கொட்டுமுரசு

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கையாளும் கொரோனாத் தொற்று தொடர்பான அணுகுமுறை

அதியுச்சமான சவால்களை கொண்டதாகவே 2020ம் ஆண்டு அமைந்துவிட்டது. அதற்குக் கொரோனாப் பேரிடர் ஆரம்பப் புள்ளியாகியது. இதோ முடிவுக்கு வருகின்றது. அதோ முடிவு தெரிகின்றது என்னும் கொரோனா குறித்த கணிப்புகள் வந்தவழியே திரும்பி ஓடிவிட்டன. தொற்று ஆரம்பமாகி ஒருவருடம் பூர்த்தியாகின்றது. கொரோனாவின் முடிவு குறித்த நம்பிக்கை, நாற்றுமேடையிலிருந்து வெளியே வரவே திணறுகின்றது. சமத்துவம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் காலத்தில், கொரோனாவின் சமத்துவம் வியப்பைத் தருகின்றது. நீதிமன்றங்களிலே கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு நிற்கும் நீதிதேவதையைப் பார்த்திருப்பீர்கள். அஃது, சமன்செய்து சீர்தூக்கி வழங்கப்படுகின்ற நீதிக்கு அடையாளமாகச் ...

Read More »

வீணடிக்கப்பட்ட 20 நாட்கள்

”தமிழ் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில் பேசினால் அவர்கள், புலிப் பயங்கரவாதிகள், பிரபாகரன்கள். முஸ்லிம் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில், மதம் தொடர்பில் பேசினால் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகள், சஹ்ரான்கள்” தாயகன் கொரோனா வைரஸின் ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் பொதுஜன பெரமுன தலைமையிலான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த வியாழக்கிழமை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்களும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வரவு ...

Read More »

ஓய்வூதியர்களின் நீதி ?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நினைவுகளைத் தொகுத்து ஒரு நூலை எழுதியிருக்கிறார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்த நூலில் அவர் இலங்கைத் தீவில் இடம்பெற்றது ethnic slaughter அதாவது இன சங்காரம் என்று கூறியிருக்கிறார். ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவர் இனப்படுகொலை என்று அதை அழைத்திருப்பதாக்க கருதுவது தெரிகிறது. ஆனால் அது இனப்படுகொலை என்ற அரசியல் அடர்த்தி மிக்க ஒரு வார்த்தயை விட செறிவு குறைந்த வார்த்தைதான். சங்காரம் என்பது தொகையாக உயிர்களை அழிப்பது. அதன் வேர்ச்சொல் பழைய நோர்வீஜிய மொழியிலிருந்து ...

Read More »

கஜனின் உரை: ஓரு இனமாகத் திரள்வது?

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார்  ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் ...

Read More »

குற்றவியல் நீதிமன்றுக்கு சிறிலங்கா பரிந்துரை செய்ய வேண்டும்

சிறிலங்கா அரசின் போர்க்குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது, மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தல் தொடர்பாகவும் ஐ.நா.அங்கீகாரம் பெற்ற அமைப்பான “அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட்” (The “Alliance Creative Community Project) கனடாவின் வெளியுறவு அமைச்சருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 10 கொண்டாடப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், டிசம்பர் 9 ஆம் தேதி நிகழும் சர்வதேச இனப்படுகொலை தினத்தையும் முன்னிட்டே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் போர் குற்றச் சட்டத்தின் கீழ், நாட்டிற்குள் நுழையும் ...

Read More »

சமூகத்துக்காகப் பேச வேண்டியது யார்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன், நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, ”முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை, அரசாங்கத்துக்குப் பெரும் வெட்கக்கேடான விடயம்’ எனச் சுட்டிக்காட்டியமை, முஸ்லிம் வெகுஜனங்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி இருக்கின்றது. கணிசமானோர் சாணக்கியன் எம்.பியின் இந்தச் செயற்பாட்டை வரவேற்றிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, முஸ்லிம் அரசியல்வாதிகளின் உரைகளின் கனதியும் அவரது உரையுடன் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது. சாணக்கிய அரசியல் தெரிந்த பெரும் தலைமைகள், அரசியல் ஞானிகள், வித்தகர்கள் போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படும் கடந்தகால, நிகழ்கால முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காத்திரமான உரைகளை நாடாளுமன்றத்தில் நிகழ்த்துவதற்குத் ...

Read More »

அமெரிக்க, இந்திய அணுகுமுறையும் ஈழத் தமிழர்களும்

2009ஆம் ஆண்டு இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் போட்டியைச் சாதமாகப் பயன்படுத்தி அப்போதைய இலங்கை இராணுவத்தின் பலவீனங்களை இந்த நாடுகளின் இராணுவ உதவிகள், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இலங்கை எவ்வாறு ஈழப் போரை இல்லாதொழித்ததோ, அதேபோன்று 2020இல் ஏற்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரப் பலவீனங்களை இந்தப் புவிசார் அரசியலின் போட்டிகளைப் பயன்படுத்தி இலங்கை மீட்டெடுக்கும் வாய்ப்புகளே அதிகம். இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அரசு அமெரிக்க, இந்திய நலன்களுக்கு ஏற்றவாறு செயற்பட வேண்டுமென்ற ஆழமான கடினமாக பரிந்துரை ஒன்றை இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் ...

Read More »

அகதிகளின் வழக்குளை விசாரிக்க ஆஸ்திரேலிய நீதி மன்றம்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் ஆஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. இது தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் முறையீட்டில், புலம்பெயர்வு சட்டத்தின் அடிப்படையில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்பான விவகாரங்களை ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. இம்முறையீடு தொடர்ந்து ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், புலம்பெயர்வு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு மூலம் கீழ் நீதிமன்றங்களின் அதிகாரத்தை பறிக்க இயலாது ...

Read More »

வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட மூன்று இடங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன!

வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட கொழும்பில் மூன்று இடங்களை இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்வேல் ஐலன்ட் பகுதியில் உள்ள ஹ_னுப்பிட்டடிய கிராமசேவையாளர் பிரிவினை இன்று மாலை ஐநது மணி முதல் முடக்கவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கருவாத்தோட்டத்தின் 60வத்தை வெள்ளவத்தையின் கோகிலா வீதி ஆகியவற்றையும் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Read More »

நினைவு கூர்வதற்கான வெளி?

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதனால் அதன் தியாகிகளை நினைவு  நினைவுகூர்வது தடை செய்யப்படுகிறது என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த அடிப்படையிலேயே கடந்த திலீபன் நினைவு நாள் மாவீரர் நாள் என்பவற்றைப் பொதுவெளியில் கொண்டாடத் தடைகள் விதிக்கப்பட்டன. இது விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது மனோ கணேசன் சுட்டிக் காட்டியது போல புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்கான சட்ட முயற்சிகளில் இறங்குவது. இரண்டாவது நினைவு கூர்தலுக்கான கூட்டு உரிமைக்காக மக்கள் மயப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பது. ...

Read More »