Tag Archives: ஆசிரியர்தெரிவு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் குடிவரவு குடியல்வு திணைக்களம்!

குடிவரவு குடியல்வு திணைக்களம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்டார். இதற்கு முன்னர் குறித்த திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டது. ஆனால் இனிமேல் அந்த திணைக்களம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பு – சீனாவில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். அதன்பின் இந்த வைரஸ் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது. முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் ...

Read More »

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்க புத்திஜீவிகள் குழு முன்வருகை!

வடக்கு கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ; தமிழ் மக்கள் அபிவிருத்தி, மேம்பாட்டுக்கான மன்றம் ஒன்றை அமைத்து செயற்படுவதற்கான அங்குரார்ப்பண கூட்டம் யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களின் இல்லத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள துறைசார் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெறும் அதேவேளை, யுத்தத்தினால் மிக ...

Read More »

பலவீனமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்களின் எதிர்பார்ப்பு பயனற்றதாகி விடும்!

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலின் பெற்றி பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெறுவதின் ஊடாகவே முழுமையடையும். பலவீனமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் ஜனாதிபதிதேர்தலின் வெற்றியும், மக்களின் எதிர்பார்ப்பும் பயனற்றதாகி விடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார். கெடபே ராஜபுரராம விகாரையில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாரிய போராட்டத்தின் மத்தியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளோம். மக்கள் அரசியல் ரீதியில் சரயான தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். ஜனாதிபதி ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் மற்றும் கிவிட்டோவா ஆகியோர் கால்இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றனர். கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 7-ம் நிலை வீராங்கனையும், கடந்த முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவருமான பெட்ரா கிவிட்டோவா (செக்குடியரசு) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சகாரியை எதிர்கொண்டார். இதில் கிவிட்டோவா 6-7 (4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு ...

Read More »

கிழக்கில் மிதக்கும் பாதை!

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மிதக்கும் பாதையை கிழக்கு மாகாண ஆளூநர்   அனுராதா யஹம்பத் நேற்று  (24) ஆரம்பித்து வைத்துள்ளார்.  

Read More »

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 18 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் காயம்!

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 18 பேர் பலியாகினர். 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில் , ”துருக்கியில் எலாஜிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரைஸ் நகரில் வெள்ளிக்கிழமையன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 15 கிலோ மீட்டர் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பின் 35 முறை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக துருக்கி பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் ...

Read More »

சீனர் ஆஸ்திரேலிய எல்லைப்படையால் கைது!

மேற்கு ஆஸ்திரேலியாவில் உணவு பதப்படுத்தும் தொழிலில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டி வந்ததாக 28 வயது சீனரை ஆஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்துள்ளது. போலி நிறுவனங்களை உருவாக்கி தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது போன்று, அந்நிறுவனங்களைக் கொண்டு 4 மில்லியன் டாலர்கள் பணப்பரிமாற்றத்தை இவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டப்பட்டு வரும் நிலையை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டு Battenrun எனும் நடவடிக்கையின் கீழ் இந்நபருக்கு கைதாணை வழங்கப்பட்டு, இந்த சீனர் கைது செய்யப்பட்டுள்ளார். “இந்நடவடிக்கையில் நாங்கள் சுரண்டப்படுபவர்களை குறிவைக்கவில்லை, மாறாக சட்டவிரோதமான இடப்பெயர்வு முறைக்கேட்டில் ஈடுபடும் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்-சுயாதீன விசாரணை வேண்டும்!

காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவு படுத்தப்பட வேண்டும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிடமிருந்து ஒரு வார்த்தை வராதா என்ற ஏக்கத்துடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எமது மக்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் காணாமல் போயுள்ள மக்கள் யுத்தத்தின் ...

Read More »

ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்ளுக்கு என்ன நடந்தது?

யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்களெனில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் வலியுறுத்தினார். காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கருடன் சனிக்கிழமை ;நடந்த சந்திப்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ; தெரிவித்துள்ளதாக அவரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகின்றது. யுத்தத்தில் ...

Read More »