இலங்கையில் புதிய அரசொன்றை வரைவதற்கான செயன்முறைகளில் ராஜபக்ச அரசாங்கம் இறங்கியிருக்கிறது. முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கு முன்னதாக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் கொண்டுவந்த 19ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. அது பற்றிய அரசியல் வாதப்பிரதிவாதங்கள் இலங்கையில் தீவிரமாக மூண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பெருமளவு மாற்றங்களை செய்வதற்கு அல்லது முற்றுமுழுதாக நீக்குவதற்கு ராஜபக்சாக்களின் ...
Read More »கொட்டுமுரசு
இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதன்போது பதின்மூன்றாவது திருத்தத்தை அரசாங்கம் நீக்கினால் அதை இந்தியா தடுக்குமா என்று உரையாடப்பட்டது. அதற்கு கணேசலிங்கம் ஏற்கனவே இந்தியா வடக்கு கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்ட பொழுது அதை எதிர்க்கவில்லை எனவே இனிமேலும் 13ஆவது திருத்தத்தில் கைவைத்தால் இந்தியா எதிர்க்கும் என்று எப்படி எடுத்துக் கொள்வது ?என்று கேட்டார். அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை அகற்றக் கூடும் என்ற பேச்சு ...
Read More »ராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில். தமிழ்க் கட்சிகள் எந்தவொரு கருத்து வெளிப்பாடுகளுமின்றி அமைதியாக இருக்கின்றன. கோட்டாபய ராஜபக்ச. மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் ஜெனீவாவின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், செப்பெரம்பர் மாத அமர்வு திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைத் தீர்மானம் பற்றி மீளாய்வு செய்யப்படுமா இல்லையா என்பது குறித்த ...
Read More »சுமந்திரன் கட்சியிலிருந்து……….தவராஜா விரிவான கடிதம்
“கட்சியின் நலனை முதன்மைப்படுத்தி திட்டங்களை வகுப்பதும் செயற்படுத்துவதும் கட்சியின் மீது பற்றுக் கொண்ட அனைவரதும் கடப்பாடாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் தொடர்ந்தும் தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தியதுடன் தன்னிச்சையாக செயல்பட்டமை தமிழ் தேசிய கூட்டமைப்பை பாரிய பின்னடைவுக்கு எடுத்துச் சென்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சித் கொழும்புக் கிளைத் தலைவரும், அரசியல் உயர்மட்டக் குழு உறுப்பினருமான கே.வி.தவராஜா, “சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். இது தொடர்பில் தலைமைத்துவம் உடனடியாக செயல்படாவிடின் ஜக்கிய ...
Read More »தமிழில் ஒரு சர்வதேச நாவல்
சென்ற நூற்றாண்டில் தமிழில் பிரதானப் போக்காக இருந்த நவீன நாவல் வடிவம், நவீன எழுத்துகளோடு சேர்த்துப் பார்க்க முடியாத தனித்துவமான எழுத்து ப.சிங்காரத்துடையது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தொன்மை கொண்ட தமிழர் வரலாறு, மெய்யியல், பண்பாடு, வாழ்க்கைப் பார்வை, மொழி மரபின் குணங்கள் சேர்ந்த வெளிப்பாடு ப.சிங்காரம். உலகப் போரின் பின்னணியில் தென்கிழக்காசிய நாடுகளின் ஒரு காலகட்டத்து அரசியல், வெகுஜனப் பண்பாட்டை விரிவாகவும் நுட்பமாகவும் அவர் தனது இரண்டு நாவல்களிலும் படைத்துள்ளார். அதிலும், ‘புயலில் ஒரு தோணி’ நாவலானது லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ ...
Read More »தமிழ்தேசியம் தோற்கப்படவில்லை! -அரியநேத்திரன்
“தமிழ் தலைவர்களின் செயல்பாடுகளில் தடைகள், தாமதங்கள் இருப்பது என்பது உண்மைதான் இருந்தபோதும் தமிழ்தேசியம் தோற்கப்படவில்லை. அது வெற்றிக்கான படிகளை தாண்டுவதற்கு இன்னும் பல அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். அதற்கு தமிழ் இளைஞர்கள் சலுகை அரசியலுக்கு சோரம் போகாமல் எமது கடந்த கால வரலாறுகளையும் போராட்ட தியாக இழப்புகளையும் கேட்டறிந்து உண்மையான தமிழ் இளைஞர்களாக மாறும்போது தமிழ்தேசியம் பல வீச்சுக்களுடன் முன்னேறும்” என இலங்கை தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் அளித்த செவ்வியில் கூறினார். அந்தச் செவ்வியின் ...
