13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டுமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தவிர, தங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாதென்றும் தங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். அவர் நேற்று (27) ...
Read More »கொட்டுமுரசு
இந்தியாவின் அணுவாயுத அரசியல்!
இந்தியாவின் அணுசக்தி கொள்கையில் ஒரு புதிய மாற்றத்தை இந்தியாவின் பாதுகாப்பமைச்சரின் அறிக்கை பிரதிபலிக்கிறது. இந்தியா ஏற்கெனவே அதன் விநியோக முறைகளையும், ராடார் திறனையும் பூர்த்தி செய்துள்ளதாக குறித்த அறிக்கை மூலம் தெரிகிறது. இதன் ஒரு பிரதிபலிப்பாகவே தான் இரட்டை நோக்கங்களுடன் செவ்வாய் மற்றும் சந்திரன் பயணங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஏவியிருந்தது. இந்நிலை, பாகிஸ்தானில் அணுவாயுதங்கள் உள்ளிட்ட இலக்குகளை இந்திய வான்படை கண்டுபிடித்து சரிசெய்ய முடியும் என்று இந்திய வான்படை தலைவர் கூறுகிறார். வொஷிங்டன் போஸ்ட் தகவலின் படி, ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மிரில் பொலிஸார் ...
Read More »ஜே.வி.பி.யும் ஜனாதிபதி தேர்தலும்!
ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் பேரணியின்போது கொழும்பு காலிமுகத்திடலில் பெருக்கெடுத்த மக்கள் வெள்ளம் நிச்சயமாக அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் இலங்கையில் வேறு எந்த அரசியல் பேரணியிலும் நாம் கண்டிராததாகும். சுமார் 30 அரசியல் கட்சிகள், குழுக்கள், சிவில் சமூக மற்றும் புத்திஜீவிகள் அமைப்புக்களை உள்ளடக்கிய இந்த இயக்கத்தின் பேரணி இடதுசாரி ஆதரவாளர்களுக்கு குறிப்பாக, பழைய இடதுசாரிக்கட்சிகள் பெரும் செல்வாக்குடன் செயற்பட்ட காலகட்ட அனுபவங்கைளைக் கொண்டவர்களுக்கு ...
Read More »விடை தேட வேண்டிய வேளை!
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை (தேர்தல் விஞ்ஞாபனம்) தயாரிப்பதற்கு அவசியமான தேர்தல் முன்கள நிலைமை இன்னும் கனியவில்லை. ஆனால் வேட்பாளராகக் களமிறங்கியிருப்பவர்களும், வேட்பாளர்களாவதற்குத் தயாராகி வருபவர்களும் தேர்தல் கால வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய வாக்குறுதிகளில் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்பது குறித்து தெளிவான உறுதியான நிலைப்பாட்டைக் காண முடியவில்லை. அதுகுறித்து அவர்கள் தமது அதிகாரபூர்வமான தேர்தல் உறுதிமொழிகள் தொடர்பான அறிக்கையில் தெளிவாகக் கூறுவதற்காகக் காத்திருக்கின்றார்களோ தெரியவில்லை. வேட்பாளராக முதலாவது அறிவிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த கோத்தபாய ராஜபக் ...
Read More »ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள்!
020ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர். இது, மாற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழுகின்றன. இதன் பின்புலத்தில், சில விடயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. சில கேள்விகளையும் கேட்ட ...
Read More »சவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்!
கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து கடந்த திங்கட்கிழமை புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்திடமிருந்தும், ஐக்கிய நாடுகளிடமிருந்தும் கூர்மையான கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையில் இனத்துவ நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் பாதகமான விளைவுகளை இந்த நியமனம் ஏற்படுத்துமென்று அவை தெரிவித்துள்ளன. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஒருவரை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்த செயல் இலங்கையில் அமெரிக்க இராணுவ ...
Read More »குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள்!
லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின் ஊடாகத் தேர்தல் பிரசார வலத்தை ஆரம்பித்துள்ளார். ஆனால், ஐ.தே.கவில் ...
Read More »கட்சி அரசியலே மலையக கல்வி வளர்ச்சிக்கு தடை!
கட்சி அரசியல் செயற்பாடுகளே மலையக கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பல அதிபர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள். பலர் பழிவாங்கப்பட்டுள்ளார்கள். தற்போதும் கூட மலையக கல்வி நிகழ்வுகளில் அரசியல் செல்வாக்கு காணப்படுகின்றது என ஓய்வு நிலை பேராசிரியர் த. தனராஜ் தெரிவித்தார். ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு மட்டுமே அரசியல் பயன்பட வேண்டுமே தவிர ஒரு சமூகத்தை மட்டம் தட்டுவதற்கும், அழிப்பதற்கும், ஒடுக்குவதற்கும் பயன்பட கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மலையகத்தின் சமகால அரசியல் ,பொருளாதார ,கல்வி நிலைமைகள் பற்றி அவர் வீரகேசரி ...
Read More »2005, 2010, 2015, 2020
நாட்டு மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற தீர்வுகள் காணப்படாத பல்வேறு பிரச்சினைகளையும் புறமொதுக்கி விட்டு, ஜனாதிபதித் தேர்தலே இன்று பேசு பொருளாகி விட்டது அல்லது, பேசு பொருளாக்கி விட்டார்கள். நம் நாட்டை ஜனாதிபதித் தேர்தல் காய்ச்சல் பீடித்து உள்ளது. ஆனாலும், எந்தத் தேர்தல்களும் கால ஒழுங்கில் நடத்த வேண்டியவைகளே. ஆகவே, அவை நடக்கட்டும். பெரும்பான்மை இன சிங்கள மக்கள், தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனூடாகத் தாங்கள் ஆதரிக்கும் கட்சி, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுடன், தாங்களும் வளம் பெற வேண்டும் எனக் ...
Read More »அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள்!
கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) இந்தியாவில் சமஷ்டிமுறைக்கும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு — காஷ்மீர் பிராந்தியத்துக்கான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நடந்திருப்பவை இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலான அதிகாரப்பரவலாக்கலை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் மங்கச்செய்யக்கூடும். பலம்பொருந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம் ஜம்மு — காஷ்மீர் மாநிலத்துக்கு பெருமளவு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவையும் 35 ஏ பிரிவையும் ஜனாதிபதியின் உத்தரவொன்றின் ஊடாக ஆகஸ்ட் ...
Read More »