2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும். ‘நல்லாட்சி அரசாங்கம்’ நல்லாட்சியைத் தராவிட்டாலும், தமிழர்களுக்கு நல்வாழ்வைத் தருவார்கள் என்று, தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். ‘தீபாவளிக்குள் தீர்வு, ‘பொங்கலுக்குள் புதிய அரசமைப்பு’ என்று ‘புலுடா’க்கள் தொடர்ந்தன. இன்று, புதிய அரசமைப்புக்கான வாய்ப்பு, முழுமையாக இல்லாது போய்விட்டது. புதிய அரசமைப்பின் சாத்தியமின்மையை, இலங்கை அரசியலைப் புரிந்தவர்கள், இலகுவாக அறிந்து கொள்வர். நல்லாட்சி அரசாங்கம், தனது முதலாவது ஆண்டில் பயணித்த திசையே, புதிய அரசமைப்பைக் ...
Read More »கொட்டுமுரசு
அதிகாரம் இல்லாத ஜனாதிபதி பதவிக்காக, ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்?
ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, அக்கட்சியின் சார்பில் நிறுத்தப் போவது, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையா அல்லது, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவையா அல்லது, சபாநாயகர் கரு ஜயசூரியவையா என்பது, இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதன் வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என, அக்கட்சியில் பெரும்பாலானவர்கள் கோருவதாகத் தெரிகிறது. ஆனால், அக்கட்சியை வழிநடத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது சகோதரரான கோட்டாவை, இன்னமும் அங்கிகரிக்கவில்லை. கோட்டா, உண்மையிலேயே, ...
Read More »அமைச்சரவைத் தீர்மானங்கள் !
கடந்த 2019.08.06 செய்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, 01. இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புத் துறையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 8 ஆவது விடயம்) சமத்துவ அடிப்படையிலும் பரஸ்பர நன்மைகளை அடிப்படையாக கொண்டும் விஞ்ஞான தொழில்நுட்பம் புதிய உற்பத்தி தயாரிப்புத் துறையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாளத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக அமைச்சரவை அந்தஸ்து ...
Read More »தமிழர் வரலாற்றை பறைசாற்றும் வகையில் மீண்டுமோர் ஆதாரம் கண்டுபிடிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் வெலிக்கந்த பிரதேச செயலக எல்லைகுட்பட்ட பழம்பெரும் பிள்ளையார் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயம் மட்டக்களப்பு வெலிக்கந்தையிருந்து வடமுனைக்கு செல்லும்போது கிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதனை மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் ஸ்ரீ ரமண மகரிசி நற்பணி மன்றத்தினர் இவ்வாலயம் சம்மந்தமான வரலாற்று பொக்கிஷங்களை தேடித்தொகுத்து ஆவணப்படுத்தி ஆலயத்தைக் கண்டு பிடித்துள்ளனர். 1900 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் தம்மங்கடவையிலிருந்து வந்தாறுமூலை வரையான போக்குவரத்து பாதையில் மாந்திரை ஆற்றங்கரையில் மதுரை மரத்தின் கீழ் இந்துக்களால் வைத்து வளிபடப்பட்ட ...
Read More »சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு அரசியல் பயணம்…
முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார் சுஷ்மா சுவராஜ். நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு ...
Read More »விதி ஒரு கதவை மூடினால், நம்பிக்கை பல்லாயிரம் கதவுகளைத் திறக்கும்!
பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், ஏனைய இழப்புகள் தொடர்பான விவரங்களைத் திரட்டவுள்ளதாக, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது, தமிழ் மக்கள் எவருக்குமே, சிறுகாயங்கள் கூட ஏற்படாதவாறே, யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, யுத்தத்தை வழி நடர்த்தியவர்கள் கூறினார்கள். அதேவேளை, சுமார் 40,000 வரையிலான அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என, ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை கூறியது. ஆனாலும், இலட்சம் தாண்டிய தமிழர்களது உயிர்கள் காவு கொள்ளப்பட்டு உள்ளன ...
Read More »கோத்தபாய கடவுச்சீட்டைப் பெற்றமை தொடர்பில் கிளம்பும் பல கேள்விகள்!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ அவரது இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து தவிர்க்கப்பட்ட கடவுச்சீட்டொன்றை கடந்த மே மாதம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் கேள்விகள் கிளப்பப்பட்டிருக்கின்றன. தான் இலங்கைச் சட்டத்தின் கீழ் இப்போது ஒரு இரட்டைப் பிரஜையல்ல என்பதற்கு இந்தக் கடவுச்சீட்டு சான்று என்று கடந்தவாரம் ராஜபக் ஷ செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் இரட்டைக் குடியுரிமையுள்ள நபர் கள் வழமையாக இலங்கைக் குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு விரும்பினால் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் முறைப்படியான விண்ணப்பத்தைச் செய்ய வேண்டும் ...
Read More »முஸ்லிம் தலைமைகளின் இராஜினாமா நாடகம்!
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் அமீரலி, அப்துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர் ஜுலை 29ஆம் திகதி மீண்டும் அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள். ஆயினும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பைசால் காசிம், ஹரிஸ், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் களையும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. ...
Read More »உறவுகளை தேடி 10 வருடங்களாக போராடும் மக்கள்!
தமது அன்புக்குரியவர்களை தொலைத்துவிட்டு அவர்களை மீட்டுத்தருமாறு கோரி போராடிக்கொண்டிருக்கும் காணாமல்போனவர்களின் உறவுகள் தற்போது பாரிய விரக்திநிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். தமது காணாமல்போன உறவுகளை மீண்டும் காணவே முடியாதா, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாதா, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இந்த மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். யுத்தகாலத்திலும் அதன் முடிவிலும் இவ்வாறு பலர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பில் சுமார் 19ஆயிரம் முறைப்பாடுகள் எழுத்துமூலம் காணப்படுகின்றன. கடந்த ...
Read More »இருப்புக்கான போராட்டம்!
தமிழர் தரப்பு அரசியலுக்கு வெளியிலும் முட்டுக்கட்டைகள். உள்ளேயும் பல முட்டுக்கட்டைகள். இந்த முட்டுக்கட்டைகளைக் கடந்து நாடளாவிய அரசியல் வெளியில் உறுதியாகவும் வலுவாகவும் அது காலடி எடுத்து வைக்க வேண்டியது அவசியம். இது காலத்தின் தேவையும்கூட. ஏழு தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வந்துள்ள தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை, அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தி, அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக அதனை அவர்கள் உதாசீனம் செய்வதே வரலாறாக உள்ளது. தமிழ் மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள், அவர்கள் சகல உரிமைகளுக்கும் உரித்துடையவர்கள், அவர்கள் சிறுபான்மையாக ...
Read More »