கொட்டுமுரசு

நாடாளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை!

சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அந்த வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் வரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு  கேள்வி:- பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் பொதுத்தேர்தல் ஜனவரியில் நடக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடந்தது என்ன? பதில்:- தேர்தல்கள் ஆணைக்குழுவில் தவிசாளர் உட்பட மூன்று உறுப்பினர்கள் உள்ளார்கள். எம்மூன்று ...

Read More »

சிறிசேன மீதான சர்வதேச நெருக்குதல் தொடரவேண்டும்!

இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் ஜனநாயக விழுமியங்களின் வழியிலும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சர்வதேச சமூகம் பிரயோகித்துவருகின்ற நெருக்குதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தடுமாறவைத்திருக்கிறது.அந்த நெருக்குதல் தொடரவேண்டும் என்று லண்டன் கார்டியன் பத்திரிகை வலியுறுத்தியிருக்கிறது. ‘ஜனாதிபதி எதிர் பிரதமர் ‘ என்ற தலைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கார்டியன் தீட்டியிருக்கும்  ஆசிரிய தலையங்கத்தில் ‘இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் இடம்பெறுகின்ற மோதல்கள் வீதிகளுக்கும் பரவக்கூடும் அல்லது நெருக்கடியில் தலையீடுசெய்யுமாறு பாதுகாப்புப் படைகள் தூண்டப்படக்கூடும் என்ற அச்சத்தையும் சிலர் வெளியிட்டிருக்கிறார்கள்.   இலங்கை இராணுவத்துக்கும் பொலிஸுக்கும் ...

Read More »

மாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது!

இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனநாயக மீட்சியை நோக்கி நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியாவினால் இயலுமாக இருந்தது என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ...

Read More »

வங்கதேசத்தின் எதேச்சாதிகாரி ஆகிறாரா ஷேக் ஹசீனா?

மக்கள்தொகையில் உலகின் எட்டாவது பெரிய நாடான வங்கதேசம், மிகக் குறைந்த வளர்ச்சிபெற்ற நாடுகளின் பட்டியலிலிருந்து நீங்கிவிட்டது. ‘நடுத்தர வருவாயுள்ள நாடு’ என்ற நிலைக்கு உயர்கிறது. அடித்தளக் கட்டமைப்புகளில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் உலகின் முன்னணி நாடாகிவிட்டது. இவ்வளவும் 2009-ல் பதவிக்கு வந்தது முதல் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசின் சாதனைகள். மியான்மரிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குப் புகலிடம் கொடுத்ததற்காக உலகம் அவரைப் பாராட்டுகிறது. மதத் தீவிரவாதம் பரவாமல் தடுப்பதற்காக மேற்குலகு பாராட்டுகிறது. வட கிழக்கில் தீவிரவாதிகளின் முகாம்களை ...

Read More »

வியாழேந்திரனுக்கு பத்தில் வியாழனா?-காரை துர்க்கா

அன்றாடம், எங்களுக்கிடையே நடைபெறும் உரையாடலின் போது, “நாளை என்ன நடக்குமோ என்று யாருக்குத் தெரியும்” என்ற சொல்லாடலைப் பொதுவாக உச்சரிப்பது உண்டு.  அதற்கு, “அவனுக்குத் தான் (கடவுள்) எல்லாம் தெரியும்” என, அடுத்தவர் பதில் அளிப்பதும் உண்டு. இதே நிலைமையிலேயே, இன்று எமது நாடும் உள்ளது. நாளை (14) என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய, அகிலமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனால், அது கூடப் பொய்த்துப் போய் விட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. அந்தளவுக்கு, ஒக்டோபர் 26 மாலை, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் அதிர்வுகள், ...

Read More »

பூடான் தாயின் கதை இது!

