கொட்டுமுரசு

அமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா?

இறு­திக்­கட்ட யுத்­தத்­தின் ­போது இழைக்­கப்­பட்ட மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்கு  இலங்கை அர­சாங்கம் பொறுப்புக் கூறும் விட­யத்தில் இந்த வாரம் சர்­வ­தேச அளவில் ஒரு தளம்பல் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இருந்து வில­கு­வ­தாக அமெ­ரிக்கா அறி­வித்­தி­ருப்­ப­தை­ய­டுத்தே சர்­வ­தேச அள­வி­லான இந்த சோர்வு நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. இது அர­சுக்கு சாத­க­மா­னது. இதனை அரச தரப்பில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு, அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்க முடி­யாமல் தவித்து கொண்­டி­ருக்­கின்ற தமிழ் மக்­க­ளுக்கு இது பாத­க­மா­னது. ஆபத்­தா­ன­தும் ­கூட. பொறுப்புக்கூறும் ...

Read More »

கல்லூரி பேராசிரியை ஆகவேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு!

ஒரு பேராசிரியையின் கதை “கல்லூரி பேராசிரியை ஆகவேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. சிறு வயதில் என் பள்ளி ஆசிரியயையிடம் இருந்து நான் பெற்ற அந்த கனவும், ஈர்ப்பும் வாழ்நாளில் எந்த தருணத்திலும் குறைந்துவிடவில்லை. பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த போது, பலரும் என்ஜினியரிங் சேர சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், என் கனவு மீது நம்பிக்கை கொண்டிருந்த என் அப்பா தான் மற்றவர் பேச்சை எல்லாம் கேட்காமல் நான் ஆசிரியர் பணியில் சேர ஊக்கம் அளித்தார். எனக்கு சட்டம் மீது ...

Read More »

“ஒரு பெண் போராட்டத்தில் கலந்துகொள்வதே போராட்டம்தான்!”

“அநாதை விடுதியிலதான் தங்கிப் படிச்சேன். அங்கயிருந்து கூப்பிடும் தொலைவுலதான் என் வீடு இருந்தது” – முரணோடு பேசத் தொடங்குகிறார் லட்சுமி அம்மா. எளிய மனிதர்களின் உரிமைகளுக்காக 40 வருடங்களாக வீதிகளில்  செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூத்த போராளி. தஞ்சாவூர் அருகே வல்லம் கிராமத்தில் பிறந்து, வேலை செய்யுமிடத்தில் அறிமுகமான தொழிற்சங்கத்தை இறுகப்பிடித்துக்கொண்டவர். அது அவரை முழுநேர அரசியலில் இறக்கிவிட்டது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசனின் வாழ்க்கைத் துணையானது,  லட்சுமி அம்மாளின் வாழ்க்கையைப் போராட்டக் களங்களுடன் இன்னும் பிணைத்தது. “பெண்களைப் படிக்கவைக்க ஆர்வம் காட்டாத காலம் அது. ஆனா, ...

Read More »

அச்சு நூல்கள் அழியாது..! ஏன்?

உலகெங்கும் பதிப்புத் துறை சார்ந்த கூடுகைகளில், “விரைவில் அச்சு நூல் மறைந்து விடும், இனி மின்னூல்கள் மட்டுமே தழைக்கும்” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. பெரும் பதிப்பாளர்களை நோக்கிப் பல வரலாற்றுத் தீர்ப்புகளை வீசினர் தொழில்நுட்பக் கற்றுக்குட்டிகள். பதிப்புலகுக்குப் பெரும் பங்களித்த ஆளுமைகள் பலர் மனங்கலங்கி நின்றிருப்பதைக் கண்டிருக்கிறேன். தொழில்நுட்பத்தால் மட்டும் வரலாறு தீர்மானிக்கப்படுவதில்லை. தொழில்நுட்பத் தின் தாக்கத்தை மறுப்பது மூடத்தனம். ஆனால், தொழில்நுட்பம் பண்பாட்டின் செல்வாக்குக்கு உட்பட்டது என்பதை உணரா திருப்பது அறியாமை. அச்சு இயந்திரங்கள் வந்ததும் ஓலைச்சுவடி ...

Read More »

மக்களுக்கான எதிர்பார்ப்பை முதல்வர் விக்கி பூர்த்தி செய்தாரா?

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது, உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலம், தமிழர்களின் அரசியல் உரிமையை பெற்றுவிடலாம் என நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். ஏமாற்றங்களின் விளைவாக உருவான திருப்புமுனை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்றுத்தலைமையாக முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணிக்கு மக்களின் ஆதரவாக பெருகியது. தமிழ் மக்கள் பேரவை என்றும் அதன் தொடர்ச்சியாக எழுகதமிழ் என்றும், முதல்வருக்கு எதிராக அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தமிழரசுக் கட்சியும் ஈபிடிபியும் ...

