பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரைப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை காணலாம். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ...
Read More »கொட்டுமுரசு
சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை
தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் உரையாற்றுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் நேற்றய தினம் பாராளுமன்ற சபாநாயகரின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற நிலையியல் கட்டளைச்சட்டம் 27 (2) ,ன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் கட்சித்தலைவர்கள் உரையாற்ற முடியும். ஆந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு ...
Read More »இந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா?
“தமிழ்த் தேசியத்திலும் தமிழர் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் காலத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் கருதி மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து ஓரணியில் திரளவேண்டியது அவசியம். இல்லையேல் நாம் தொடர்ந்தும் இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படும்” என, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உப தலைவரும் இணை பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அளித்த விசேட செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். அவரது செவ்வியின் முழு விவரம் வருமாறு, கேள்வி :- இந்தியாவை மீறி ...
Read More »பூவெலிக்கடவில் உதிர்ந்த பூக்கள்!
கண்டி பூவெலிக்கட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. அந்த உயிர்களின் பெறுமதி குறித்த கேள்வியே எம் முன் நிற்கும் கேள்வி. அவர்கள் பாதுகாப்பான ஒரு இல்லத்தில்தான் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அருகாமை வீடு பாதுகாப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்டதனால் அம்மாவும் அப்பாவும் குழந்தையும் என ஓர் அழகிய குடும்பம் இந்தமண்ணில் இருந்து பிரிந்து இலங்கை நாட்டுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துச் செல்கிறது. அந்தப் பாடம்தான் மதிப்பாய்வு. கடந்த பாராளுமன்ற காலத்தில் (2015 -2020) ஓர் இனத்தின் / ...
Read More »11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி
இலங்கையை சேர்ந்த அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்த போதிலும் 11 வருடங்களாக குடியேற்றவாசிகளுக்கான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெரும்பான்மையினத்தை சேர்ந்த அந்த நபரின் உண்மையான பெயரை வெளியிடவிரும்பாத கார்டியன் அலெக்ஸ் என்ற பெயரை பயன்படுத்தி அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து செய்திவெளியிட்டுள்ளது. அலெக்சிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. எனினும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முறையினால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் அலெக்ஸ் என கார்டியன் ...
Read More »திலீபன் நினைவேந்தல் நிகழ்வும் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையும்
“தமிழினத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கு எதிரிகளால்தான் முடியும்” என்ற கருத்து மீண்டும் உண்மையாகியிருக்கின்றது. திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நவக்கிரகங்கள் போல, ஒவ்வொரு திசையில் முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றது. குறைந்தபட்சம், திலீபன் நினைவேந்தலிலாவது தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. பலமான ஒரு அரசாங்கம் தென்னிலங்கையில் பதவியேற்றிருக்கின்றது. கடும் சிங்கள – பௌத்த தேசியவாதத்தை தமது கொள்கையாகக் கொண்டுள்ள அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. சிறுபான்மையின மக்கள் அனைவரும் தமது எதிர்காலம் குறித்து சிந்திக்க ...
Read More »விழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும் தமிழ்த் தலைவர்களும்
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டுரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு — வெளிநாட்டு கொள்கைகள், மற்றும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள நிலைப்பாடுகள் என்பன இலங்கை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. இப்பின்னணியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக இறுக்கமான நிலைப்பாடுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் துல்லியமாக உள்ளன. இலங்கை — ...
Read More »அரசைக் குழப்பும் ”20”
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் கோத்தபாய-மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அரசு ,தமது முதல் இலக்கான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மிக இலகுவாக நிறைவேற்றிவிடலாமென்ற நினைப்பில் அவசர,அவசரமாக அதனை தம் விருப்பப்படி தயாரித்து வர்த்தமானியில் வெளியிட்டுவிட்டு இப்போது அந்த 20 ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களுக்கு வரும் எதிர்ப்புக்களையும் தவறுகளையும் பார்த்து ”ஆப்பிழுத்தகுரங்கின்” நிலையில் தடுமாறுகின்றது. இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்யும் அரசுகள் தமது அரசை பலப்படுத்தும் விதத்திலும் தமது பதவிகளை தக்கவைக்கும் ,நீடிக்கும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை ...
Read More »திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது
அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக் கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒளிப்படம் ஒன்று உண்டு. அதில் அரைக் கால்சட்டை அணிந்த ஒரு போலீசார் வீதியில் விழுந்து கிடக்கும் ஒரு சத்தியாகிரகியின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் காணப்படும் சத்தியாகிரகி அரசையாதான். அவரை 1990களின் தொடக்கத்தில் ஒரு தேவைக்காக நான் சந்தித்தேன். அப்போது கேட்டேன் “தமிழரசுக்கட்சி உண்மையாகவே சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதா? காந்தி கூறிய சத்யாகிரகி ஒருவருக்கு ...
Read More »பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்டு வந்துள்ளது
பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்டு வந்துள்ளது இது மிகவும் ஆபத்தானது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தங்கள் சமூகத்திற்காக அதிகாரப்பகிர்வு குறித்து பேசுகின்ற ஒவ்வொருவரையும் பிரிவினைவாதியாக பார்க்கின்ற நிலைதான் இன்று காணப்படுகின்றது சந்தர்ப்பம் கிடைத்தால் தீவிரவாதிகளாக பட்டம் சூட்டப்படுகின்ற சூழலிலேயே நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபகதலைவர் மறைந்த எம்.எச்.எம் அஷ்ரபின்20வது நினைவுநாள் நிகழ்வு மூதூரில் இடம்பெற்றவேளை அங்கு உரையாற்றுகையில் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. ...
Read More »