தொடக்கத்தில், டாக்டர் க்ராமேரிக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அறுவை சிகிச்சைக்காக ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்குப் போடப்படும் மயக்க மருந்து, இருவரின் உடலிலும் சரியாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதே அது. பூம்சு சங்மோ (Bhumchu Zangmo) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் இரண்டு குழந்தைகள் பிறக்கக்கூடும் எனக் கணித்திருந்தனர். ஆனால், அந்த இரட்டையர்கள் ஒட்டிப் பிறப்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் குழந்தைகளைப் பார்த்து பூடான் மருத்துவர்கள் முதலில் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், பூடான் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் முதல் ஒட்டிப் பிரிந்த இரட்டைக் குழந்தைகள் அவர்கள்தாம்! கடந்த வருடம் ...

Read More »

தீவிர வலதுசாரி நாடாகும் பிரேசில்!

பிரேசிலின் புதிய அதிபராக 2019 தொடக்கத்தில் பதவியேற்கிறார் ஜெய்ர் பொல்சொனாரோ. ஒரு ஜனநாயக நாட்டில் பதவிக்கு வந்த வலதுசாரிகளிலேயே இவர்தான் அதிதீவிரமானவராக இப்போதைக்குக் கருதப்படுகிறார். பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஹங்கேரியைப் பின்பற்றி பிரேசிலிய மக்களும் வலதுசாரித் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பொல்சொனாரோவை, ‘பிரேசிலின் டிரம்ப்’ என்றே அழைக்கின்றனர். இதில் உண்மையும் இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதார்தேவைப் போல இவரும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வன்முறைதான் கை கொடுக்கும் என்று நம்புகிறார். அதிபர் தேர்தல் முடிவு வெளியான உடனேயே பிரேசில் நாட்டு ராணுவம் ...

Read More »

அரசியல் போர்க்களம்! – பி.மாணிக்கவாசகம்

நாட்டில் அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டு இரண்டு வாரங்களாகப் போகின்றன. ஆயினும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் கூடுகின்றனவே தவிர குறைவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. நவம்பர் 16 ஆம் திதகி வரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரண்டு தினங்கள் முன்னதாக 14 ஆம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச வர்த்தமானியின் மூலம் அறிவித்துள்ளார். ஆயினும் தொடர்ந்து செல்கின்ற உறுதியற்ற அரசியல் செயற்பாடுகள் அடுத்தடுத்த கட்டங்களில் எத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து பலரும் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாமல், ...

Read More »

பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி!

சூரியனும் பூமியும் 460 கோடி ஆண்டுகள் முன்பு உருவாயின.  ஆனால், சுமார் 1,362 கோடி ஆண்டுகள் முன்பே சூரியனைப் போலப் பல மடங்கு நிறை கொண்ட குண்டுவிண்மீன்கள் பிறந்தன எனவும் சுமார் 1,355 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவற்றில் பல சூப்பர் நோவாவாக வெடித்துச் சிதறி, அதில் சில முதன்முதல் விண்மீன் கருந்துளைகளாக உருவாயின எனவும் கண்டு பிடித்துள்ளனர். அரிசோனா குண்டு விண்மீன்கள் வானவியல் துறை ஆய்வாளர் ஜூட் பவுமனும் (Judd Bowman) அவரது ஆய்வுக் குழுவினரும் சேர்ந்து 28 பிப்ரவரி  2018-ல் நேச்சர் ...

Read More »

சிறிசேனவின் இரண்டாவது சதிப்புரட்சி !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து வருடகால இடைவெளிக்குள் இரண்டாவது அரசியல் சதிப்புரட்சியில் பங்காளியாகியிருக்கிறார்.   முதலாவது சதிப்புரட்சியில் அவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறி 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டார்.அதை ராஜபக்சவும் அவரது விசுவாசிகளும் துரோகத்தனமான செயல் என்று கருதினர். தற்போதைய சதிப்புரட்சி 26 அக்டோபர் 2018 அன்று ஜனாதிபதி சிறிசேன முன்னாள்  ஜனாதிபதி ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்ததையடுத்து அரங்கேறியிருக்கிறது.அவரின் இந்த நடவடிக்கை இலங்கையில்  எனக்கு தெரிந்த அனேகமாக சகலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சிறிசேன ...

Read More »