கொட்டுமுரசு

ஆசனப்பகிர்வு எவ்வாறு கணிப்பிடப்பிடும்?

நடந்துமுடிந்த 9வது பாராளுமன்றத்தேர்தலில் மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் வெற்றி பெறும் கட்சிகளுக்கு ஆசனங்கள் பகிரப்படுவது எவ்வாறு? என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 7 ஆசனங்களை கொண்ட குறித்த ஒரு மாவட்டத்தில் A,B,C,D,E,F,G,H, ஆகிய கட்சிகள் போட்டியிட்டு அக்கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் பின்வருமாறு மாவட்டத்தில் அளிக்கப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகள் 400000 A- 140,000 B- 110,000 C ; 52,500 D ; 30,000 E ; 27,500 F 17,500 G 12,500 H 10,000 தற்போது முதலாவது ஆசனம் ...

Read More »

ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை! 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில்

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ;3652 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்களைச் சேர்ந்த ; 3800 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர். கொழும்பு , கம்பஹா , களுத்துறை , கண்டி , மாத்தளை, நுவரெலியா , காலி , ...

Read More »

‘எமக்கு ஆணை தாருங்கள்; செய்து காட்டுகின்றோம்’

“கடந்த காலங்களில், ‘அவர்களுக்கு’ வழங்கிய மக்கள் ஆணையை, இம்முறை எமக்கு வழங்கிப் பாருங்கள்; இந்த ஐந்து வருடங்களில் உங்களுக்குச் சரிவரவில்லை என்றால், நிராகரியுங்கள்; ஆனால், எதிர்வரும் ஐந்து வருடங்களை, நாங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்று பார்த்து, மக்கள் எங்களுடன் வருவார்கள். நீங்கள் தொடர்ந்து வாக்களித்தவர்கள், எதையும் செய்யாமல் மீண்டும் வருகின்றனர்; வாக்குக் கேட்கின்றனர். அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில், மக்கள் தீர்மானித்துச் சரியானவர்களைத் தெரிவு செய்து, நாடாளுமன்றம் அனுப்பி வைக்கவேண்டும்.  இதுதான் முறைமையாகும்” என்று, தமிழ்த் தேசிய  மக்கள் முன்னனியின் சார்பில் யாழ்ப்பாணத் ...

Read More »

எதிர்காலத்துக்கு வாக்களித்தல்?

தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.” – அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க  எழுத்தாளர்    கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியைக் கோரவில்லை. இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டால்தான் பரிகார நீதியைக் கேட்கலாம். பரிகார நீதி என்றால் என்ன? இனப்படுகொலைக்கு எதிரான நீதியேது. இனப்பிரச்சினைக்கான பரிகாரம் அல்லது தீர்வு எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான்  என்ற பொருளில் அது பரிகார நீதி என்று அழைக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பேச்சாளர் இனப்படுகொலை என்பதனை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டும் ...

Read More »

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னும் நம் விட்ட இடத்திலேயே நிற்கின்றோம் என்று கூடக் கூற முடியாத அவலம் எமக்கு ஏற்பட்டுள்ளது. பல தேர்தல்களைக் கடந்து வந்திருந்தாலும், அத்தேர்தல்களில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சரியாக எம் மக்களின் நலன் சார்ந்து செயல்பட்டார்களா? பதிலானது இல்லை என்றுதான் கூற வல்ல தகமைகளை அவர்கள் கொண்டுள்ளனர். ஆயுதப் போராட்டத்தினால் முன்னகர்த்தப்பட்டு சர்வதேச மயப்படுத்தப்பட்ட சுயநிர்ண உரிமையுடன் கூடிய சுயாட்சி வரைபை விட்ட இடத்தில் இருந்து தொடர்வதை விடுத்து, பல சக்திகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக ...

Read More »

அறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம்

பொதுவாக ஒரு தொழிலை, ஒருவர் மேற்கொள்வதாயின் அது தொடர்பிலான கல்வி அறிவு, ஆளுமை போன்றவை முதன்மையானவை. உதாரணமாக, மருத்துவராகப் பணியாற்றுவதாயின் அது தொடர்பிலான மருத்துவக் கற்கை நெறியைப் பயின்று பூர்த்தி செய்திருப்பதுடன் நோயாளிகள், தாதியருடன் நீடித்த சுமூக உறவைப் பேணும் வகையிலான ஆளுமையைக் கொண்டிருக்க வேண்டும். அண்ணளவாக 40 ஆண்டுகளுக்கு முன்பு, சட்டவல்லுநர்களே நமதுநாட்டில் அரசியல் செய்தார்கள். ஆனால் இன்று, கல்வித் துறை சார்ந்த புலமை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, எல்லோரும் செய்யக் கூடிய தொழிலாக அரசியல் மாறி விட்டது. இலங்கை நாடாளுமன்றில் உள்ள மொத்த ...

Read More »

தமிழ் மக்கள் மீது கொடூரமான கொலைகள் நடாத்தப்பட்டது! -மணிவண்ணன்

இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை என கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரலை பலப்படுத்துவதாக உள்ளது. யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே சாட்சியங்களே தான். ஆனால் யுத்த குற்றம் என்பதை தாண்டி இனப்படுகொலை என்பதை நிரூபிக்க தேவையான விடயமாக நோக்கத்தை உறுதிப்படுத்தல் உள்ளது இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் செயற்படுவதனை கடந்த கால இனவன்முறை வரலாற்றை எடுத்து கூறினாலே சாட்சிகள் போதுமானதாகும். சாட்சியங்கள் இல்லை என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ...

Read More »

தமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்?

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக்  கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான் நம்புவதாகத்  தெரிகிறது. உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டம் சுயேட்சைக் குழு தனக்கு 3 ஆசனங்கள் கிடைக்கும் என்று கூறுகிறது. கிளிநொச்சியில் சந்திரகுமாரின் ஆதரவாளர்களும் அங்கே ஒரு மாற்றம் ஏற்படும் என்று முகநூலில் எழுதுகிறார்கள். ஐந்கரநேசனும் தான் வெல்ல முடியும் என்று நம்புகிறார். ஒரு கூர்மையான அவதானி  பகிடியாகச்  சொன்னார் ...

Read More »

மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம்

யுத்தம் முடிந்த பிற்பாடு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் மூடி விடுவதற்கு சர்வதேச சமூகம் முனையவில்லை. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்ற ஒன்றை சொல்லிக் கொண்டு அதற்குப் பின்னர் எல்லாமே நல்லபடியாக நடைபெறுகின்றது என்று சொல்ல முற்பட்டாலும் கூட நாங்களும் எங்கள் மக்களும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழக மக்களும் இணைந்து இங்கே ஒரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எங்களுடைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்டிருக்கின்றது. இதிலே யுத்தக் குற்றங்களும், இனப்படுகொலைக் குற்றங்களும் நடைபெற்றிருக்கின்றன. இவை சர்வதேசத்தின் மூலம் விசாரிக்கப்பட வேண்டும். என்ற ...

Read More »

அஸ்தமித்துப்போன ஆர்வம்

வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார். இது போன்றதொரு பொதுத் தேர்தல், 21.07.1977ஆம் ஆண்டு நடைபெற்றபோது,  மொத்தமாக நாடாளுமன்றத்தில் உள்ள 168 ஆசனங்களில், 140 ஆசனங்கள் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வசமாகியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வெறும் எட்டு ஆசனங்களுடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, 18 ஆசனங்களைக் கைப்பற்றி, எதிர்க்கட்சியாகியது. எதிர்க்கட்சித் தலைவராக அ. ...

Read More »