அமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா?

இறு­திக்­கட்ட யுத்­தத்­தின் ­போது இழைக்­கப்­பட்ட மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்கு  இலங்கை அர­சாங்கம் பொறுப்புக் கூறும் விட­யத்தில் இந்த வாரம் சர்­வ­தேச அளவில் ஒரு தளம்பல் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இருந்து வில­கு­வ­தாக அமெ­ரிக்கா அறி­வித்­தி­ருப்­ப­தை­ய­டுத்தே சர்­வ­தேச அள­வி­லான இந்த சோர்வு நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

இது அர­சுக்கு சாத­க­மா­னது. இதனை அரச தரப்பில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு, அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்க முடி­யாமல் தவித்து கொண்­டி­ருக்­கின்ற தமிழ் மக்­க­ளுக்கு இது பாத­க­மா­னது. ஆபத்­தா­ன­தும் ­கூட.

பொறுப்புக்கூறும் விட­யத்தில், அர­சுக்கு எதி­ராக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அடுத்­த­டுத்து பிரே­ர­ணை­களை கொண்டு வரு­வதில் அமெ­ரிக்­காவே முழு­மை­யா­கவும், முனைப்­போடும் முன் நின்று செயற்­பட்­டி­ருந்­தது. இந்த விட­யத்தில் அவ்­வாறு முக்­கி­ய­மான பங்­கேற்­றி­ருந்த அமெ­ரிக்கா  ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் உறுப்­பு­ரிமை நிலையில் இருந்து வில­கு­வ­தாக வெளி­வந்­துள்ள அறி­வித்தல் இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஒரு மகிழ்ச்­சி­ய­ளித்­தி­ருக்­கின்­றது.

பொறுப்புக்கூறும் விட­யத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ள போதிலும், அவற்றை முன்­னெ­டுப்­ப­தற்கு பதி­லாக, அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­கின்ற சர்­வ­தேச பங்­கா­ளர்­க­ளி­டமே காலஅவ­கா­சத்தை பெறு­வ­தி­லேயே இலங்கை அரசு இது­வ­ரையில் முன்­னேற்றம் கண்டு வந்­துள்­ளது. யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்­ன­ரான கடந்த ஒன்­பது வரு­டங்­க­ளிலும், பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டில் இருந்து மேலும் விலகி செல்­வ­தற்கு இந்த நிலைமை பேரு­தவி புரிந்­தி­ருப்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும்.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இருந்து அமெ­ரிக்கா வில­கு­வதன் ஊடாக பொறுப்புக்கூறும் விட­யத்தில் இனிமேல் அழுத்­தங்கள் குறை­வ­டையும். அதனால் இலங்­கைக்கு நன்மை கிடைக்கும்  என்று திருப்தி கலந்த மகிழ்ச்சி தொனியில் அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மா­கிய ராஜித சேனா­ரத்ன கருத்து வெளி­யி­ட­டுள்ளார். இது பொறுப்­புக்­களை தட்­டிக் ­க­ழிக்­கின்ற அர­சாங்­கத்தின் போக்கை மேலும் உறுதி செய்­வ­தாக அமைந்­துள்­ளது. அத்­துடன், பொறுப்பு கூறு­கின்ற கட­மை­களில் இருந்து விலகி செல்­லு­கின்ற அர­சாங்­கத்தின் போக்­கிற்கு, அமெ­ரிக்­காவின் இந்த நட­வ­டிக்கை உர­ம­ளித்­தி­ருப்­ப­தையே அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவின் கூற்று வெளிப்­ப­டுத்தி இருக்­கின்­றது.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இருந்து அமெ­ரிக்கா வில­கு­வதன் ஊடாக மட்­டுமே பொறுப்புக்கூறும் விட­யத்தில் நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது என்று கூறு­வ­தற்­கில்லை. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்ற செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று இலங்­கைக்கு எதி­ராக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் பிரே­ர­ணை­களை அடுத்­த­டுத்து கொண்டு வந்த அமெ­ரிக்கா, இது வரை­யி­லான காலப்­ப­கு­தியில், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணை­களை நிறை­வேற்ற வேண்டும் என்று உரிய முறையில் இலங்கை அர­சுக்கு அழுத்தம் கொடுக்­க­வில்லை என்­பது கவ­னத்திற் கொள்ள வேண்­டிய விட­ய­மாகும்.

