கொட்டுமுரசு

பற்றிப் பரவும் கரோனா

சீனா: பாதிப்புகள் – 80,793 மரணங்கள் – 3,169 இத்தாலி: பாதிப்புகள் – 12,000 மரணங்கள் – 827 ஈரான்: பாதிப்புகள் – 9,000 மரணங்கள் – 354 தென் கொரியா: பாதிப்புகள் – 7,869 மரணங்கள் – 66 ஸ்பெயின்: பாதிப்புகள் – 2182 மரணங்கள் – 49 பிரான்ஸ்: பாதிப்புகள் – 1,784 மரணங்கள் – 33 ஜெர்மனி: பாதிப்புகள் – 1908 மரணங்கள் – 3 ஜப்பான்: பாதிப்புகள் – 1278 மரணங்கள் – 19 அமெரிக்கா: பாதிப்புகள் – ...

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

கொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும் என்று விரிவாக பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 லட்சம் பேர் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். தடுப்பு மருந்து இல்லாத கொரோனா வைரஸ் என்ன காரணத்தினால் பரவுகிறது? இதை தடுக்க முடியுமா? கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பது குறித்து மக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வு பெற வேண்டும். கொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் ...

Read More »

அச்சத்துக்கும் அறிவியலுக்கும் நடுவே…

அதுவோர் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்பு…   அன்றைய விரிவுரையை நடத்துவதற்கு, அறைக்குள் வந்த பேராசிரியர், தான் கற்பிக்கப் போகும் விடயப் பரப்பின் தலைப்பையும் தனது பெயரையும் திரையில் விழுத்துகிறார். வகுப்பெங்கும் சலசலப்பும் அங்காங்கே முணுமுணுப்புகளும்…. பேராசிரியர் இப்படித் தொடங்குகிறார்; “வணக்கம்! நான் இத்தாலியன் என்பதை நீங்கள் அனுமானித்திருப்பீர்கள். வடக்கு இத்தாலியில் உள்ள எவருடனும் நான், நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கவில்லை. இத்தாலியில் இருந்து வந்த எவரையும் நான், கடந்த இரண்டு மாதங்களாகச் சந்திக்கவில்லை. இவை, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் என்று நம்புகிறேன்”. வகுப்பில் ஒரு நீண்ட பெருமூச்சு; ...

Read More »

வாக்காளர்களைக் குழப்பியுள்ள தமிழ் அரசியல்வாதிகள்!

ஜனநாயகத்துக்கான ஆதாரமாக  இருக்கும்  தேர்தல் என்ற ‘மக்கள் சக்தி’க்கு, இலங்கை தேசம் சற்றும் சளைத்ததில்லை என்பது போல், அடுத்தடுத்துத் தேர்தல்களைச் சந்திக்கத் தயாராகின்றது நாடு. அந்தவகையில், ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்துக்கான தேர்தல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கைகளைப் பலப்படுத்தும் முனைப்போடு, தென்னிலங்கையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெருந்தேசிய கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க, இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது. எனவே, தென்னிலங்கையில் ராஜபக்‌ஷ அணியின் வெற்றி என்பது, தற்போதைய அரசியல் நிலைவரப்படி, ஓரளவு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ...

Read More »

‘கோவிட்-19’ உலகம் எப்படி எதிர்கொள்கிறது?

சிங்கப்பூர்: வைரஸ் தாக்கியவர்கள், நோயின் தீவிரத்துக்கேற்ப நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சிகிச்சையும் தொடர்கிறது. காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குச் செல்வதையும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதையும் சிங்கப்பூர் அரசு ஊக்குவிக்கிறது. மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரித்து இதன் தீவிரத்தை உணர்த்துகிறது. முகக் கவசம் உள்ளிட்டவற்றை விலை உயர்த்தி விற்கக் கூடாது, பதுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது. காய்ச்சல் வந்தவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை அவர்கள் குணமாகும் வரை எல்லா நிறுவனங்களும் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பொதுப் ...

