மேற்கு ஆஸ்திரேலியாவில் உணவு பதப்படுத்தும் தொழிலில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டி வந்ததாக 28 வயது சீனரை ஆஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்துள்ளது.
போலி நிறுவனங்களை உருவாக்கி தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது போன்று, அந்நிறுவனங்களைக் கொண்டு 4 மில்லியன் டாலர்கள் பணப்பரிமாற்றத்தை இவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டப்பட்டு வரும் நிலையை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டு Battenrun எனும் நடவடிக்கையின் கீழ் இந்நபருக்கு கைதாணை வழங்கப்பட்டு, இந்த சீனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“இந்நடவடிக்கையில் நாங்கள் சுரண்டப்படுபவர்களை குறிவைக்கவில்லை, மாறாக சட்டவிரோதமான இடப்பெயர்வு முறைக்கேட்டில் ஈடுபடும் வெளிநாட்டினரை குறிவைத்துள்ளோம்,” எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய எல்லைப்படையின் தளபதியான ஜேம்ஸ் கோப்மேன்.
“வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டி லாபம் சம்பாதிப்பவர்களை சகித்துக் கொள்ள முடியாது,” என அவர் கூறியிருக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal