கொட்டுமுரசு

திட்டமிடப்படாத கிரவல் அகழ்வும் திட்டமிட்டே அழிக்கப்படும் வன்னிக் காடுகளும்!

எவனொருவன் திட்டமிடாமல் செயற்படுகின்றானோ அவன் திட்டமிட்டே தோல்வியை தழுவிக்கொள்கிறான் என்பது ஒரு பழமொழி. இது அனைத்து வகையான செயற்பாடுகளுக்கும் பொருந்தும். மிக முக்கியமாக அபிவிருத்தி பணிகளின் போது சிறந்த திட்டமிடல் அவசியம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் இது கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் வன்னியின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் போது இந்த திட்டமிடலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும்பும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அபிவிருத்திக்கான கிரவல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றபோது பல ஆயிரக்கணக்கான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இச் செயற்பாடுகள் ...

Read More »

மூடி மறைக்க முயலும் செயற்பாடு!

தமிழ் மக்­க­ளையும் உல­கத்­தையும் ஏமாற்றும் நோக்கில் இலங்கை அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் காணாமல் ஆக்­கப்பட்டோர் அலு­வ­ல­கத்தை எதிர்த்தும் அமர்வைப் புறக்­க­ணித்தும் கடந்த 14 ஆம் திகதி சனிக்­கி­ழமை யாழில் காணாமல் ஆக்­கப்­ப­ட்­டோரின் உற­வுகள் பலர் மாபெரும் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் காணாமல் ஆக்­கப்­ப­ட்டோர் தொடர்­பான அலு­வ­லகம் மாவட்டம் தோறும் காணாமல் போனோரின் உற­வு­களை சந்­தித்து உரை­யா­டி­வரும் நிகழ்ச்­சித்­திட்­டத்­துக்கு ஏற்ப யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டலை உற­வி­னர்கள் முற்­றாக புறக்­க­ணித்­தது மாத்­தி­ர­மன்றி எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தையும் நடத்­தினர். காணாமல் போன தமது உற­வு­க­ளைத்­தேடி மாதக்­க­ணக்­காக, வரு­டக்­க­ணக்­காக ...

Read More »

48 ஆண்டுகளாக தொடரும் பயங்கரவாதத் தடைச்சட்டம்!

இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர தாகத்தை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அச் சட்டம் இன்னமும் ...

Read More »

நிலைமாறுகால நீதி கிடைக்குமா?

நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்திலும் இந்த அமர்வுகள் ...

Read More »

மனித இனமே கலப்பு இனம்தான்! பிறகு எப்படிப் பிரிக்கமுடியும்?

ஹொமோ இரக்டஸ் இனத்திலிருந்து மற்ற இரண்டு இனங்கள் தோன்றி 5 லட்சம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த இரண்டு இனங்களும் மனிதர்களைப் போன்றதொரு தோற்றம். 150 ஆண்டுகளுக்குமுன் டார்வின் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” என்ற புத்தகத்தில் மனித இனத்தின் வளர்ச்சி பல்வேறு கிளைகளைக் கொண்ட ஒரு மரத்தைப் போன்றதென்று கூறியிருந்தார். அவரது கூற்றின்படி மனித இனம் பொதுவான ஓர் இனத்திலிருந்து பிரிந்த பல்வேறு கிளை உயிரினங்களாகும். “ஹோமோ இரக்டஸ்” (Homo erectus) என்ற பொது மூதாதையிலிருந்து நியாண்டர்தால் (Neanderthal) மற்றும் ஹோமோ சேபியன்களான (Homosapiens) ...

Read More »

`எல்லைக் கோடுகள் நாடுகளுக்குத்தான், அன்புக்கு அல்ல’ !