Read More »

இனியும் ‘உக்கிய’ முடிவுதானா?

அறிவிக்கப்பட்டுள்ள ​ஸ்ரீ லங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் நாடளாவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கி இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதாக, மொத்தச் சனமும் ‘தொடைநடுங்கி’க் கொண்டிருக்கும் இந்தவேளையில், தேர்தல் வைரஸ்தான் இலங்கையை வீரியமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுதல், கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது வரையிலான பூர்வாங்க நடவடிக்கைகளில் எல்லாக் கட்சிகளும் மும்முரமாகி இருக்கின்றன. பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும், தத்தமது அரசியல் நலன்கள் சார்ந்தும், தங்களது இருப்பின் மீதான வலுவை ...

Read More »

’100 நாள்களில் திருப்தி இல்லை’!

ஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்திகொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். காணாமல் போனவர்கள், இராணுவ பிரசன்னம், ஜெனீவா தீர்மானம், அரசியல் கைதிகள், பட்டதாரிகள் விவகாரம், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, நேற்றையதினம் பதிலளித்தார். ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்தார். மக்களின் ஆணையையேற்றுப் பதவியில் இருக்கின்றபோதிலும் பலமான ...

Read More »

அன்பழகன் வாழ்க்கை வரலாறு!

திமுக பொதுச்செயலாளர், கருணாநிதியின் உற்ற நண்பர், முதுபெரும் திராவிட இயக்கத்தலைவர் க.அன்பழகன் இன்று மறைந்தார். அவரது நீண்ட நெடிய பொதுவாழ்வு குறித்த சிறு குறிப்பு. திமுக தலைவர் கருணாநிதியின் உற்ற தோழரான அன்பழகன் பிறந்ததும் கருணாநிதி பிறந்ததும் ஒரே மாவட்டம்தான். திருவாரூர் திருக்குவளையில் கருணாநிதியும், காட்டூரில் அன்பழகனும் பிறந்தனர். கருணாநிதியைவிட 2 வயது மூத்தவர் அன்பழகன். எனக்கு அண்ணன் இல்லை அதனால் அன்பழகனை என் அண்ணனாக பார்க்கின்றேன் என்பார் கருணாநிதி. 1922 ஆம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி அன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். ...

Read More »

சிவசேனை தமிழர் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முனைகிறது!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் அரசியல் பரப்பும் சூடுபிடித்திருக்கிறது. வடக்கில் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற கோசத்தை முன்னிறுத்தியும், கிழக்கில் தமிழர் ஒற்றுமை என்ற கோசத்தைப் பயன்படுத்தியும், புதிய அரசியல் அணிகள் தோற்றம் பெற்று, இம்முறை தேர்தல் களத்தில் தீவிரமான உள்ளகப் போட்டியை உருவாக்கியிருக்கின்றது. வடக்கில், பேரினவாதக் கட்சிகள், அவற்றின் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்ற தமிழ்க் கட்சிகள், ஆசனங்களைக் குறிவைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் முரண்பாடு, அவற்றுக்குச் சாதகமாக மாறும் சூழல் உள்ளது. கிழக்கில் தமிழ்த் தரப்புகளின் ...

Read More »

கோடை வெயிலின் தாக்கம் கொரோனாவை கட்டுப்படுத்துமா?

கோடை வெயிலின் அதிகரிப்பால் கொரோனா வைரஸ் கட்டுப்படுமா? என்ற கேள்விக்கு விடை காண்போம்.கடந்த காலங்களில் உலகில் பல நாடுகளில் சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்கள் தாக்கியபோது இந்தியாவில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதற்கு இந்தியாவில் நிலவிய வெப்பம் தான் காரணம் என்று கூறப்பட்டது. இங்கு அதிக வெப்பநிலை நிலவியதால் அந்த கிருமிகளால் தாக்குபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதேபோல தற்போது பரவி வரும் கொரோனா வைரசும் வெப்பநிலையை தாங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று நிபுணர்கள் பலரும் தெரிவித்தனர். தற்போது ...

Read More »