சவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்!

கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்­கையின் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த லெப்­டினன் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக்க ஓய்வு பெற்­ற­தை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் அமெ­ரிக்கத் தூத­ர­கத்­தி­ட­மி­ருந்தும், ஐக்­கிய நாடு­க­ளி­ட­மி­ருந்தும் கூர்­மை­யான கருத்­துக்கள் வெளிவந்­தி­ருக்­கின்­றன.

இலங்­கையில் இனத்­துவ நீதிக்கும், நல்­லி­ணக்­கத்­திற்கும் பாத­க­மான விளை­வு­களை இந்த நிய­மனம் ஏற்­ப­டுத்­து­மென்று அவை தெரி­வித்­துள்­ளன.

பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருக்கும் இரா­ணுவ அதி­காரி ஒரு­வரை இலங்கை இரா­ணு­வத்தின் தள­ப­தி­யாக நிய­மித்த செயல் இலங்­கையில் அமெ­ரிக்க இரா­ணுவ ஒத்­து­ழைப்­பையும், முத­லீட்­டையும் பாதிக்­கக்­கூடும் என்று செவ்­வாய்­க்கி­ழமை அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­கள சிரேஷ்ட அதி­காரி ஒருவர் எச்­ச­ரிக்கை செய்­த­தாக ராய்ட்டர்ஸ் செய்­தி­யொன்று தெரி­விக்­கி­றது.

இந்த நிலை­வரம் தொடர்பில் வாஷிங்­டனில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய அந்த அதி­காரி, சவேந்­திர சில்­வாவின் நிய­மனம் இலங்­கையின் நகர்ப்­புறப் போக்­கு­வ­ரத்து முறை­மை­யையும், உட்­கட்­ட­மைப்­பையும் நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வதை நோக்­க­மாகக்கொண்ட மிலே­னியம் செலென்ஞ் கோப்­ப­ரே­ஷனின் 48 கோடி அமெ­ரிக்க டொலர்கள் நிதியில் நீடித்த விளை­வு­களைக் கொண்­டி­ருக்கும்” என்று குறிப்­பிட்டார்.

அந்த உதவி தொடர்­பான உடன்­ப­டிக்கை இலங்கை அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­திற்­காகக் காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

மிகவும் சூடே­றி­யி­ருக்கும் அர­சியல் சூழ்­நி­லை­யொன்றில் சில அர­சியல் பிரி­வுகள் தேசி­ய­வாத உணர்­வு­களைக் கிளப்­பக்­கூ­டிய செயல்­களின் மூல­மாகப் பெரு­ம­ளவு பய­ன­டை­யலாம் என்று நம்­பு­கின்­றன. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நன்கு விப­ர­மாக ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்ட பதிவைக் கொண்­டி­ருக்கும் இரா­ணுவ அதி­காரி சவேந்­திர சில்­வாவை பத­வி­யு­யர்த்­து­வதன் மூல­மாக தேசி­ய­வாத துருப்­புச்­சீட்டை பயன்­ப­டுத்­து­வது மிகவும் துர­திர்ஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். நாம் மிகுந்த குழப்­ப­ம­டைந்­தி­ருக்­கிறோம்” என்றும் அந்த அதி­காரி குறிப்­பிட்டார்.

இலங்­கையின் உள்­நாட்டுப் போரின் இறு­திக்­கட்­டங்­களில் இரா­ணு­வத்தின் பிரி­வொன்­றுக்குத் தலைமை தாங்கி, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை வெற்­றி­க­ர­மாக நடத்­தி­ய­தாக சவேந்­திர சில்வா புக­ழப்­ப­டு­கின்றார். மோதல்­களின் இறு­திக்­கட்­டங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கான குடி­மக்கள் கொல்­லப்­பட்­டனர். வைத்­தி­ய­சா­லைகள் உட்­பட அர­சாங்­கத்­தினால் யுத்த சூனிய வல­யங்கள் என்று பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­க­ளிலும் கூட இரா­ணு­வத்தின் விமான ஷெல் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.

1984 ஆம் ஆண்டில் இலங்கை இரா­ணு­வத்தில் இணைந்த சவேந்­திர சில்வா இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரித்­துள்ளார். இரா­ணுவத் தள­பதிப் பத­வியை ஏற்­ப­தற்கு முன்­ன­தாக கடந்த ஜன­வரி தொடக்கம் இரா­ணு­வத்தின் அலு­வ­லகப் பிர­தா­னி­யாகப் பணி­யாற்­றியவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மனித உரி­மை­களை மீறி­யவர் என்று நன்கு அறி­யப்­பட்­டவர் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருப்­பா­ரே­யானால், இலங்­கை­யுடன் உறு­தி­யான இரா­ணுவ உற­வு­களை வளர்த்­தி­ருக்கும் நாம் இனிமேல் செய்­யக்­கூ­டிய காரி­யங்­க­ளுக்கு ஒரு மட்­டுப்­பாடு இருக்கும்” என்றும் அந்த இரா­ஜாங்கத் திணைக்­கள அதி­காரி செய்­தி­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.

தலை­யீட்டை ஆட்­சே­பிக்கும் இலங்கை ஆனால் இலங்­கையின் இரா­ணுவத் தள­பதி நிய­மனம் அரச தலை­வ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட இறை­மை­யு­டைய ஒரு தீர்­மா­ன­மாகும் என்று கூறி­யி­ருக்கும் இலங்கை வெளியு­றவு அமைச்சு, இலங்­கையின் அர­சாங்க சேவையில் பத­வி­யு­யர்வு தொடர்­பான உள்­ளக நிர்­வாக செயன்­மு­றை­க­ளிலும், தீர்­மா­னங்­க­ளிலும் வெளிய­மைப்­புக்கள் செல்­வாக்குச் செலுத்த முயற்­சிப்­பது அநா­வ­சி­ய­மா­னதும், ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­து­மாகும் என்றும் அமைச்சு கூறி­யி­ருக்­கி­றது.

இந்த நிய­மனம் தொடர்பில் குறிப்­பிட்ட சில இரு­த­ரப்பு பங்­கா­ளி­க­ளாலும், சர்­வ­தேச அமைப்­புக்­க­ளாலும் (குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டையில்) அக்­கறை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யது: சர்­வ­தேச சமூ­கத்தின் பொறுப்பு வாய்ந்த சகல உறுப்­பி­னர்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட இயற்கை  நீதிக்­கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணா­ன­தாகும்” என்று வெளியு­றவு அமைச்­சினால் செவ்­வா­யன்று விடுக்­கப்­பட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

சவேந்­திர சில்­வா­விற்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் முறைப்­பா­டுகள் மாத்­தி­ரமே என்­பதை அவ­ரது நிய­மனம் தொடர்­பாக ஆட்­சே­பிக்­கின்ற அமெ­ரிக்­காவும், ஏனைய தரப்­பி­னரும் விளங்­கிக்­கொள்ள வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்கும் முன்னாள் கடற்­படைத் தள­ப­தியும், கடல்சார் பாது­காப்­புத்­துறை நிபு­ண­ரு­மான அட்­மிரல் கலா­நிதி ஜயந்த கொலம்­பகே, மேற்­கத்­தேய நீதி நியா­யா­திக்­கத்தில் முறைப்­பா­டுகள் நிரூ­பிக்­கப்­ப­டாத பட்­சத்தில் எந்த ஒரு­வ­ரையும் குற்­றப்­பொ­றுப்­பு­டை­யவர் என்­று­கூற முடி­யாது.

இன்­று­வ­ரையில் எந்­த­வொரு விசா­ர­ணை­யையும் அடிப்­ப­டை­யாகக்கொண்டு சவேந்­திர சில்­வா­விற்கு எதி­ராகப் பிரத்தி­யேக குற்­றச்­சாட்­டுக்கள் எவையும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. ஐ.நா.வில்  முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் புலம்­பெயர் தமி­ழர்­களால் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் ஆகும். மேற்கு நாடு­களின் அர­சாங்­கங்­களின் ஆத­ரவைத் திரட்­டு­வ­தற்­கான செயல்­களில் ஈடு­ப­டு­வதன் மூல­மாக சுதந்­திர தமிழ் ஈழ­மொன்­றுக்­கான குறிக்­கோளை அடையும் முயற்­சி­களைத் தொடர்­வ­தற்குப் புலம்­பெயர் தமிழ் சமூ­கத்­த­வர்கள் விடு­தலைப் புலி­களின் சார்பில் முன்னர் சேக­ரிக்­கப்­பட்ட பணத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்” என்றும் கூறினார்.

ஜெனரல் சவேந்­திர சில்­வாவை இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மித்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் செயல் மிகவும் சரி­யா­னதே. ஏனென்றால் அவர் மிகவும் தகு­தி­யா­னவர் என்­ப­துடன், பத­வி­யு­யர்வைப் பெறு­வ­தற்­கான வரி­சையில் இருந்தார். 2006,  2009 போரின் போது ஜெனரல் சில்வா முன்­ன­ரங்க தள­ப­தி­யாக இருந்­த­துடன், போரை வெற்­றி­க­ர­மாக முடி­விற்குக் கொண்­டு­வந்­த­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் விளங்­கினார்.

விடு­தலைப் புலிகள் இலங்கை ஆயு­தப்­ப­டை­க­ளினால் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டதை அடுத்து இலங்­கையில் உயிர் வாழ்­வ­தற்­கான உரிமை மீள நிலை­நாட்­டப்­பட்­டது என்­பதை உலகம் புரிந்­து­கொள்ள வேண்டும். 1980 களில் போர் தொடங்­கிய காலம் முதல் அது முடி­விற்கு வந்த 2009 வரை சகல இனங்­க­ளையும் சேர்ந்த குடி­மக்கள், அர­சாங்­கத்­து­ருப்­புக்கள், தீவி­ர­வாத இயக்­கத்தின் உறுப்­பி­னர்கள் உட்­பட 200 இற்கும் அதி­க­மா­ன­வர்கள் ஒவ்­வொரு மாதமும் உயி­ரி­ழந்து கொண்­டி­ருந்­தார்கள்.

ஆயு­தப்­ப­டை­களின் வெற்­றி­க­ர­மான நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக சகல இனத்­த­வர்­களும் இப்­போது உயிர் வாழ்­வ­தற்­கான உரி­மையை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்த உரிமை மனித உரி­மை­களை விடவும் கூடு­த­லான அள­விற்கு முக்­கி­ய­மா­ன­தாகும். ஏனென்றால் மனித உரி­மை­களை அனு­ப­விப்­ப­தற்கு மக்கள் முதலில் உயி­ருடன் இருக்க வேண்டும் என்று அட்­மிரல் கொலம்­பகே கூறினார்.

ஜெனரல் சில்­வா­விற்கு இரா­ணுவத் தள­பதி பதவி உகந்த வழி­மு­றை­களின் ஊடா­கவே வந்­தி­ருக்­கி­றது. இரா­ணு­வத்தின் அலு­வ­லகப் பிர­தானி இரா­ணுவத் தள­ப­தி­யாகப் பதவி உயர்த்­தப்­ப­டு­வது வழ­மை­யான நடை­மு­றை­யாகும் என்றும் கொலம்­பகே குறிப்­பிட்டார்.

2010ஆம் ஆண்டில் ஜெனரல் சில்வா ஐ.நா.வில் இலங்­கையின் பிரதி நிரந்­தரப் பிர­தி­நி­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட போது அவர் சம்­பந்­தப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்ற போர்க்­குற்­றங்கள் குறித்து அமெ­ரிக்­காவோ அல்­லது ஐக்­கிய நாடுகள் சபையோ பிரச்­சினை கிளப்­பா­தது குறித்து முன்னாள் கடற்­படைத் தள­பதி ஆச்­சர்யம் தெரி­வித்தார். அப்­போ­தைய ஐ.நா. செய­லாளர் நாய­கத்­தினால் சவேந்­திர சில்வா அமைதி காக்கும் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான ஐ.நா. உயர்­மட்ட ஆலோ­சனைக் குழுவில் ஒரு உறுப்­பி­ன­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

ஜெனரல் சில்­வாவின் ஆக்­க­பூர்­வ­மான ஆலோ­ச­னை­களின் விளை­வாக அந்த நேரத்தில் ஐ.நா. அமை­தி­காக்கும் படை­யி­ன­ருக்கு சம்­பள அதி­க­ரிப்­பொன்றும் வழங்­கப்­பட்­ட­தாக இலங்கை இரா­ணு­வத்தின் இணை­யத்­தளம் மூலம் அறி­யக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

மேலும், உலகின் பல பாகங்­க­ளிலும் நில­வு­கின்ற நிலப்­ப­ரப்பு ஆட்­சி­யு­ரிமை தொடர்­பான தக­ரா­று­க­ளையும், அமை­தி­காக்கும் பணி விவ­கா­ரங்­க­ளையும் கையாள்­கின்ற ஐ.நா.வின் விசேட அர­சியல் மற்றும் கால­னித்­துவ நீக்க கமிட்­டிக்­கான இலங்­கையின் மாற்றுப் பிர­தி­நி­தி­யா­கவும் அவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

ஜெனரல் சில்­வாவின் முன்­மு­யற்­சியின் விளை­வா­கவே மத்­திய ஆபி­ரிக்கக் குடி­ய­ர­சிலும், தென்­சூ­டா­னிலும் இலங்கை கடற்­படைக் கப்­பல்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­துடன், ஐ.நா. பணி­ய­கங்­களில் இரா­ணுவ வைத்­தி­ய­சா­லை­களும் அமைக்­கப்­பட்­டன.

இவை­யெல்­லா­வற்­றுக்கும் மேலாக ஜெனரல் சில்வா ஹார்வட் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஒரு பழைய மாணவர். தேசிய மற்றும் சர்­வ­தேச பாது­காப்பின் சிரேஷ்ட நிறை­வேற்று அதி­கா­ரி­க­ளுக்­கான செயற்றிட்­டத்தை வெற்­றி­க­ர­மாகப் பூர்த்தி செய்தார். மனி­த­வள முகா­மைத்­து­வத்தில் டிப்­ளோமா பட்­டத்தைப் பெற்­றி­ருக்கும் அவர், அமெ­ரிக்­காவில் உள­வியல் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான கல்­வியில் தேர்ச்சி பெற்றார். ஜேர்­ஜீ­னியா மாநி­லத்தின் குவாண்­டி­கோவில் உள்ள புகழ்­பெற்ற மரைன் கோப்ஸ் போர்க்­கல்­லூ­ரியில் ஒரு வருகை விரி­வு­ரை­யா­ள­ரா­கவும் இருந்தார்.

அமெ­ரிக்­காவின் ஆட்­சே­பனை இலங்­கைக்குப் பாத­க­மாக அமை­யுமா என்று கேட்ட போது, அவ்­வாறு அமை­யாது என்று அட்­மிரல் கொலம்­பகே கூறினார். இந்து சமுத்­தி­ரத்­திலும், இந்தோ  பசுபிக் பிராந்­தி­யங்­க­ளிலும் அமெ­ரிக்­கா­விற்கு இருக்­கின்ற புவிசார் தேவை­களின் விளை­வாக இலங்­கைக்கு அமெ­ரிக்கா தேவை என்­ப­தையும் விட, கூடு­த­லான அள­விற்கு அமெ­ரிக்­கா­விற்கே இலங்கை தேவைப்­படும்.

