ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவித்தல் வெளியாகியதும் தேர்தலுக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு இடமளித்து, வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகின்ற இறுதித் தருணத்தில் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட களமாக மாற்றம் பெற்றுள்ளது. இந்தத் திருப்பங்கள் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக யார் யார் அதிகாரபூர்வமாக வெளிப்படப் போகின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதிலேயே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பில் இந்தத் திருப்பம் ஏற்படக்கூடும் என்பதே அந்த எதிர்பார்ப்பு. பெருமளவிலான ...
Read More »கொட்டுமுரசு
தம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு !
1796 ஆம் ஆண்டு காலப்பகுதில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல்வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு அங்கு வாழ்ந்த மக்கள் உதவ முன் வரவில்லை என தனது பயணக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். இக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டின் முன் பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் முறையாக வெளிப்படுத்தியிருந்தார். தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் காணப்படும் தம்பலகாமம் ...
Read More »2019 ஜனாதிபதி தேர்தலின் தனித்தன்மை!
நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலாகும். முன்னைய 7 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சில பிரத்தியேகமான — சுவாரஸ்யமான அம்சங்களை இத்தடவை தேர்தலில் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்துக்கொண்டே போட்டியிட்டார்கள்.ஆனால், இத்தடவை அவ்வாறு யாருமே களத்தில் இல்லை. அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள் ...
Read More »ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரேமதாசாக்களின் போராட்டங்கள்!
கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்து தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றதைப் போன்று மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மகன் சஜித் பிரேமதாசவும் எதிர்ப்புக்களை முறியடித்து அதே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். கட்சி நியமனத்தை வழங்குகிறதோ இல்லையோ 1988 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டே தீருவதென்று முடிவெடுத்த தந்தையார் தனது நீண்டகால அரசியல் விசுவாசியான சிறிசேன குரேயிடம் தேர்தலைச் சந்திக்கத் தயாராகுமாறு கூறியது பழைய அரசியல் அவதானிகளுக்கு நன்கு நினைவிருக்கும். அதே போன்றே மகனும் தன்னை ஐக்கிய தேசிய கட்சியின் ...
Read More »செம்மலையில் அரங்கேறிய அத்துமீறல்கள்!
தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை சட்டத்தை மீறி தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விடயம் நிச்சயமாக தீண்டும். முல்லை மண்ணில் அரங்கேற்றப்பட்ட மனிதப்பேரவலங்களுக்கான நீதிக்கோரிக்கை போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கையில் அதே மண்ணில் வரலாற்றுப்பழைமை வாய்ந்த செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் உருவான பௌத்த விகாரை இன முறுகல்களுக்கு வித்திட்டது. தற்போது அந்த விகாரையின் விகாராதிபதியின் மரணத்தின் பின்னர் அவரது உடல் நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டு மீண்டும் தமிழினத்திற்கு நீதி மறுதலிக்கப்பட்டுள்ளது. ...
Read More »இரண்டாவது ராஜபக்சவுக்கு எதிராக இரண்டாவது பிரேமதாச!
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி அதன் மிகவும் பலம்வாய்ந்த வேட்பாளர் என்று சொல்லக்கூடிய சஜித் பிரேமதாசவை களமிறக்கியிருக்கிறது. ஜனாதிபதி பதவிக்கான இந்த போட்டியில் ஒரு இரண்டாவது ராஜபக்சவுடன் ஒரு இரண்டாவது பிரேமதாச மோதுகிறார் என்று இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கில தினசரிகளில் ஒன்றான ‘ த இந்து ‘ நேற்று சனிக்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அந்த ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது ; ஐக்கிய தேசிய கட்சி நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ...
Read More »அரசியல் இராஜதந்திர அணுகுமுறையின் அவசியம்!
ஒரு மரணச் சடங்கின் மூலம் மத ஆதிக்கத்தையும், இன மேலாண்மையையும் நிலைநிறுத்த முடியும் என்பதற்கு முன் உதாரணமாக நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் இடம்பெற்ற கொலம்பே மேதானந்ததேரருடைய இறுதிக்கிரியைகள் புலப்படுத்தி இருக்கின்றன. இந்த அடாவடித்தனச் செயற்பாடு மத ரீதியானது மட்டுமல்ல. ஆக்கிரமிப்புக்கான போர்க்குணம்; கொண்டதோர் அரசியல் நடவடிக்கையும்கூட. இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள மென்போக்கிலான சண்டித்தனத்தையும், சர்வாதிகாரத்தையும் எவ்வாறு தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாகும். இந்த இறுதிக்கிரியை நீதிமன்ற உத்தரவை மீறிச் செய்யப்பட்டன. இந்துக்களின் மதரீதியான கலாசாரப் பண்பாட்டு உரிமைகளை ...
Read More »அப்பட்டமான சாட்சியம்!
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் கொலம்பே மேதாலங்காதேரருடைய சடலம் பலாத்காரமாக எரியூட்டப்பட்டதன் மூலம் நீதித்துறையின் முகத்தில் கரிபூசப்பட்டிருக்கின்றது. நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்து, அதற்கு முரணான வகையில் ஓர் இந்து ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. பேரின மத அகங்காரத்துடன் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பௌத்த மதத் திணிப்பையே இது வெளிப்படுத்தி உள்ளது. சிங்கள பௌத்த தேசியத்தை முழு மூச்சாகக் கொண்டுள்ள பௌத்த மதச் சண்டித்தனம் இந்தச் சம்பவத்தில் மிகக் கோரமாக தலை நிமிர்த்தி இருக்கின்றது. சிங்கள ...
Read More »ரணிலின் நிபந்தனையும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்!
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையிலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடியாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடு தொடர்ந்து வருகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியனவும் சஜித் பிரேமதாஸவை ...
Read More »‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’
யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. மூன்று நாள்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்த கண்காட்சி, பார்வையாளர்களின் அதிகரித்த வருகையால், கால நீடிப்பும் செய்யப்பட்டது. கண்காட்சி பார்த்த களைப்பில், ‘அம்மாச்சி’யில் ஏதேனும் குடிப்போம் எனச்சென்றோம். அங்கு சென்றால், அங்கும் அரசியல் அலசல்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்காட்சியைப் பார்வையிட வந்த பாடசாலையொன்றின் ஆசிரியர் குழாம், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தது. “நீங்கள் யாருக்குச் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal