மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து சிலி நாட்டில் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் சாண்டியாகோவில் இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி மெட்ரோ ரயில் கட்டணத்தை 800 முதல் 830 சிலி பெசோக்கள் வரை அரசாங்கம் உயர்த்தியது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. கடந்த வெள்ளிக்கிழமை சாண்டியாகோ மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க சாண்டியாகோ மற்றும் சாகபுகோ மாகாணங்களிலும், புவென்ட் ஆல்டோ ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடிவு!
உள்நாட்டு யுத்தம் காரணமாகக் காணாமல் போனவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களுக்கு, மாதாந்தம் 6,000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தெரிவித்தார். திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற விசேட தேவையுடையோர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்படி தெரிவித்தார். இதற்கான சுற்றுநிருபம் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், காணாமல்போனவர்களுடைய புகைப்படத்துடன் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ...
Read More »மாணவி படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
சுழிபுரம் மாணவி படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்கும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் மாலை சடலமாக மீட்கப்பட்டார். பாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது. ...
Read More »வரலாறு படைத்த உலகின் முதல் மகளிர் விண்வெளி நடைக்குழு!
பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளியில் நடந்து பழுதடைந்த பேட்டரி சார்ஜரை பழுது பார்த்த வகையில் உலகின் முதல் மகளிர் விண்வெளி நடைக்குழு வரலாறு படைத்தது. நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெய்ர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து ஒவ்வொருவராக விண்வெளியில் மிதந்து பழுதடைந்த மின்சார நெட்வொர்க்கை சரிசெய்த நிகழ்வு அரைநூற்றாண்டில் முதன்முதலாக ஆண் துணையின்றி விண்வெளி நடை நிகழ்வாகும். அமெரிக்காவின் முதல் பெண் விண்வெளி நடை வீராங்கனை கேத்தி சல்லிவான் இந்தச் சாதனையைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். நாசா விஞ்ஞானிகள், ...
Read More »ஆஸி.யில் இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற சிறிலங்கன் பிரஜை!!
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பிரஜையொருவர் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட்டில் இடம்பெற்ற 17 ஆவது அவுஸ்திரேலியன் மாஸ்ரஸ் போட்டியில் கலந்துகொண்ட அவர் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சிிறிலங்கா கடற்படையின் ஓய்வு பெற்ற முன்னாள் தளபதியான ருவான் போல் என்பவர் ஆவார். இவர் 220 கிலாகிராம் எடைப் பிரிவின் பளுதூக்கல் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவுஸ்திரேலியன் மாஸ்ரஸ் தொடராது ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் இம்முறை நடைபெற்று முடிந்த 17 ...
Read More »21/4 தற்கொலை தாக்குதல்கள் ; ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு 75 முறைப்பாடு
21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையபப்டுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு இதுவரை 75 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவூடாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விசாரணைகளுக்கு பொறுப்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் வெலிக்கன்ன நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு சாட்சி விசாரணைகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள ...
Read More »ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன் , நளினி , முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையின் நிலைப்பாட்டை நிராகரித்துள்ள ஆளுனர் ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தெரிவித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை என அதிகாரபூர்வமற்ற வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தன்னுடைய முடிவு குறித்து அரசுக்கு ஆளுனர் எழுத்துபூர்வமாக எதையும் இன்னும் வழங்கவில்லை என்பது ...
Read More »வெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது!
வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தின் நிர்வாகம், மற்றும் பூசகருக்கு எதிராக தொல் பொருட்திணைக்களம் வவுனியா நீதி மன்றில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக ஆலயத்தின் நிர்வாகம், மற்றும் பூசகருக்கு அடுத்த மாதம் 29 ஆம் திகதி வழக்கு விசாரணைகளுக்காக வவுனியா நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களின் ...
Read More »சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி!
சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பேருந்து விபத்தில் உயிரிழந்தனர்.சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. மதினா அருகே பேருந்து விபத்தில் சிக்கியதில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர். ஹஜ்ரா சாலையில் மற்றொரு வாகனத்துடன் பேருந்து மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Read More »ஆஸ்திரேலியாவில் வியட்நாம் பெண் நாடுகடத்தல்!
ஆஸ்திரேலியாவில் நோயை பரப்பும் உணவு பொருளை எடுத்து வந்ததாக கூறி வியட்நாம் பெண்ணை உடனடியாக அதிகாரிகள் நாடுகடத்தினர். தென்கொரியா, கிழக்கு திமோர் உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதனால் பிற ஆசிய நாடுகள் தங்கள் நாட்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அரசு இந்த விவகாரத்தில் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பிற நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே நாட்டில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal