கொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும் என்று விரிவாக பார்க்கலாம்.
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 லட்சம் பேர் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
தடுப்பு மருந்து இல்லாத கொரோனா வைரஸ் என்ன காரணத்தினால் பரவுகிறது? இதை தடுக்க முடியுமா? கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பது குறித்து மக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வு பெற வேண்டும்.
கொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதை சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. முதலில் காய்ச்சலில் தொடங்கும்.
அதாவது உடல் வெப்பத்தை காட்டிலும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும். தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக்கோளாறு உண்டாகும்.
அதைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும். இவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்த அறிகுறியால் மருத்துவமனைக்கு வந்தவர்களில் இதுவரை அதிகம் பேர் இறந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலில் சாதாரணமான ஜலதோஷம் ஏற்படும். பின்னர், காய்ச்சல் உருவாகி நிமோனியா என்ற நுரையீரல் தொற்றினை இந்த வைரஸ் உருவாக்கும். முறையான சிகிச்சை பெறாவிட்டால், பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிரிழக்க நேரிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இவை காற்றில் பரவும் தன்மை கொண்டது, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்து விடும். இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.
கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவுவதைத் தடுக்க, சீன மற்றும் உலக நாடுகளின் மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆய்வின் ஒரு கட்டமாக கொரோனா வைரஸ் கிருமி, ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை 7வது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவிட்-19 என்று பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு என்றும் கூறுகிறது மருத்துவத்துறை. சீனாவில் தானே இந்த கொரோனா வைரஸ் தொற்று என்று அலட்சியம் கொள்ளாமல் சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது தானே.
கொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும் என்று பார்க்கலாம்.
மூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல், மேல் சுவாசக்கோளாறு, தொண்டை கரகரப்பு, காய்ச்சல், உடல் சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் தான் ஆரம்பத்தில் இருக்கும். இவை வழக்கமாக இருப்பது தானே என அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தால் முதலில் மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
மனிதர்களுக்குப் பரவக்கூடிய இந்த கொரோனா வைரஸ் தொற்றானது சில சமயங்களில் கடுமையான சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும்.
* தொண்டையில் கடுமையான வலியை உண்டாக்கும்.
* மார்புப் பகுதியில் லேசான வலி கூட சிலருக்கு இருக்கும்.
* உடலை பலவீனப்படுத்தும்.
* குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்யும்.
மனிதர்களுக்குத் தொற்றக்கூடிய கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுகின்ற தொற்று நோயாகவே இருக்கிறது. அது எப்படியெல்லாம் பரவும் என்று பார்க்கலாம்.
இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.
வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும்.
கண், வாய், மூக்கு ஆகியவற்றை கைகளைக் கழுவுவதற்கு முன்பாகத் தொடுவதால் பரவும்.
தற்போது மனிதர்களுக்குப் பரவும் கொரோனா போன்ற தொற்று நோய்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.
அடிக்கடி கையை சோப்பு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்த்துக் கழுவுங்கள்.
கைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.
உடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
ஒருவேளை தொற்று பரவி விட்டால் நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.
மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கு என்று தனியே குறிப்பிட்ட மருத்துவ முறைகள் ஏதும் கிடையாது. நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலமாகவே இந்த வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.
வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளாக இருந்தால் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைத் தவிர்த்து விடுங்கள்.
நீராவி கொண்டு ஆவி பிடியுங்கள். இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.
லேசாக முடியாதது போல உணர்ந்தீர்கள் என்றால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுங்கள். நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிடுங்கள்.