Read More »

“என் கோபத்துக்குக்கூட அவர்கள் தகுதியற்றவர்கள்!” கெளரி லங்கேஷின் தங்கை கவிதா

உலகம் முழுவதும் இருக்கின்ற பத்திரிகையாளர்களுக்கு 2017ம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டு எனக் கூறலாம். கடந்த ஆண்டு மட்டும் , தங்களின் வேலைக்   காரணமாக , உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை …46! அதில் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் மூன்று பேர் ..கர்நாடகாவைச் சேர்ந்த  கெளரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் உட்பட! 2017ம் ஆண்டு,  செப்டம்பர்  5ம் தேதி, பெங்களூரில், காந்தி நகரிலுள்ள தன் அலுவலகத்திலிருந்து , ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள தன்  வீட்டிற்கு திரும்பியபோது, மூன்று  மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் கெளரி லங்கேஷ். இந்த கொலை வழக்கில், ...

Read More »

பேச்சுவார்த்தைகளால் தீர்க்க முடியாததை துப்பாக்கிகளால் நிச்சயம் தீர்க்க முடியாது!

ஒரு பத்திரிகையாளரின் இறுதிச் சடங்கில் ஏன் இத்தனை பேர் கூடவேண்டும் என்கிற கேள்வி அந்தப் புகைப்படங்களைப் பார்த்ததும் தனிச்சையாக எழுந்தது. கொள்கைகளால் பிரிவுபட்டிருந்த காஷ்மீரின் அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் பலத்த மழைக்கு இடையே சையது சுஜாத் புகாரி குடும்பத்தின் கல்லறைத் தோட்டத்தில் அவரை நல்லடக்கம் செய்யக் கூடியிருந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தங்களின் அமைதியான வாழ்வுக்காக போராடியவரை இறுதியாகப் பார்க்க வந்ததில் ஆச்சரியம் இல்லைதான். சகபத்திரிகையாளர்களே மக்களுக்கான சுஜாத்தின் பங்களிப்பை விவரிக்கிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகத் ...

Read More »

ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பலன் யாருக்கு?

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்கு பிறகு நாடு திரும்பியதும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ட்விட்டரில் இவ்வாறு பதிவிடுகிறார் ‘நம்முடைய மிகப்பெரிய மற்றும் மிக ஆபத்தான பிரச்சினை வட கொரியா என்று அதிபர் ஒபாமா சொன்னார். இனிமேல் அப்படி இல்லை. இன்றிரவு நிம்மதியாக உறங்குங்கள்’. ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டான் என்று ஒரு சொலவடை நம் ஊரில் உண்டு. அதுபோல, கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்குப் பிறகு தனது பழைய நடவடிக்கைகளை மறக்கச் செய்து, ஒரே இரவில் ஒபாமாவின் ...

Read More »

அந்நியர்கள் பேராசைக்காரர்கள் எங்கள் நிலத்தைவிட்டுப் போகவேண்டும்!எங்கள் நிலம் எங்களுக்கே!

சிலியின் காடுகளைப் (Chilean forests) பற்றித் தெரியாதவன், இந்தப் பூமியை நன்குணர்ந்தவன் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்” – என்கிறார் சிலியன் கவிஞர் பாப்லோ நெருடா. அந்தப் பழைய கவிஞர் 50 வருடங்கள் கடந்து வந்து அவர் உலவித்திரிந்த சிலியின் மேற்குக் காடுகளைப் பார்த்தால் “நாம வேற எங்கேயோ இருக்கிறோம்” எனக் குழம்பிவிடுவார். அந்த அளவிற்கு அந்த வனப்பகுதி முழுவதும் மாற்றமடைந்து தற்போது முழுக்கப் பைன் மற்றும் யூகலிப்டஸ் மரங்களால் நிரம்பியுள்ளது.  சிலியன் அரசாங்கமும், சில மேல்நாட்டு நிறுவனங்களும் அந்நாட்டின் ஒரு பகுதியான அரகானியாவில் ( ...

Read More »

அப்பாவாக இருப்பது எவ்வளவு சவாலானது தெரியுமா?

அப்பா… இந்த வார்த்தைக்குக் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் கண்டிப்பே அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். ஆனால், அது பிள்ளைகளின் பார்வையே! உண்மையில் அவர் மனசு என்ன?! பிள்ளைகளின் பார்வையில் தங்களின் ஒவ்வொரு வயதிலும் அப்பா தங்களுக்கு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைச் சொல்லும் குட்டிக்கதை ஒன்று உண்டு! 5 வயது – ‘என் சூப்பர் ஹீரோ!’ 10 வயது – ‘வீட்டில கொஞ்சம் கத்துவார்… மத்தபடி நல்லவர்தான்!’ 15 வயது – ‘எப்போ பார்த்தாலும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கார்… சொல்லிவைம்மா அவர்கிட்ட!’ 20 வயது – ...

Read More »