`அம்மா! ஐ லவ் யூ. நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன். ப்ளீஸ் அம்மா! என்கிட்ட எப்படியாவது பேசுங்க. நீங்க நல்லா இருக்கீங்கனு நம்புறேன். அம்மா! ஞாபகம் வெச்சுக்கோங்க, என் வாழ்க்கைல எனக்குக் கிடைச்ச பெஸ்ட் நீங்கதான். “என் அம்மாகிட்ட கூட்டிட்டு போறாங்கன்னுதான் நெனச்சேன், ஆனா வேற ஒரு புது இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க” “நான் பாத்ரூம் கழுவுனேன். கழிப்பறைக் குப்பைகள் நெறைஞ்ச அந்தப் பையை எடுத்துப் போடச் சொன்னாங்க. எல்லாருமே அந்த வேலைய செய்யணும்.” “என் தம்பி அழுதுட்டு இருந்தான். அவன தூக்கி ...

Read More »

கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ?

வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்பதாகவே அடுத்த முதலமைச்சர் யார் என்னும் கேள்வி எழுந்துவிட்டது. கேள்வி எழுந்தது மட்டுமல்ல, அது வடக்கில் தேனீர் கடையிலிருந்து வெற்றிலைக் கடைவரையில் பேசு பொருளாகவும் இருக்கிறது. தமிழரசு கட்சியின் தலைவராக கருதப்படும் மாவை சேனாதிராஜா தொடக்கம் பாதர் இம்மானுவல்வரையில், பலரது பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் – அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது எந்தவொரு கட்சிiயும் சாராதவரா? தமிழ் அரசியல் அரங்கில் மன்னிக்க வேண்டும் தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் ...

Read More »

விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்!

விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? , பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. எனவே உடனடிக்கு நட்டம் என்றாலும் நீண்ட கால நோக்கில் அவருக்கு லாபமே கிடைக்கும். பதவியை இழந்தமை அவருக்கு ஒரு அரசியல் முதலீடாக அமையும். அதே சமயம் விஜயகலாவைப் ...

Read More »

”பிஞ்சுக் கால்களின் முதல் நடையை என்னால் பார்க்க முடியவில்லை”!-டென்னிஸ் தேவதை

விம்பிள்டன் இறுதிப்போட்டி மீண்டும் ஓர் எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் செரினா மீது வைத்திருக்கிறது உலகம். 36 வயதில், குழந்தை பிறந்த பத்து மாதத்தில், 24-வது கிராண்ட் ஸ்லாமை வெல்ல களமிறங்குகிறார் டென்னிஸ் தேவதை. ”பிஞ்சுக் கால்களின் முதல் நடையை என்னால் பார்க்க முடியவில்லை. மீண்டும் களத்தில் என்னை நிரூபிப்பதற்காக பயிற்சியில் இருக்கிறேன். மழலையின் நடையைக்கூட பார்க்கமுடியாத தாயாகிவிட்டேன். என்னால் அழாமல் இருக்க முடியவில்லை” – நாளை விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஏஞ்சலிக் கெர்பருடன்  விளையாட இருக்கும் செரினா வில்லியம்ஸ் பதிவிட்டிருக்கும் வார்த்தைகள்தான் இவை. எப்போதும்போல சறுக்கித்தள்ளவைக்கும் நெகட்டிவ் கமென்ட்டுகள் வந்தாலும், work – life பேலன்ஸுக்காக உழைக்கும்… உழைத்துக்கொண்டேயிருக்கும் ...

Read More »

காதலுடனும் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம்!

சிலி எழுத்தாளர் இஸபெல் அயந்தேயின் வரிகள் இவை: “ஒருவேளை காதலைத் தேடுவதற்காகவே நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம். மீண்டும் மீண்டும் காதலைக் கண்டடையவும், தொலைக்கவும்… ஒவ்வொரு காதலுடனும் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம். ஒவ்வொரு காதல் முடிவுறும் பொழுதும், ஒரு புதிய காயத்தைப் பெறுகிறோம். நான் பெருமைக்குரிய தழும்புகளைப் பெற்றிருக்கிறேன்.” பல ட்விஸ்ட்டுகளோடு கால்பந்தாட்ட உலகக் கோப்பை பயணித்துக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா, பிரேசில் முதலான நாடுகளைக் கடந்து ரசிகர்கள் விரும்பும் அணிகள் தோற்றுப்போக, யாருமே எதிர்பார்க்காத அணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி யிருக்கின்றன. ‘பெட்டிங் நடக்கிறது’, ‘கிளப் ...

Read More »