Read More »13 வது திருத்தச் சட்ட நீக்கம் சாத்தியப்படுமா?
புதிய அரசுப் பொறுப்புக்களை ஏற்று இரண்டு வாரங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் அரசுக்கு அழுத்தங்களை வழங்குவோர் ஒருபுறம், விமர்சிப்போர் இன்னொருபுறம், அரசுக்குள் நிலவும், அதிருப்தியாளர்களின் உளவியல் நிலையை பயன்படுத்தி அரசின் பெரும்பான்மைக்கு பங்கம் ஏற்படுத்தி அரசியல் அநுகூலங்களைப் பெற்றுக் கொள்ள திரைமறைவு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரம் காட்டுவோர் மற்றொரு புறமுமாக நின்றுகொண்டு பிரச்சினைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமையானது நாட்டின் எதிர்காலத்திற்கு அவ்வளவு நல்ல சகுனமாக இல்லை. தேசிய ரீதியில் ஏராளம் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கும் அதேவேளை சர்வதேச மட்டத்திலும் ...
Read More »இனவாதமின்றி இனி அணுவும் அசையாது
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் தன் இனத்தின், மொழியின் தொன்மை தொடர்பில் நிகழ்த்திய உரைகள் தென்னிலங்கையில் ”ஒரு தமிழன் இலங்கைக்கு உரிமை கோரி விட்டான்” என்ற இனவாதத் தொனியில் ஆளும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களினால் உருமாற்றப்பட்டு சிங்களமக்கள் உருவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதன் வெளிப்பாடாக விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திலிருந்து தூக்கி வெளியே வீசுமாறும் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இனவாதக்கோஷங்கள் வெளிக்கிளம்பி உள்ளன. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் ...
Read More »கொரோனாவை எதிர்கொள்ள அவுஸ்திரேலியா கையாளும் அணுகுமுறை வெற்றிபெறுமா?
அவுஸ்திரேலியாவைக் கொரோனாத் தொற்று களைப்படையச் செய்கின்றது. இயல்புநிலை விரைவில் திரும்பிவிடுமென சில மாதங்களுக்கு முன்னர் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அப்போது தொற்று எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்திருந்தது. அதனால் நம்பிக்கைகள் வலுப்பெற்றன. அத்தகைய சூழ்நிலையிலேயே, ஆனி மாதமளவில் மீண்டும் தொற்று ஏற்பட்டது. அதனால் தொற்றுத் தடுப்பு ஏற்பாடுகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டன. மாநில எல்லைகள் மூடப்பட்டன. உள்நாட்டுப் போக்குவரத்து முடங்கியது. தற்போது மூடப்பட்ட எல்லைகளே சவாலாகின்றன. எல்லைப் பிரதேசங்களில் வசிப்பவர்களின் நிலை திரிசங்கு சொர்க்கமாகியது. அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்வதே சவாலாகியது. விக்டோரியாவையும் நியூசவுத்வேல்சையும் பிரிக்கும் மறே நதிக்கரையின் இருபுறமும் ...
Read More »விமானத்தில் இப்படி ஒரு பாதுகாப்பு வசதியா? கொரோனாவுக்கு சவால் விடும் அதிநவீன தொழில்நுட்பம்
விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொரோனாவுக்கு சவால் விடும் திறன் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது. மனித வாழ்வில் பயணம் மேற்கொள்வது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும், புதுமையான அனுபவத்தையும் கொடுக்கும். மனித இனம் தோன்றியது முதல் பயணம் செய்யும் முறை மாறி வந்த போதிலும், பயணம் செய்தது போதும் என நினைப்போர் யாரும் இல்லை. இந்த காலக்கட்டத்தில் பயணம் செய்ய பஸ், ரெயில், கார், மோட்டார்சைக்கிள் என சாலை வழி துவங்கி, விமானம் வரை அனைத்துவித பயணங்களும் அனைவருக்கும் ஏற்ற வகையில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal