“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்கும் அதிகமாக இது குறித்துப் பேசினேன். மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம். மே 17 ஆம் திகதி காலை நானும் அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இரு ஆயர்களும் அங்கு சென்று பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது” இவ்வாறு இறுதிப்போரின் போது இடம்பெற்ற ...
Read More »கொட்டுமுரசு
சீனாவின் புதிய போர்முறைக் கோட்பாடுகளின் விளைவு என்ன?
நவம்பர் மாதம் முதல் வாரம் நடந்த, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்திய செயற்குழுவின் ஐந்தாவது ப்ளீனரி கூட்டத்தில், பாதுகாப்பு அமைப்பு மற்றும் போர்ப்படைகளின் நவீன மயமாக்குதலை துரிதப்படுத்தி, ஒருங்கிணைந்த வளமான நாட்டை உருவாக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் கடந்த நவம்பர் 7ந் தேதி, சீனாவின் புதிய போர்முறைக் கோட்பாடுகளை “ஒருங்கிணைந்த சீன மக்கள் விடுதலைப் படையின் போர்முறைகள்; ஓர் வரைவடிவு” என்ற பெயரில் சீனப் படைகளில் செயலாக்கத்தில் கொண்டு வந்தது. அதைப் பற்றி சீன பாதுகாப்பு அமைச்சகம் ...
Read More »போரியல் அணு விஞ்ஞானி சமர்க் களத்தில் வீழ்ந்தாரா?
தெஹ்ரானில் அணு விஞ்ஞானியை குறி வைத்துக் கொன்ற தாக்குதல் உலகம் நவீன டிஜிட்டல் போர் யுகம் ஒன்றுக்குள் நகர்வதன் அறிகுறிகளைக் காட்டியிருக்கிறது. போர் முனைகளுக்கு வெளியே முக்கிய புள்ளிகளது வாகனங்கள் தொலைவில் இருந்து வான் வழியாக மட்டுமே குறி வைக்கப்படலாம் என்றிருந்த கதையையும் அது மாற்றியிருக்கிறது. ஈரானின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அந்த நாட்டின் அணு ஆயுத சக்தியின் ‘தந்தை’ எனவும் வர்ணிக்கப்பட்டுவந்த இராணுவ விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) செய்மதி ஊடாக இயக்கப்படக்கூடிய தானியங்கி ஆயுதங்களால் மிக நவீன போர் உத்தி மூலம் ...
Read More »அவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும்
அண்மையிலே அவுஸ்திரேலியா இராணுவத்தின் சிறப்புப்படை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது. அஃது ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படையினர் மீதான படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பானதாகும். விசாரணை முடிவு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்பதை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்னரே கோடி காட்டியிருந்தார். இருந்தபோதிலும், சிறப்புப்படையினர் சட்டவிரோதக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டதை அறிந்தபோது கங்காருதேசம் அதிர்ச்சியடைந்தது. 2001 செப்டம்பரில் நியூயோர்க் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையானவர்கள் கொல்லப்பட்டனர். அதனால் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அத்தகைய கொடிய தாக்குதலை, தலிபான்களே தொடுத்தனர் என்பது அமெரிக்காவைச் சீண்டியது. அதனுடைய தொடர்ச்சியாகத் தலிபானுக்கு ...
Read More »அஜித் டோவாலின் கொழும்பு விஜயத்தின் பிரதான நோக்கம் என்ன?
இலங்கையில் இந்தோ — பசுபிக் மூலோபாயத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா கடுமையாக முயற்சிக்கிறது. முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பு மகாநாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயம் இந்தோ — பசுபிக் ஒத்துழைப்புக்கு இலங்கையை நெருக்கமாக கொண்டுவருவதற்கான நோக்கத்தைக் கொண்டதாகும் என்று இந்தியாவின் பிரபலமான இணையத்தள செய்திச் சேவைகளில் ஒன்றான ‘த பிறின்ற் ‘ கூறியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகைதந்த ஒரு மாத காலத்திற்குள் அஜித் டோவாலின் விஜயம் இடம்பெற்றிருப்பதால் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் ...
