கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) ஜனாதிபதி தேர்தலை டிசெம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதற்கும் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நியமனப்பத்திரங்களை கோருவதற்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது. தேர்தல் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில் முன்னிலையில் விளங்குபவர் குறித்து இதுவரையில் எந்தவிதமான தெளிவும் இல்லாத நிலையொன்று இருப்பது கவனிக்கத்தக்கது. குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் நாட்டில் சகல வற்றையும் நேர்த்தி செய்யக் கூடிய சிறந்த வேட்பாளர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் கருதப்படுகின்ற கோதாபய ராஜபக்ஷ உட்பட எந்தவொரு ...
Read More »கொட்டுமுரசு
சீனாவின் கரம் மேலோங்கினால் இந்தியாவுக்கு கடுமையானதாக அமையும்!
தென்புலத்தில் சீனாவின் கரம் ஓங்கும் போது வடபுலத்தில் காணப்படக்கூடிய இந்திய – சீன எல்லையில் கடும் பதற்றம் ஏற்படும். எனவே தான் இலங்கையின் அரசியல் நிலைப்பாடு இந்தியாவுக்கு முக்கியமாகின்றது. அதற்காக குறுக்கீடுகள் தொடர்பான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. மறுபுறம் கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போன்று இலங்கையில் மீண்டும் சீனாவின் கரம் மேலோங்குமாக இருந்தால் அதன் தாக்கம் இந்தியாவுக்கு கடுமையாக இருக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹுமான் தெரிவித்தார். இலங்கை என்பது இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு மிகவும் நெருக்கமான நாடாகும். ...
Read More »ரணிலை சந்தித்த கனிமொழி உள்ளிட்ட இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தி.மு.க துணைத்தலைவர் கனிமொழி உட்பட இந்தியாவின் சில முக்கிய அரசில் தலைவர்கள் பிரதமரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் , இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் ...
Read More »சம்பந்தன் மட்டுமா ஏமாற்றப்படுகின்றார்?
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2015), ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், ஏமாற்றப்பட்டு விட்டார் என்றவாறாகத் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் எனப் பலரும், அகத்திலும் புறத்திலும் விமர்சித்து வருகின்றனர். இந்த விடயம், தமிழர்களைப் பொறுத்த வரையில், உண்மையாக, வேதனையாகவே பகிரப்பட்டு வருகின்றது. இதன் அடுத்த கட்டமாகச் சம்பந்தன், தமிழ் மக்களை ஏமாற்றி விட்டதாகப் பொதுஜன பெரமுனவினர் கூறி வருகின்றனர். இது வேடிக்கையாகவும் விசமத்தனத்துடனும் பகிரப்படும் விடயமாகும். இதில் உண்மையே இல்லை; ...
Read More »இரட்டை கோபுரம் தாக்குதல்! 18 வருடங்கள் !
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் 18 வருடங்கள் காலம் கடந்து விட்டது. அமெரிக்காவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 3,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 9/11 தினத்தின் 18 ஆம் ஆண்டு இன்று நினைவு கூரப்படுகின்றது. இதே போன்ற ஒரு நாளில் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 அளவில் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீது அல்-கொய்தா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட விமானம் ஒன்று மோதி தாக்குதல் நடத்தியிருந்தது. உலகத்தின் போக்கையே மாற்றி ...
Read More »19 – மூன்று தலைவர்களின் வியக்கியானங்கள்!
இலங்கையில் இன்று மூன்று அரசியல் அதிகார மையங்களாக விளங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கடந்தவாரம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவி மற்றும் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் குறித்து வெளிப்படுத்திய கருத்துகள், நாடு இன்னும் இரு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்கவிருக்கும் நிலையில் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. மூவரையும் பொறுத்தவரை ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பான விவகாரத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றபோதிலும், தங்களின் அரசியல் எதிர்காலம் என்று வரும்போது ...
Read More »ரணில் – சஜித் தீர்மானமிக்க சந்திப்பு நாளை!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்ட நிலையில், நாளை இடம்பெறும் என, தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தாம் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் சஜித் பிரேமதாசவுடன் தனியாகச் சந்தித்துப் பேசி வேட்பாளர் தொடர்பாக ஒரு முடிவை எடுக்குமாறு ஐதேக தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இதற்கமைய நேற்றுக் காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் ...
Read More »ஓய்ந்து கொண்டிருக்கும் குரல்
ஆகஸ்ட் 30ஆம் திகதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாள் உலகளாவிய ரீதியாக நினைவு கூரப்பட்ட போது இலங்கையிலும் மூன்று இடங்களில்- வடக்கில் ஓமந்தையில், கிழக்கில் கல்முனையில் கொழும்பில் கோட்டை ரயில் நிலையம் முன்பாகவும் முக்கியமான போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இலங்கையில் தெற்கிலும், வடக்கு, கிழக்கிலும் வெவ்வேறு காலகட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்துக்கும் அதிகம். 1971 மற்றும் 1987–-90 ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போது, பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள், காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடும் போராட்டங்கள், கடந்த நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த போதும், இந்த ...
Read More »முகாபே ஒரு சகாப்தம்!
‘நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலுநாயக்கர் என்ற கதாபாத்திரம். அவரிடம் சிறுவயது மகள் கேட்பாள்’ அப்பா, நீங்க நல்லவரா, கெட்டவரா?’ அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் ‘தெரியலையே அம்மா!’ சிம்பாப்வேயின் நீண்ட நாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயும் அதே மாதிரி தான். மக்களின் நேசத்தையும், வெறுப்பையும் சம்பாதித்த தலைவர். ரொபர்ட் முகாபே சிறந்த தலைவரா, மோசமானவரா என்று சிம்பாப்வே மக்களைக் கேட்டால், தெரியலையே என்று தான் பதில் கூறுவார்கள். காலணித்துவ ஆட்சியின் அடிமைத் தளைகளில் இருந்து தமது தேசத்திற்கு விடுதலை தேடித்தந்த தைரியமானதொரு ...
Read More »காலம் கடந்த ஞானம்…!
ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தரப்பினர் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தனர். அத்துடன் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதாக அளித்த உறுதிமொழிக்கு அமைவாகவே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரித்து வெற்றி பெறச் செய்தது. ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து ஓர் அரச நிர்வாகத்தில் இணைந்திருந்த ஓர் அரிதான சந்தர்ப்பத்தின் மூலம் புரையோடிப்போயுள்ள தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு ...
Read More »
Eelamurasu Australia Online News Portal