத்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியம் பப்புவா. டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்த பிராந்தியம் 1963-ம் ஆண்டு விடுதலை பெற்று தன்னை தானே தனிநாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை இந்தோனேசியா வலுக்கட்டாயமாக தன்னோடு இணைத்துக்கொண்டு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது. இதனால் பப்புவா பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாத அமைப்பு பல ஆண்டுகளாக இந்தோனேசிய அரசுக்கு எதிராக போராடி வருகிறது.இந்த நிலையில், ...

Read More »

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயம் அதிரடி நடவடிக்கை !

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஓருவர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 11.08.2019 அன்று குடும்பஸ்தர் ஒருவர் 04 இளைஞர்களால் நாவற்காட்டு பகுதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தாக்குதலிற்கு உள்ளான குடும்பஸ்தர் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதலிற்கு உள்ளான நபர் பாமர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் கூலித்தொழில் புரிந்து தமது குடும்பத்தை நடாத்தி வருபர் ஆவார். இத்தாக்குதல் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை காவல் துறை  நிலையைத்திற்கு ...

Read More »

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 10 பேர் கைது!

கடல் வழியாக  அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் வென்னப்புவ பகுதியில் உள்ள வீ்டொன்றில் தங்கியிருந்த 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ, நைனாமடம் பகுதியில் உள்ள வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சிலாபம் பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More »

காஷ்மீரில் கடுமையான சூழல் !-டிரம்ப்

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ...

Read More »

சுமித் மீது பவுன்சர் பந்து: அக்தரை கிண்டலடித்த யுவராஜ்சிங்!

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் மீது பவுன்சர் பந்து வீசப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த சோயிப் அக்தரை யுவராஜ் சிங் கிண்டல் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஷ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பவுன்சர் பந்தில் நிலை குலைந்தார். அவரது தலையை வந்து பதம் பார்த்தது. கீழே விழுந்த சுமித் மைதானத்தை விட்டு வெளியேறி பின்னர் ...

Read More »

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது!

சஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையா ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்  இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா – அமெரிக்கா கவலை

இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த கவலையளிக்கிறது. சவேந்திர சில்வாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற நிலையில், அவரது இந்நியமனம் இலங்கை மீதான சர்வதேசத்தின் நன்மதிப்பையும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்குகிறது என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகக் கடமையாற்றிய லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். இந்நிலையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ...

Read More »

ஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 முறை இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. 5 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளது. தற்போது ...

Read More »