அமெ­ரிக்­கா­விற்கு சவா­லாக இருக்கும் சீனாவின் ஈடு­பா­டு­களை இலங்­கையில் தடுப்­பதில் அமெ­ரிக்கா அக்­க­றை­யுடன் இருக்­கி­றது என்று அவர் சொன்னார். கடற்­ப­ரப்பில் சமச்­சீ­ரற்ற போர்­முறை என்ற நூலை எழு­திய அட்­மிரல் கொலம்­ப­கேயின் கூற்­றின்­படி, விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான இலங்­கையின் இரா­ணுவ நட­வ­டிக்­கையை முழு­மை­யாக ஆத­ரிக்­காமல், இலங்கை மனித உரி­மை­களைப் பேண­வேண்டும் என்று பகி­ரங்க நிலைப்­பாடு ஒன்றை அமெ­ரிக்கா விடுத்­தி­ருந்த போர்க்­கா­ல­கட்­டத்தில்கூட இலங்­கைக்கும், அமெ­ரிக்­கா­விற்கும் இடை­யி­லான உற­வுகள் யதார்த்­த­பூர்­வ­மா­ன­தா­கவே இருந்­து­வந்­தது. அமெ­ரிக்கா எமக்கு விமா­னங்­களைத் தந்­தது.

ஆனால் உதி­ரிப்­பா­கங்­களைத் தர­வில்லை. புஷ் மாஸ்டர் துப்­பாக்­கி­களை எமக்குத் தந்த அமெ­ரிக்கா, அதற்­கான வெடி­பொ­ருட்­களைத் தர­வில்லை. நாம் அவற்றை வேறு நாடு­க­ளி­ட­மி­ருந்து மிக உயர்ந்த விலைக்கு வாங்க வேண்­டி­யி­ருந்­தது. ஆனால் ஆழ்­க­டலில் விடு­த­லைப்­பு­லி­களின் ஆயு­தக்­கப்பல் தொடர்­பான துல்­லி­ய­மான புல­னாய்வுத் தக­வல்­களை அமெ­ரிக்கா எமக்கு 2007 ஆம் ஆண்டில் தந்­து­த­வி­யது.

அந்த ஆயு­தக்­கப்­பல்கள் இலங்கைக் கடற்­ப­டை­யினால் நிர்­மூலம் செய்­யப்­பட்ட பின்னர் போரின் நிலை­வரம் முற்­று­மு­ழு­தாக மாறி­யது. இதை இலங்­கை­யர்கள் ஒத்­துக்­கொள்ள வேண்டும்” என்றும் அட்­மிரல் கூறினார்.

படை­களின் அந்­தஸ்து தொடர்­பான உடன்­ப­டிக்­கை­யிலும் (சோபா), படை­க­ளுக்­கி­டை­யி­லான ஒத்­து­ழைப்புச் சேவைகள் தொடர்­பான உடன்­ப­டிக்­கை­யிலும் (அக்ஸா), மிலெ­னியம் செலென்ஞ் கோப்­ப­ரேஷன் உடன்­ப­டிக்­கை­யிலும் இலங்­கை­யுடன் கைச்­சாத்­திட வேண்­டு­மென்று அமெ­ரிக்­காவே அக்­க­றை­யுடன் இருக்­கி­றதே தவிர, இலங்கை அக்­கறை காட்­ட­வில்லை என்றும் கொலம்­பகே சுட்­டிக்­காட்­டினார்.

இத்­த­கைய பின்­பு­லத்தில் நோக்­கு­கையில், சவேந்­திர சில்­வாவின் நிய­மனம் தொடர்­பான அமெ­ரிக்­காவின் ஆட்­சே­பனை வெறு­மனே ஒரு பாசாங்­குதான். சிலோன் டுடே பத்­தி­ரிகை செவ்­வா­யன்று தீட்­டிய ஆசி­ரியர் தலை­யங்­கத்தில் அமெ­ரிக்கா சர்­வ­தேசக் குற்­ற­வியல் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வில­கி­யி­ருக்­கவும், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யி­லி­ருந்து வெளியேற எடுத்த தீர்­மா­னத்தை நினை­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கா தனது இரா­ணுவ அதி­கா­ரி­களை வேறெந்­த­வொரு தரப்­பி­ன­ரதும் விசா­ர­ணையின் கீழ் வைப்­ப­தற்கு முழு­மை­யாக எதிர்ப்புத் தெரி­விக்­கி­றது என்று சிலோன் டுடே கூறி­யி­ருக்­கி­றது.

ஜெனரல் சில்­வாவின் நிய­மனம் தொடர்பில் அமெ­ரிக்­கா­வி­னாலும், ஐக்­கிய நாடு­க­ளாலும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட நிலைப்­பாடு சிங்­கள பௌத்த தேசி­ய­வாத சக்­தி­க­ளுக்கு, 2019 நவம்பர் – டிசம்­பரில் நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்தல் வேட்­பா­ளர்­க­ளுக்கு, குறிப்­பாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ரான போர்க்­கால பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விற்கு உத­வக்­கூடும்.

கோத்­த­பாய தனது பிர­தான தேர்தல் பிர­சாரத் தொனிப்­பொ­ருட்­க­ளாக தேசி­ய­வாதம், இறைமை, சுயா­தி­பத்­தியம், பாது­காப்பு ஆகி­ய­வற்­றையே முன்­வைக்­கிறார்.

ஆனால் அவையெதுவும் அமெரிக்காவைத் தடுத்து விடப்போவதில்லை. அமெரிக்கா கோத்தபாயவிற்கு எதிரானது என்று நினைப்பது தவறானது என்று அட்மிரல் கொலம்பகே கூறினார். இலங்கையில் போரை அமெரிக்கா ஆதரிக்கவில்லை.

ஆனால் போர் நடவடிக்கைகளை மிகுந்த உயர்மட்டத்திலிருந்து தனது பிரஜைகளில் ஒருவர் வழிநடத்திக் கொண்டிருந்ததை வாஷிங்டன் ஆட்சேபிக்கவில்லை. கோத்தபாய ராஜபக் ஷவிற்கு எதி ராக அந்த நேரத்தில் அமெரிக்கா குற்றச்சாட்டுக்கள் எவற்றையும் முன்வைக்கவில்லை என்று கூறி, கோத்த பாயவின் இரட்டைப் பிரஜாவுரிமையை நினைவுபடுத் தினார் அட்மிரல் கொலம்பகே.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், உதவி இராஜாங்க செயலாளருமான ரொபேட் பிளேக், கோத்தபாயவின் ஒழுங்கமைக்கும் ஆற்றல்களை வெகு வாகப் பாராட்டியதுடன் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இலங்கையுடனான இராணுவ உறவுகளை அமெரிக்கா துண்டித்தது குறித்து கவலை வெளியிட்டிருந்தார்.

இலங்கை யுடனும், பாகிஸ்தானுடனுமான இராணுவ உறவுகளைத் துண்டித்தமை இவ்விரு நாடுகளிலும் அமெரிக்கப் பாது காப்பு நலன்களுக்குப் பின்னடைவாக அமைந்தது. அவ்வாறு உறவுகள் துண்டிக்கப்பட்டதற்குப் பின்னரான கால கட்டத்தில் இலங்கையிலும், பாகிஸ்தானிலும் உயர் பதவி களை வகித்த ஒரு தலைமுறை இராணுவ அதிகாரிகள் முழுப்பேருடனுமான தொடர்புகளை அமெரிக்கா இழந்தது என்று பிளேக் அந்த இலங்கை விஜயத்தின்போது கூறி யிருந்தார்.

எனவே ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் தெரிவிக்கப்படுகின்ற ஆட்சேபனைகளினால் சிறு சச்சரவு உருவானாலும் கூட, இலங்கைக்கும் அமெரிக் காவிற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என்ற முடிவிற்கு வரமுடியும்.

பி.கே.பாலச்சந்திரன்