இலங்­கையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­ வ­ரப்­பட்ட சூட்­டோடு சூடாக, அங்கு நேர­டி­யாக விஜயம் செய்த அப்­போ­தைய ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன், பத­வியில் இருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ச­விடம் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்ற செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். இரு­வ­ருக்கும் இடையில் கொழும்பில் நடை­பெற்ற சந்­திப்­பின் போது இது­ வி­ட­யத்தில் எட்­டப்­பட்­டி­ருந்த ஓர் இணக்­கப்­பாட்டின் இணை அறிக்­கை­யொன்றும் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு முதல் இலங்­கையின் பொறுப்புக் கூறும் விடயம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் முக்­கிய இடம் பிடித்­தி­ருந்­தது. அரசு பொறுப்புக்கூற வேண்டும் என்ற சர்­வ­தேச அழுத்­தத்தை, அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடு­களின் பேரா­த­ர­வுடன் பிசு பிசுக்க செய்­தி­ருந்தார். ஆயினும் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30/1 என்ற இலக்கம் கொண்ட பிரே­ர­ணையே இலங்கை அர­சாங்கத்தின் மீது கூடிய அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­ப­தா­கவும், மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் மற்றும் போர்க்­குற்ற செயற்­பா­டு­க­ளுக்கு நிலை­மா­று­ கால நீதி பொறி­மு­றை­களின் ஊடாக பொறுப்புக் கூற வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­வ­தா­கவும் அமைந்­தி­ருந்­தது. அதனை தொடர்ந்து நிறை­வேற்­றப்­பட்ட 34/1 ஆம் இலக்க பிரே­ரணை முன்­னைய பிரே­ர­ணைக்கு வலு சேர்த்­தி­ருந்­தது.

பக்­க­ச்சார்­பான சாக்­கடை

அமெ­ரிக்கா ஐ.நா. மனித உரி­மைப் பேர­வையில் கொண்டு வந்த பிரே­ர­ணைகள் பொறுப்புக்கூறும் கடப்­பாட்டில்; சர்­வ­தேச அளவில் அர­சாங்­கத்தை இறுக்­க­மாக பிணைத்­தி­ருந்­தது. இருப்­பினும் அந்த பிணைப்பில் இருந்து விடு­ப­டு­வ­தற்­காக பல்­வேறு கார­ணங்­களை அர­சாங்கம் கற்­பிப்­ப­திலும், அவற்றை கொண்டு தனது நிலைப்­பாட்டை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கும் தவ­ற­வில்லை.

பயங்­க­ரவா­தி­க­ளான விடு­த­லைப்­பு­லி­களின் பிடியில் சிக்­கி­யி­ருந்த தமிழ் மக்­களை விடு­விப்­ப­தற்­காக மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­யா­கவே இரா­ணுவம் யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­தது என்று அர­சாங்கம் தன்­னிலை விளக்­க­ம­ளித்து வந்­தது. அத்­துடன் அர­சாங்கம் எந்தவொரு கட்­டத்­திலும் மனித உரி­மைகளை மீற­வில்லை. விடு­த­லைப்­பு­லி­களே மனித உரி­மை­க­ளையும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­க­ளையும் மீறி பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள் என்றும் அரசு பிர­சாரம் செய்து வந்­தது.

இந்த நிலையில், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­திலும், யுத்தம் மூள்­வ­தற்கு அடிப்­படை பிரச்­சி­னை­யா­கிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­திலும் சர்­வ­தேசம் தமி­ழர்­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­பட்டு வரு­கின்­றது என்றும், அந்த வகையில் முன்­னிலை செயற்­பா­டு­களை கொண்ட அமெ­ரிக்­காவின் ஆத­ரவை தாங்கள் பற்­றிப்­பி­டித்து செயற்­பட்டு வரு­கின்றோம் என்றும் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், கூட்­ட­மைப்பின் சர்­வ­தேச விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வரும், பேச்­சா­ள­ரு­மா­கிய சுமந்­தி­ரனும் உறு­தி­யாக தமிழ் மக்­க­ளிடம் கூறி வந்­தார்கள். இந்த வகையில் தாங்கள் இரா­ஜ­தந்­திர ரீதி­யான நகர்­வு­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் சார்பில் பிர­சார நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. கூட்­ட­மைப்பு தலை­மையின் இந்த இரா­ஜ­தந்­திர செயற்­பா­டுகள் தமி­ழ­ரசு கட்­சியின் சாதனை முயற்­சி­யாக கூட அர­சியல் ரீதி­யான பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. இன்னும் அந்த பிர­சாரம் தொடர்­கின்­றது.

இத்­த­கைய ஒரு சூழ­லில் தான் அமெ­ரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. அவ்­வாறு வில­கு­வ­தற்­கு­ரிய கார­ணங்­க­ளையும் அது வெளி­யிட தவ­ற­வில்லை.

மனித உரி­மைகளை மீறு­கின்ற மோச­டி­யா­ளர்­களை பாது­காத்து செயற்­ப­டு­கின்ற அர­சியல் ரீதி­யான பக்­க­ச்சார்­புள்ள ஒரு சாக்­கடை என்று ஐ.நா. மன்­றத்தை ஐ.நா­.வுக்­கான அமெ­ரிக்க தூதுவர் நிக்கி ஹேலே அம்­மையார் வர்­ணித்­துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இருந்து வில­கு­வ­தென்­பது, மனித உரி­மை­களில் அமெ­ரிக்கா கொண்­டுள்ள பற்­று­று­தியில் இருந்து பின்­வாங்­கு­கின்­றது என்று அர்த்­த­மல்ல. ஆனால் அந்த பேரவை தனது பெய­ருக்கு பெறு­மதி அற்­ற­தாக உள்­ளது என்று அமெ­ரிக்­காவின் வில­க­லுக்­கான கார­ணத்தை அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

விமர்­ச­னங்கள்

மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள நாடு­க­ளையும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை உறுப்­பி­ன­ராக கொண்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர், சீனா, கியூபா, வெனி­சுலா ஆகிய நாடு­களின் செயற்­பா­டு­க­ளையும் அவர் எடுத்­துக்­காட்­டி­யுள்ளார். ஆயினும் மனித உரிமைப் பேர­வையில் தனிப்­பட்ட தனது செல்­வாக்கை உயர்த்தி கொள்­வ­தற்கும், இஸ்­ரே­லுடன்  ஐ.நா. கொண்­டுள்ள வெறுப்­பு­ணர்வின் கார­ண­மா­க­வுமே அமெ­ரிக்க ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இருந்து வில­கு­கின்­றது என்று சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரிகள் சுட்­டிக்­காட்டி உள்­ளார்கள்.

இதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் அமெ­ரிக்­காவின் ஐ.நா­.வுக்­கான தூதுவர் நிக்கி ஹேலே, இஸ்ரேல் மீது ஐ.நா .பொருத்­த­மற்ற கவ­ன கு­விப்­பையும், முடி­வில்­லாத பகைமை அணு­கு­ மு­றை­யையும் பின்­பற்றி அர­சியல் ரீதி­யாக பக்­க­ச்சார்­பற்ற வகையில் செயற்­ப­டு­கின்­றதே தவிர மனித உரி­மைக்­காக அது செயற்­ப­ட­வில்லை என்று தெரி­வித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மனித உரி­மை­களை பேணு­வதில் ஏற்­க­னவே பல­வீ­ன­மாக உள்ள ஐ.நா.மன்­றத்தை அமெ­ரிக்­காவின் இந்த நட­வ­டிக்கை மேலும் பல­வீ­ன­மாக்க செய்­யவே உதவும் என்று மனித உரி­மைக்கே முத­லிடம் என்ற கருத்து கொண்ட எச்.­ஆர்.எவ், சிறுவர் பாது­காப்பு, கெயர் ஆகிய சர்­வ­தேச மனித உரிமை மற்றும் உதவி அமைப்­புக்கள் உட்­பட 12 அமைப்­புக்கள் அமெ­ரிக்க இராஜ­ாங்க செயலர் மைக் பொம்­பேக்கு எழு­தி­யுள்ள கடிதம் ஒன்றில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றன.

உலக நாடு­களில் மனித உரிமை மீறல்கள் பாதிக்­கப்­ப­டு­கின்ற நிலையில் மனித உரி­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தையும், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவி புரி­வ­தையும் அமெ­ரிக்­காவின் செயற்­பாடு மேலும் கடி­ன­மாக்கும் என்று அந்த நிறு­வ­னங்கள் தமது கடி­தத்தில் எச்­ச­ரிக்கை செய்­துள்­ளன.

அதே­வேளை இலங்­கையின் மனித உரிமை மீறல் விட­யத்தில் ஐ.நா. தவறு இழைத்­து­ விட்­டது, தனது கட­மை­களை செய்­வதில் இருந்து அது தவறி இருக்­கின்­றது என்று ஐ.நா. செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்டரஸ் நோர்­வேயில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கையில் வெளி­யிட்­டுள்ள ஒப்­புதல் வாக்­கு ­மூ­லத்­துக்கு ஒப்­பான கருத்­தா­னது, மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு கடந்த ஒன்­பது வரு­டங்­க­ளாக நீதிக்­கா­கவும் ஓர் அர­சியல் தீர்­வுக்­கா­கவும் ஏங்கி கொண்­டி­ருக்­கின்ற, தமிழ் மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்பின் அவல நிலை­மையை தெளி­வாக காட்­டி­யி­ருக்­கின்­றது.

