தமிழ்நாட்டில் 1961-ல் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. அதற்கு இது 60-வது ஆண்டு. அதைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஒருபுறம் கோரிக்கை எழுந்துவரும் நேரத்தில், ‘தொல்லியல் ஆய்வுகளே வீண்’ என்ற விமர்சனம் இன்னொருபுறம் முன்வைக்கப்படுகிறது. 1784-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரிதான் கிரேக்க வரலாற்றில் ‘சந்தரகொட்டாஸ்’ என்று சொல்லப்படுவது இந்தியாவை ஆண்ட சந்திரகுப்த மெளரியர் என்ற பேரரசரின் பெயர்தான் என்பதைக் கண்டறிந்து கூறினார். 1886-ல் சென்னை அரசாங்கம் ஹூல்ஷ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது. அவர் தஞ்சை பெரியகோயில் ...
Read More »கொட்டுமுரசு
ஒலிம்பிக் 2020 : ஆஸ்திரேலியாவின் சாதனைப் பயணம்!
ஒரு பக்கம் உலகமே கொரோனா வைரசுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது, பெரும் பரபரப்புகளுக்கிடையே, ஒரு வருட காத்திருப்பிற்கு பின்பு, பார்வையாளர்களின் கைதட்டல்களும், ஆராவாரங்களும் இல்லாமல், டோக்கியோவில், ஒலிம்பிக்ஸ் 2020ல், 3988 வீரர்கள் 52 விளையாட்டுகளில் தங்களுக்குள்ளே போட்டி போட்டனர். ஐப்பான் நாட்டின் ஆதிக்குடிகளின் பண்பாட்டை விவரிக்கும் வண்ணம் நடனங்களை ஆடி, ஆகஸ்ட் 8ம் தேதி ஒலிம்பிக்ஸ் 2020 கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியா, உலக அரங்கில் தன்னை பெருமையான இடத்தில் முன்னிறுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணியைப்பற்றியும், வெற்றி பெற்ற கதைகளையும், பதக்கங்களையும் பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. ...
Read More »காலத்தால் கனிந்த கலைஞன்!
அறிவுநிலைக்கும் உணர்வுநிலைக்குமான இடைப்பட்ட புள்ளியிலிருந்துதான் தனது உரையாடலை ப்ரகாஷ் தொடங்குவார். அன்றைக்கு தஞ்சைப் பெரிய கோயில் புல்வெளியில் காதர்பாட்சாவுடைய ஆர்மோனிய வாசிப்பில் மயங்கிப்போன வெள்ளைக்காரர்கள், அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை கொடுத்துவிட்டார்கள் என்று பேச ஆரம்பித்தார். அன்றைய சாயுங்காலப் பேச்சு இரவு வரைக்கும் நீண்டு ஆர்மோனியம், ஆர்மோனிய இசைக் கலைஞர்கள் என்று ஓடிக்கொண்டிருந்தது. ப்ரகாஷ் ஓர் உரையாடல் கலைஞன். எண்பதுகளின் பிற்பகுதியில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் அறிமுகத்துக்குப் பிற்பாடு, தமிழ் இலக்கியப் போக்குகளில் ஏற்பட்ட மாறுபாடுகளை அறிந்துகொள்ள அன்றைக்கு தஞ்சை இளைஞர்களுக்கு ப்ரகாஷ் ஒரு ...
Read More »கொழும்பில் உள்ள மதிப்புமிக்க பண்டைய கட்டிடங்களுக்கு என்ன நடக்கும்?
இது என்ன செலாண்டியா? கொழும்பில் உள்ள மதிப்புமிக்க அரசாங்க நிலத்தை சீனா உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் இந்த நாள்களில் அதிக விவாதத்திற்கு உட்பட்டவை. கொழும்பு துறைமுக நகருக்கு அருகில் உள்ள இந்த மதிப்புமிக்க நிலங்கள் சீனாவுக்கு விற்கப்படுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த நிலங்களில் சில மற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஐந்து ஹெக்டேயர் நிலத்தை தெற்கு சர்வதேச கொள்கலன் முனையமாக ஒரு நிறுவனத்திற்கு மாற்றவும், அதன் 85 ...
Read More »பலமிழந்த ‘பலவான்’
தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் இரு ஜீவன்களில் ஒன்று தேனீ; மற்றையது, விவசாயி. இவ்வாறு தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும், இவை இரண்டும் தம் உழைப்பை ஒருபோதும் நிறுத்திக்கொள்வதில்லை. விவசாயி, தான் உற்பத்தி செய்கின்ற நெல்லுக்கோ, ஏனைய விவசாய விளைபொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்புகள் இன்றி, வருடாந்தம் பெரும் கஸ்டங்களையும் நட்டங்களையும் எதிர்நோக்கி வருவதுடன், தொடர்ந்தும் கடன் சுமைகளைச் சுமக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. விவசாயிகள் பலர் ஏழைகளாகவே இருக்கின்றார்கள். மழை பெய்யுமானால் தன் குடிசை ஒழுகும் எனத்தெரிந்தும், ‘இறைவா ...
Read More »பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமில்லாதது
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்கவேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்கு தயாரான நிலையில் இல்லை. அதனால் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமலேயே இதனை மேற்கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் தெரிவித்தார். முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிககைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு ...
Read More »ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது
இலங்கை இந்திய உடன்படிக்கை இலங்கை இந்திய உடன்படிக்கை என்னும் அனைத்துலக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 34ஆவது ஆண்டு யூலை மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவு பெறுகிறது. இலங்கை தனது தேசிய நெருக்கடிகளின் பொழுது இந்தியாவிடம் முதலில் உதவி கோரியதன் பின்னரே அது அனைத்துலக நாடுகளிடம் உதவி கோரலாம் என்பதை வலியுறுத்தியே இந்த உடன்படிக்கை அந்நேரத்தில் இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டது. 1980களில் அமெரிக்க மேலாதிக்கம் திருகோணமலைத் துறைமுகத்தில் வேகம் பெறுவதை அன்றைய சிறீலங்கா சனாதிபதி ஜே. ஆர் ஐயவர்த்தன ஊக்கப்படுத்திய சூழ்நிலையில், இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கையை செய்வதன் மூலம் ...
Read More »குரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்
உலகமே குழந்தைகளுக்கு எதிரானபாலியல் வன்முறையை ஒன்றுபட்டுஎதிர்த்துக் கொண்டிருக்கும்போது, மிக வளர்ந்த நாடு என்று சொல்லப்படும்அமெரிக்காவில் அதுவும் விளையாட்டுத்துறையில் இத்தனை காலமாக நடந்துவந்த குழந்தை பாலியல் வன்புணர்வுகள் மீண்டும் வெளிச்ச வட்டத்துக்கு வந்துள்ளன. தனது இளம் பிராயத்திலிருந்தே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி எடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு அமெரிக்காவிற்கு, தங்கப் பதக்கங்களை வாங்கி குவித்த ஆப்ரிக்க-அமெரிக்க வீராங்கனையான சிமோன் பைல்ஸ், கடந்த புதன்கிழமை அன்று ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக திடீரென அறிவித்தார். இந்த முடிவுக்கு காரணம் தனது மன நல பிரச்சினைகள்தான் என்று அவர் ...
Read More »நெருக்கடியுடன் விளையாடுதல்
நான் ஒரு பொருளாதார நிபுணரோ அல்லது நிதிவிவகார நிபுணரோ அல்ல, ஆனால் இலங்கை அரசின் இயக்கவியலையும் அதன் சமூக-அரசியல் முறைமையையும் கவனமாகப் பின்பற்றிய ஒரு அரசியல் ஆய்வாளர் மற்றும் ஒரு விமர்சகர் என்ற முறையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி செல்கிறதெ ன்று என்னால்எதிர்வுகூற முடிந்தது. பல நேர்காணல்கள் மற்றும் கலந்துரையாடல்களில், நாடு வங்குரோத் தாகி விட்டதாக இரவு தூக்கத்திற்குப் பிறகு அவர்கள் காலையில் எழுந்தவுடன் நாடு வங்குரோத் தாகி விட்டதாககேட்டு ஆச்சரியப்படக்கூடாது என்று நான் எனது பார்வையாளர்களை எச்சரித்திருந்தேன். ...
Read More »அரசியல் அமைப்புக்கு எதிரானது தணிக்கை!
கேரளத்தின் மண்ணடி கிராமத்தில் 1941-ல் பிறந்த அடூர் கோபாலகிருஷ்ணன், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்திலும் புனே திரைப்படக் கல்லூரியிலும் படித்தவர். 1972-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ மலையாளத்தில் புதிய அலை சினிமாவைத் தொடங்கி வைத்தது. கேரள மாநிலத்தின் முதல் திரைப்படச் சங்கமான ‘சித்ரலேகா’வை நிறுவியவர்களில் ஒருவர். பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட தேசிய அளவிலான விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர். ஜூலை மூன்றாம் தேதி தனது 80 வயதை நிறைவுசெய்ததையொட்டி, அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உரையாடியதிலிருந்து… கலை எப்போதாவது உங்களுக்கு ஆறுதலாக ...
Read More »
Eelamurasu Australia Online News Portal