ஹாங்காங்கில் கொட்டும் மழையிலும் சீனாவுக்கு ஏதிராக 17 லட்சம் மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தியதால் அந்நகரமே ஸ்தம்பித்தது ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் தொடர் போராட்டத்துக்கு அரசு அடிபணிந்தது. ...
Read More »கொட்டுமுரசு
மட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்!
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதானிக்க முடிகின்றது. குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Read More »காஷ்மீர் 370…
பவளங்கள் போல மின்னும் பனிச்சிகரங்கள், துலிப் மலர்கள் நிறைந்த ஆசியாவின் மிகப்பெரிய பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள், உலக புகழ்பெற்ற காஷ்மீர் ரோஜாக்கள்,அப்பிள்கள், வற்றாத நீல நிற ஏரிகள், பசுமை படர்ந்த உயர்ந்த மலைகள், அதன் இடுக்கில் பல ஆறுகளும் அருவிகளும் பாயும் அழகும் வளமும் நிறைந்த பள்ளத்தாக்குகள் என மொத்த இயற்கை அழகையும் தன்னகத்தே கொண்டுள்ள அழகிய பிரதேசமே இந்தியாவின் வடகோடியில் அமைந்துள்ள காஷ்மீர் ஆகும். 17ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஜகாங்கீர் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வந்த போது ‘பூமியில் சொர்க்கம் என்ற ...
Read More »ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்!
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் திருவிழா கோலகலமாக இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வமாக தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. அமைச்சர் சஜீத்தை அறிமுகப்படுத்துவதுபோல் ஐக்கிய தேசியக்கட்சி பதுளையில் நடத்திய வரவேற்பு வைபவமும் இரு பிரதான கட்சிகளின் முடிவை அறிவித்த நிலையில் தமிழ்மக்கள் இந்த வேட்பாளர்கள் தொடர்பில் என்ன முடிவு எடுக்கப்போ கிறார்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இவர்களில் எந்த வேட்பாளரைக் கைநீட்டிக்காட்டப்போகிறது என்பதை அறிவதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதுபோலவே போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சிகளும் கூட்டமைப்பின் முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் சரியான கணிப்பாக இருக்கும். ...
Read More »அரசியல்வாதி கோட்டாவின் அவலம்!
சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி, சிங்களவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சில ஆண்டுகளாகக் கூறிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார். அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனை, அழைத்துப் பேசியிருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ. இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அரசல்புரசலாகத் தகவல்கள் வெளியானதும் சித்தார்த்தன், ஊடகங்களிடம் உண்மையைக் கக்கினார். அதில், “தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே, தம்மால் வெற்றிபெற முடியும். ஆனாலும், அனைத்து ...
Read More »தமிழரசுக் கட்சியின் ஜனநாயகப் போக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளும்!
முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஸ்தம்பிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்தான், தாம் முழுநேரப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் காலத்தில், பகுதி நேரமாகத்தான் அரசியலில் ஈடுபட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி, புதுக் கதையொன்றைச் சொல்லி வருகின்றது. இந்தக் கருத்துத் தொடர்பில், தமிழ் மக்களிடம் பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில், மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுக்குத் தெளிவூட்டும் வகையிலமைந்த, விழிப்புணர்வுக் கருத்தரங்கு, களுவாஞ்சிக்குடி, கிரான் ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (12) நடைபெற்றிருந்தது. இதன் ...
Read More »மஹிந்தவும் 13 பிளஸூம்
“இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாதம் வடக்கில், கந்தரோடையில் நடைபெற்ற பாடசாலை வைபவமொன்றின் போது கூறியிருந்தார். தமது அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தமையே, கடந்த காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியாமல் போனதற்குக் காரணம் எனவும் பிரதமர் அக்கூட்டத்தில் கூறினார். அதேபோல், எதிர்க்கட்சிக் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தாம் தலைமை தாங்கப் போகும் பொதுஜன பெரமுன பதவிக்கு வந்தால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமது ஆட்சிக்காலத்தில், தாம் வாக்குறுதியளித்த, ‘13 ...
Read More »தமிழ் மக்களின் உரிமைக்குரலாக செயற்பட்ட குமார் பொன்னம்பலம்!
அண்ணல் குமார் பொன்னம்பலம் என்னும் உரிமைக்குரல் எம்மிடமிருந்து பறிக்கப்படாமல் வாழ்ந்திருந்தால் இன்று ஆகஸ்ட் 12 இல் அவருக்கு 81 வயதாகும். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். இதனால், இதன் உச்சக் கட்டமாக இனவாதிகளால் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழர் தம் அடிப்படை அபிலாசைகளை இடித்து வலியுறுத்தியவர் அவர். திம்புக்கோட்பாடுகளையே தமிழர் தம் அடிப்படை அபிலாசைகளாக கொண்டிருந்தார். எந்த ஒரு சிங்கள தலைமையும் வடக்கு கிழக்கு எனும் ...
Read More »நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன் – மஹிந்த
இலங்கையில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக, இந்திய ஊடகவியலாளர் பகவான் சிங்குக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த செவ்வியில் மஹிந்த ராஜபக் ஷ மேலும் கூறியதாவது, கேள்வி: உங்கள் வேட்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன ...
Read More »நானும் துப்பாக்கி தூக்குவேன்! – காஸ்மீரிலிருந்து ஒரு குரல்
கீதா பாண்டே – பிபிசி தமிழில் ரஜீபன் ஸ்ரீநகரில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் முக்கியமானது கன்யார். இந்த பகுதிக்கு ஊரடங்கு நேரத்தில் செல்வதற்கு நாங்கள் பல வீதிதடைகளை கடந்து செல்லவேண்டியிருந்தது. நாங்கள் மற்றுமொரு வீதிதடையை எதிர்கொண்டவேளை நான் கீழே இறங்கி படமெடுக்க ஆரம்பித்தேன். அவ்வேளை ஒழுங்கை போன்ற பகுதியிலிருந்து வெளியே வந்த சிலர் முற்றுகைக்குள் வாழ்வது போன்று உணர்வதாக என்னிடம் முறைப்பாடு செய்தனர். இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மிகவும் அடாவடித்தனமானது என அவர்கள் மத்தியில் காணப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்தார். ...
Read More »