Read More »நீதிமன்றத்துக்கு வந்த பிட்டு
“யுத்த காலங்களில் பிட்டும் வடையும் ரொட்டியும் தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்ற தொனிப்பட யாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்குமாறு பிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த ...
Read More »தொற்று நோயில் இருந்து பொருளாதாரங்கள் மீட்சிபெற சீன ஜனாதிபதி கூறும் யோசனைகள்
பெய்ஜிங், ( சின்ஹுவா) அதிகரித்துவரும் ஒருதலைப்பட்சவாதமும் ( Unilateralism) வர்த்தக தற்காப்புக்கொள்கையும் ( Protectionism) உலக கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலித்தொடரை ( (Global industrial and supply chains)சீர்குலைக்கின்றன என்பதால் கொவிட் –19 தொற்றுநோயில் இருந்து உலக பொருளாதாரங்கள் மீட்சிபெறவேணடுமானால், அந்த இரு அணுகுமுறைகளும் இல்லாமல் போகவேண்டும். இவ்வாறு அண்மையில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஜி — 20 நாடுகளின் இணையவழி உச்சிமகாநாட்டுக்கு பெய்ஜிங்கில் இருந்து ஆற்றிய உரையில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறினார். உலக பொருளாதாரங்களை மீட்டெடுக்கும் இலக்கை நோக்கி ...
Read More »சீனசார்புப் போக்கு சிங்களதேசத்தையும் அழிக்கும்
தமிழர்களின் உரிமையைகளை மறுதலிப்பதற்காக நீங்கள் இந்த பூகோள அரசியல் போட்டியை கையாளும் தவறான அணுகுமுறையானது, எந்த மக்களின் பெருமிதத்திற்காக நீங்கள் இதை செய்கிறீர்களோ அதே உங்களின் சொந்தமக்களின் இறைமையையும் நீங்கள் அழித்துக்கொள்கிறீர்க்ள் என்பதை மீண்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்று நீஙக்ள் இனவாதத்தை கைவிட்டு, நீஙக்ள் நாட்டின் தென்பகுதியில் நீங்கள் கொண்டிருக்கும் உரித்துகளை போலவே தமிழ் மக்களும் வடக்கு கிழக்கில் அனைத்து உரித்துகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுகொண்டு இணைந்து செய்ற்பட முன்வருகிறீர்களோ, அன்றுதான் , இலங்கையில் வசிக்கும் அனைவரும் நன்மையடையக்கூடிய வகையில் அனைவரும் இணைந்து ...
Read More »முக்கியமான வாய்ப்பை தவறவிட்ட இந்தியா
உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்றை உருவாக்கியிருக்கும் ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை’ உடன்படிக்கை சீனா தலைமையில் ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தைச் சேர்ந்த 10 நாடுகளும் சேர்ந்து 15 நாடுகளைக் கொண்ட ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை (Regional Comprehensive Economic Partnership –RCEP trade deal) உடன்படிக்கையொன்று நவம்பர் 15 கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலமாக உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்று தோற்றம் பெற்றிருக்கிறது. இதில் இந்தியா பங்கேற்காதமை பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 7 ...
Read More »சீன வர்த்தக ஒப்பந்தம் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானதா?
இந்தோ- பசுபிக் பிராந்தியக் கொதிநிலைக்குள் சுழியோட வேண்டிய தமிழ்த்தரப்பு, தேர்தல் அரசியலில் மாத்திரமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது – அ.நிக்ஸன் சீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership) (RCEP) சென்ற சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சென்ற புதன்கிழமை இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட குவாட் கடற்படைப் பயிற்சியின் இரண்டாவது தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்தப் பயிற்சியும் பாதுகாப்பு ...
Read More »