Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தை பாடுவோம்!-அப்துல்லா மஃறூப்

தமிழ் பேசும் நாம் தமிழ் மொழியில் தான் தேசிய கீதத்தை பாடுவோம் இதனையே தமிழ் பேசும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் இதனை இந் நாட்டு அரசாங்கம் உணரவில்லை அடிப்படை உரிமைகளே இவ்வாறு மறுக்கப்படுகிறது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் அல் ஹிக்மா பாடசாலையில் இன்று (06)இடம் பெற்ற பல்கலைக்கழகம்,கல்வியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை கௌரவித்து மற்றும் பாடசாலைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் ...

Read More »

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி!

மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் ; விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது குறித்த விசாரணையின் போது மாந்தை கோவில் நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்ததற்கு அமைவாக வருகின்ற சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் ; 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி மாலை வரை குறித்த பகுதியில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியை மன்னார் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கியுள்ளது. கடந்த தவணையின் போது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ...

Read More »

ஆஸ்திரேலிய நூலகத்திற்கு தடுப்பு முகாம் அகதியின் நூல் நன்கொடை !

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி, நியூசிலாந்தில் வாழ்ந்து வருபவர் பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதி. பத்திரிகையாளரான இவர், ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், இத்தடுப்பு அனுபவத்தை ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலாக அவர் எழுதியிருந்தார். ஆஸ்திரேலிய அரசின் அகதிகள் கொள்கையை பெரிதும் கேள்விக்கு உள்ளாக்கும் இந்நூலின் 10 பிரதிகளை ...

Read More »

முல்லைத்தீவில் ஒருவர் சுட்டுக்கொலை !

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று (06) அதிகாலை குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் காவல் துறை , உள்நாட்டு துப்பாக்கி மூலம் குறித்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு ...

Read More »

சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை!

சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலிய சமூகத்தின் சுகாதாரமும் நலனும் முதன்மையானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைப் பெற்றவர்கள் தவிர எவரும் சீனாவிலிருந்தோ சீனா வழியாக பயணித்தோ ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது. ஆஸ்திரேலியாவின் இத்தீவிர எல்லைக்கட்டுப்பாட்டு ...

Read More »

‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த வைத்தியரை நோய் தாக்கியது!

கொரோனா’ வைரசை கண்டுபிடித்த வைத்தியரை நோய் தாக்கி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் பரவி வரும் ‘கொரோனா’ வைரசால் இதுவரை 490-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை சீனாவை சேர்ந்த லீ வென்லியாங் என்ற வைத்தியர் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டு பிடித்து விட்டார். சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள மத்திய மருத்துவமனையில் ...

Read More »

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கு எனது நிர்வாகம் உதவும்!

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எனது நிர்வாகம் சீன அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 490 ஆக அதிகரித்துள்ளது. அதிகம் பாதிக்கபட்ட ஹுபே மாகாணத்தில் மேலும் 65 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சீனாவை அச்சுறுத்தும் கரோனா வைரஸுக்கு 20,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா உதவும் ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்!

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “காட்டுத் தீ நமக்கு கருப்புக் கோடைகாலம். இந்தத் தீ இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆபத்து இன்னும் பல இடங்களில் நமக்கு முன்னால் உள்ளது. இந்தக் காட்டுத் தீயில் பலியானவர்களைக் கவுரவிப்பதற்காக நாம் ஒன்று கூடி இருக்கிறோம். தொடர்ந்து இந்த கருப்புக் கோடை காலத்திலிருந்து நாங்கள் பாடம் கற்றுக் ...

Read More »

பொதுமன்னிப்பில் 17 கைதிகள் யாழில் விடுதலை!

சிறிலங்காவின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கட்டிருந்த தண்டனைக் கைதிகளான பெண் உள்பட 17 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர். நாடுமுழுவதும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் திருட்டு,நம்பிக்கை மோசடி மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற சிறிய குற்றங்களின் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களாகும். வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்கள், கொள்ளை மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பெரிய குற்றங்களுக்காக ...

Read More »

ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது!

எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. எந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம் என்றார். ​சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 72ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ கால ...

Read More »