பிரே­ர­ணை­களின் மூலம் இலங்கை அர­சாங்­கத்தை வழிக்கு கொண்டு வரு­வ­தற்கு முயன்­றி­ருந்த அமெ­ரிக்கா மனித உரிமைப் பேர­வையில் இருந்து வெளி­யே­றிய நிலையில், ஒன்­பது வரு­டங்­க­ளாக வழங்­கப்­ப­டாத நீதி வழங்­கப்­ப­டு­வ­தற்­கு­ரிய சூழலை ஏற்­ப­டுத்­து­வது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல.

ஆனால் மனித உரிமை மீறல்­களில் நீதியை நிலை ­நாட்டி, அர­சியல் தீர்வை எட்­டு­கின்ற முயற்­சியில் அமெ­ரிக்­காவை முழு­மை­யாக நம்­பிய அணு­கு­ மு­றையை கடைப்­பி­டித்து வந்த தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைமை அமெ­ரிக்­காவின் விலகல் தமிழ் மக்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்த வல்­லது என்­பதை ,ஏற்­றுக்­கொண்­டுள்ள போதிலும், பிரிட்டன் ஐரோப்­பிய ஒன்­றியம் போன்ற தரப்­பு­களின் ஆத­ரவை பெறு­வ­தற்­காக அவற்­றுடன் பேச்­சுக்கள் நடத்­துவோம் என்று கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை, அமெ­ரிக்கா வெளியில் இருந்து செய்­யக்­கூ­டிய உத­வி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பேச்­சுக்­களை நடத்­துவோம் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். பொறுப்புக்கூறும் விட­யத்தில் தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு அமெ­ரிக்கா தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்கும் என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அத்துல் கேசாப் தெரி­வித்­தி­ருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

எனினும், பொறுப்புக்கூறு­த­லுக்­கான செயற்­பா­டு­களை தனது இஷ்­டத்­திற்கு அமை­வாக ஆமை வேகத்தில் ஆறு­த­லாக முன்­னெ­டுத்து, ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யும், சர்­வ­தே­சத்­தையும் அலட்­சி­யப்­ப­டுத்தி  செயற்­ப­டு­கின்ற அர­சாங்­கத்தை பேர­வையின் உறுப்­பினர் என்ற வகையில் அதி­கார பலத்­துடன் இருந்த போதே ஆக்­க­பூர்­வ­மான அழுத்­தங்­களை கொடுக்­காத அமெ­ரிக்கா வெளியில் இருந்து எதனை சாதிக்க போகின்­றது, விடாக்­கண்டன், கொடாக்­கண்டன் ரீதியில்  செயற்­ப­டு­கின்ற அர­சாங்­கத்­திடம் எவ்­வாறு சாதிக்க போகின்­றது என்ற கேள்வி இயல்­பாக எழு­கின்­றது.

தூர­நோக்கும் தீர்க்­க­த­ரி­சன சிந்­த­னையும் அவ­சியம்

சீனா தனது வர்த்­தக செயற்­பா­டு­களை உல­க­மய அளவில் விரி­வு­ப­டுத்­து­வ­தற்­காக இலங்­கையை முக்­கிய தள­மாக கொண்டு காய் ­ந­கர்த்­தலை மேற்­கொண்­டுள்ள சூழலில், இலங்­கையின் பொறுப்புக்கூறல் விட­யத்தில் அமெ­ரிக்கா தொடர்ந்தும் தனது பங்­க­ளிப்பை வழங்க வேண்­டிய கட்­டாய நிலையில் இருப்­ப­தா­கவே அவ­தா­னிகள் கருது­கின்­றனர்.

வர்த்­தக நோக்­கத்தை கார­ணம் ­காட்டி இலங்­கையில் கால் பதித்­துள்ள சீனாவின் செயற்­பா­டா­னது, ஆசிய பிராந்­தி­யத்தில் அமெ­ரிக்­காவின் இருப்­புக்கு ஓர் அச்­சு­றுத்­த­லா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது. இது அமெ­ரிக்­காவின் அர­சியல் இரா­ணுவ பொரு­ளா­தார நலன்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள சவா­லா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய ஓர் அர­சியல் சூழலில் இலங்கை மீது கொண்­டுள்ள தனது நிலைப்­பாட்டை அல்­லது பிடியை அமெ­ரிக்கா கைவி­டு­வது என்­பது அதன் எதிர்­கால நலன்­க­ளுக்கு பாதிப்­பையே ஏற்­ப­டுத்தும் என்றும் அவர்கள் விளக்­க­ம­ளிக்க  முற்­ப­டு­கின்­றார்கள்.

