சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலின் பெற்றி பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெறுவதின் ஊடாகவே முழுமையடையும்.
பலவீனமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் ஜனாதிபதிதேர்தலின் வெற்றியும், மக்களின் எதிர்பார்ப்பும் பயனற்றதாகி விடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
கெடபே ராஜபுரராம விகாரையில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாரிய போராட்டத்தின் மத்தியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளோம்.
மக்கள் அரசியல் ரீதியில் சரயான தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். ஜனாதிபதி தேர்தலின் வெற்றி இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலிலே முழுமையடையும்.
மூன்றில் இரண்டுபெரும்பான்மையுடனான அரசாங்கத்தை தோற்றுவிப்பதே எமது பிரதான இலக்காகும்.
அரசியல் மற்றும் அபிவிருத்தி ரீதியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புதிய காலச்சாரத்தையும், திட்ட கொள்கையினையும் ;அறிமுகப்படுத்தியுள்ளார்.
தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடபபட்டுள்ள விடயங்கள் அனைத்தும் 5 ஆண்டுக்களுள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய செயற்படும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்.
ஜனாதிபதி மக்களின் நலன் கருதி பாராளுமன்றத்தை கலைத்து தனக்காக அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் ஊடாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களுக்கு பலமான அரசாங்கத்தின் ஊடாக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை கோருகின்றோம்.
பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசாங்கம் தோற்றுவிக்க முடியாவிடின் ஜனாதிபதி தேர்தலின் வெற்றியும், மக்களின் எதிர்பார்ப்பும் பயனற்றதாகி விடும்.
பெரும்பான்மை ஆதரவு இல்லாமலே ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி இன்று மக்களுக்குதேவையான அடிப்படை அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றார். ஆகவே பொதுத்தேர்தலில் மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal