இலங்கையில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக, இந்திய ஊடகவியலாளர் பகவான் சிங்குக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த செவ்வியில் மஹிந்த ராஜபக் ஷ மேலும் கூறியதாவது,
கேள்வி: உங்கள் வேட்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன பெரமுனவின் வேட்பாளராக, உங்கள் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செய லருமான கோத்தபாய ராஜபக் ஷவையே தெரிவு செய்வார் என அவர்கள் சொல் கிறார்கள்? அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும்போது பிரதமர் வேட்பாளராக இருப்பீர்கள் என்று கூறியுள்ளீர்களா?
பதில்: மகிந்த ராஜபக் ஷ (சிரிக்கிறார்) ஆம், இல்லை. நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை (கோத்தபாய வேட்பாளராக இருப்பது குறித்து), ஆனால் மக்கள் முடிவு செய்துள்ளார்கள் என நினைக்கிறேன் (அது கோத்தபாயவாக இருக்க வேண்டும்).
கேள்வி: கடந்த முறை கூட நீங்கள் ஜனாதிபதியாகவும், உங்கள் சகோதரர்கள் அரசாங்கத்தில் சக்திவாய்ந்த பதவிகளிலும் இருந்த நிலையில், நீங்கள் ஒரு குடும்ப ஆட்சிக்கு செல்கிறீர்கள் என்று எதிர்க்கட்சி தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீங்கள் தோல்வியடைந்தபோது மக்கள் அதை ஏற்றுக் கொண்டதாகத் தோன்றியது. அது மீண்டும் நடக்காதா?
பதில்: அந்த குற்றச் சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை, உண்மையானவை அல்ல. குடும்ப ஆட்சி என்ற பேச்சு இனி பொருந்தாது, ஏனென்றால் மக்கள் அதை தங்கள் நலனுக்காக விரும்புகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவர்கள் அபிவிருத்தியை விரும்புகிறார்கள், அவர்களுக்கு வேலைகள் வேண்டும். நாங்கள் அதை வழங்குவோம்.
கோத்தபாய ஒரு மோசமான மனிதர் அல்ல, அவர் ஒரு செயல் மனிதர், அவர் பலவற்றைப் பேசிக் கொண்டிருப்பவர் அல்ல, அமைதியாக செயற்படுகிறார். அவர் ஜனாதிபதியாகவும், நான் பிரதமராகவும், இணைந்து, மக்களுக்கு இப்போது தேவை யானதை வழங்க முடியும். மக்கள் அதை அறிந்திருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் இருந்தபோதிலும் இப்போது சட்டம் ஒழுங்கு இல்லை, ஜனநாயகம் இல்லை, மாகாண சபைகளுக்கு தேர்தல் இல்லை. தற்போதைய அரசாங்கம் துன்புறுத்தல்கள் மற்றும் வழக்குத் தொடருவதிலும், எனது அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களைப் பழிவாங்குவதிலும் மட்டுமே கவனமாக இருந்தது.
இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் அபிவி ருத்தியை நாங்கள் வழங்குவோம், மேலும் இந்தியாவுடன் நல்ல உறவை உறுதி செய் வோம் என்று புதுடெல்லிக்கு தெரியும்.
கேள்வி: முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு கோத்தபாய காரணமா?
பதில்: அது அவர்களால் பரப்பப்பட்ட பொய். அவர்கள் முஸ்லிம் கிராமங்களைத் தாக்கி, ‘ராஜபக் ஷவுக்கு வாக்களியுங்கள்’ என்று சத்தமாகக் கூறுவார்கள், எனவே பழி எம்மீது இருக்கும். இது எங்களுக்கு எதிராக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிட்ட பரப்புரை. ஆனால் இப்போது முஸ்லிம் மக்களுக்கு உண்மையில் யார் பொறுப்பு என்று தெரியும், அவர்கள் புத்திசாலிகள் மற்றும் படித்தவர்கள்.
கேள்வி: கோத்தபாய மீது போர்க்குற்றச் சாட்டுகள் உள்ளன என்று?
பதில்: அவை எல்லாம் அரசியல் (குற்றச்சாட்டுகள்). உண்மையில் போரை வழிநடத்திய சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க முடிந்தால், அதனை அப்போது ஆதரித்த தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியுற்ற விதத்தைப் பார்த்து இப்போது எங்களை ஏன் ஆதரிக்க மாட்டார்கள்?
கேள்வி: எனவே சிறுபான்மையினர் உங்க ளுக்கு வாக்களிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: ஆம், என்ன நடந்தது என் பதை தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். அமைச்சரவை யில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் குறைந்தபட்சம் ஏதாவது செய்கிறார்கள், ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்காக எதுவும் செய்ய வில்லை; அவர்கள் தங்களை மட் டுமே கவனித்துக் கொள்கிறார் கள். முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் குறைந்தபட்சம் அரசாங் கத்தை எதிர்க்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தன், சுமந்திரன் போன்ற தலைவர்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர், ஆனால், அவர்களால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுக்கே அனைத்தையும் பெறுகிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு களுக்குள், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வு தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வேன்.
கேள்வி: நரேந்திர மோடி அரசாங்கத்துட னான உங்கள் உறவுகள் எப்படி இருக்கின்றன, ஏனென்றால் 2015ஆம் ஆண்டில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியற்றவராக இருந்தீர்கள், அதிபர் தேர்தலில் உங்களுக்கு தோல்வியை ஏற்படுத்தியதற்காக இந்தியாவின் றோ மீது குற்றம்சாட்டினீர்கள்?
பதில்: கடந்த காலம் கடந்து விட்டது. நாங்கள் அதை மறந்து விட்டோம். முன்பை விட இப்போது நாம் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டுள்ளோம். இலங் கையில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் வழங்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொள்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான மோதல்களே, ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததற்கு ஒரு காரணம்.
மே மாதம் அவரை (மோடி) சந்திக்கச் சென்றேன். கடந்த காலத்தில் (2015), இரண்டு (சீன) நீர்மூழ்கிக் கப்பல்கள் இங்கு வந்து (கொழும்பு துறைமுகம்) திரும்பிச் சென்றதால் அவர்கள் கவலைப்பட்டனர். ஆனால் இப்போது என்ன நடந்தது?
அவர்கள் வந்து இங்கு தங்கிவிட்டார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் சீனர்க ளுக்கு விற்கப்பட்டதில் இருந்து பல சொத்துக்கள் மற்றும் திட்டங்கள் அவர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக நகரம் 200 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் (சீனர்கள்) இப்போது நிரந்தரமாக இங்கே இருக்கிறார்கள்.
கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள இந்திய திட்டங்களுடன் ஒப்பிடும் போது சீன இருப்பு விகிதத்தை மாற்ற முடியுமா?
பதில்: இந்த விஷயங்கள் குறித்து நாங்கள் பேச்சு நடத்த வேண்டும்; நீங்க வேறொரு நாட்டுடன் உடன்பாட்டில் கையெழுத்திடும்போது நாங்கள் அதற்கு கட்டுப்படுவோம். ஆனால் பலாலி மற்றும் மத்தலவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் திருகோணமலையில் உள்ள எண் ணெய் தாங்கிகள் போன்றவற்றில் (ஈடு பாடு, முதலீடு) இந்தியா முன்னேற முடியும். நாங்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிரான வர்கள். இது எங்கள் கொள்கை.
கேள்வி: குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பின் பின்னர், இந்தியா உங்களுக்கு ஒரு முக்கியமான நட்பு நாடு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இந்தியா உங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கைகளை அனுப்பியிருந்தது, ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டனவா?
பதில்: இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியா மிக நெருக்கமான அண்டை நாடு, அவர்களின் செல்வாக்கு இங்கு மிகவும் உணரப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் சிறந்த நண்பன், மகிந்த ராஜபக் ஷவாகவே இருப்பார்.
ஆம், குண்டுவெடிப்பு ஆபத்து குறித்து இந்தியா எங்களை எச்சரித்தது, ஆனால் அவர்கள் (ஜனாதிபதி மைத்திரிபால மற் றும் பிரதமர் ரணில்) தங்களுக்குள் சண் டையிட்டுக் கொண்டிருந்ததால் அது கவனிக்கப்படாமல் போனது. ஒரு நாட்டை இரண்டு அதிகார மையங்களால் திறம்பட இயக்க முடியாது.
கேள்வி: காஷ்மீரின் நிலைமை மற்றும் மோடி அரசு எடுத்த நடவடிக்கை ஆகிய வற்றை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: அங்கு என்ன நடந்தது என்பது, இந்தியாவின் உள் விவகாரம் இல்லையா?
ஆனால், அணுசக்தி வல்லமை கொண் டதாகவும், அண்டை நாடுகளாகவும் இருப் பதால், அவர்கள் (இந்தியாவும் பாகிஸ் தானும்) ஒன்றாக அமர்ந்து பேசலாம் என்று நான் கூறுவேன். இருவரால் நம்பப்படும், ஐ.நா. பொதுச்செயலாளர் போன்ற ஒரு மூன்றாம் தரப்பு அவர்கள் இருவரையும் மேசைக்கு கொண்டு வரக்கூடும்.