ஆயினும், இஸ்­ரே­லு­டான ஐ.நா.வின் அணு­கு ­மு­றையை முதன்­மைப்­ப­டுத்தி, ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இருந்து வில­கு­வ­தற்கு முடிவு செய்­துள்ள அமெ­ரிக்­கா­வுக்கு இலங்கை விவ­கா­ரத்­திலும் பார்க்க, இஸ்ரேல் விவ­கா­ரமே முதன்­மை­யான விட­ய­மாக அமைந்­துள்­ளது என்­பது தெளி­வாகி உள்­ளது.

இலங்­கையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் அலட்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. போர்க்­குற்ற செயற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இதனால் அந்த நாட்டின் சிறு­பான்மை தேசிய இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்ற மனி­தா­பி­மான சிந்­த­னை­யிலும் பார்க்க, இஸ்­ரேலில் அமெ­ரிக்­காவின் நலன்கள் அதிக முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன என்­பதை ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அது வில­கி­யி­ருப்­பது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

தமிழ் மக்­க­ளுக்கு இலங்­கையில் இழைக்­கப்­பட்­டுள்ள அநீ­தியே அமெ­ரிக்­கா­வுக்கு முக்­கி­ய­மான விட­ய­மா­கவும், அர­சியல் ரீதியில் விசேட கவனம் செலுத்த வேண்­டிய விவ­கா­ர­மா­கவும் அமைந்­துள்­ள­தாக தமிழ் மக்­களும், தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­மையும் இது ­கால வரையில் கருதி இருக்­கலாம். அதன் கார­ண­மா­கவே, அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ராக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் பிரே­ர­ணை­களை கொண்டு வந்­த­தாக கூட நம்­பிக்கை கொண்­டி­ருந்­தி­ருக்­கலாம்.

அமெ­ரிக்கா தொடர்­பி­லான அவர்­களின் இந்த கருத்தும், நம்­பிக்­கையும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியதன் மூலம் இப்போது பொய்த்து போயுள்ளது. இலங்கை என்பது சின்னஞ் சிறிய ஒரு தீவு. அந்த சிறிய தீவில் சிறுபான்மை இனமாக உள்ள தமிழர்களின் நலன்களிலும், அரசியல் உரிமைகளிலும், மனித உரிமைகளிலும் அமெரிக்கா அல்லது இந்தியா போன்ற நாடுகள் அக்கறை செலுத்துகின்றன என்றால், அதற்கு அந்த நாடுகளின் அரசியல் இராணுவ பொருளாதார நலன்கள் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். அத்தகைய நலன்களின் அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அவர்கள் அந்த விடயங்களில் தலையீடு செய்வார்கள்.

சுய இலாபமின்றி எந்தவொரு நாடும் மற்றுமொரு நாட்டின் உள்விவகாரங்களிலோ அல்லது அந்த நாட்டில் உள்ள ஓர் இன குழுமத்தின் அரசியல் மற்றும் உரிமை நலன்கள் சார்ந்த விவகாரங்களிலோ தலையீடு செய்ய முன்வருவதில்லை. இந்த யதார்த்தத்தையும். உலக நாடுகளின் போக்கையும் அவற்றின் செல்நெறியையும் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு அந்த விடயங்களை கவனத்திற் கொண்டு, அதற்கேற்ற வகையில் இராஜதந்திர ரீதியிலும், சமயோசிதமான காய் நகர்த்தல்களின் மூலமாக மட்டுமே சிறுபான்மை இனம் ஒன்று தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தனது நலன்களை பேணிக்கொள்ள முடியும்.

ஆழமான அரசியல் நலன்களுக்கான தூரநோக்கும், தீர்க்கதரிசன சிந்தனையும் அற்ற நிலையில் அவ்வப்போது எழுகின்ற அரசியல் சூழல்களில் நம்பிக்கை வைப்பதும், அதன் அடிப்படையில் எதிர்பார்ப்புகளை முன்வைத்து செயற் படுவதும் ஏமாற்றத்திலேயே கொண்டு முடிக்கும்  என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்காவின் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விலகல் இந்த படிப்பினையை உணர்த்துவதாகவே அமைந்துள்ளது.

பி.மாணிக்­க­வா­சகம்