மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் வெலிக்கந்த பிரதேச செயலக எல்லைகுட்பட்ட பழம்பெரும் பிள்ளையார் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயம் மட்டக்களப்பு வெலிக்கந்தையிருந்து வடமுனைக்கு செல்லும்போது கிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதனை மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் ஸ்ரீ ரமண மகரிசி நற்பணி மன்றத்தினர் இவ்வாலயம் சம்மந்தமான வரலாற்று பொக்கிஷங்களை தேடித்தொகுத்து ஆவணப்படுத்தி ஆலயத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.
1900 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் தம்மங்கடவையிலிருந்து வந்தாறுமூலை வரையான போக்குவரத்து பாதையில் மாந்திரை ஆற்றங்கரையில் மதுரை மரத்தின் கீழ் இந்துக்களால் வைத்து வளிபடப்பட்ட ஆலயமே இந்த ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் ஆகும்.
இவ்ஆலயத்தை சுவாமி ஐயம்பிள்ளை என்பவரின் தனி முயற்சியினாலும் அப்போதிருத இந்து மக்களின் ஒத்துழைப்புடனும் மூலஸ்த்தானத்துடன் கூடிய மண்டபத்துடன் ஆலயம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலையும் பிரதிட்சை செய்யப்பட்டது.
1925 ஆண்டு முத்துக்கல் உடையாரும் பொதுமக்களும் சேர்ந்து ஆலயத்தை அபிவிருத்தி செய்து ஆலத்துக்குரிய மடமும், மண்டபமும் அமைத்து 1929 ஆண்டு இந்து கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆலயத்துக்கு நிரந்தரமாக அர்ச்சகர் நியமித்து தினப்பூசையுடன் விசேடபூசைகளும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
விநாயகரும் அருள்வழங்க மட்டக்களப்பு, வந்தாறுமூலை, வாழைச்சேனை, தம்மங்கடவை, முத்துகல் போன்ற பல பகுதிகளிலுள்ள பொதுமக்கள் சேர்ந்து ஆலயத்துக்கு வருடாந்த அலங்கார உற்சவத்தை ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பாக பிராமண அர்சகரைக்கொண்டு மேளதாள வாத்தியம் முளங்க மிகவும் விமர்சையாகவும் கலாசார நிகழ்வுகளோடும் திருவிழா கொண்டாடி தீர்த்த உற்சவம் ஆடிமாதம் பூரணைதினத்தில் மகாவலி கங்கை மாந்திரை ஆற்றில் ஆடி அன்னதானமும் வழங்கி மகிழ்து வந்தள்ளார்கள்.
இவ்வாறு சிறப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இடம் பெற்றுவந்த பூசை, உற்சவ நிகழ்வுகள் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயரவும் ஆலயம் பூசை வழிபாடு இன்றி தற்போது காடு மண்டி காணப்படுகிறது.
எனவே எமது புராதான பொக்கிசங்களையும் தமிழினம் வாழ்ந்த இடங்களையும் மீளவும் பொறுப்பேற்று இடிபாடுகளை திருத்தி பாதுகாக்க வேண்டியது தலையாய கடமை என சமூக ஆர்வலர்களும், நலன்விரும்பிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ ரமண மகரிசி நற்பணி மன்றமும் இவ்வாலயம் சம்மந்தமான வரலாற்று பொக்கிஷங்களை தேடித்தொகுத்து ஆவணப்படுத்துதியுள்ளது. மேலும் இந்த வரலாற்றுப் பொக்கிசமான ஆலயத்தை பழைய நிலைக்கு புணரமைத்து வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றுவதற்கு கிழக்கு இந்து பெருமக்களிடமிருந்து ஆலய அபிவிருத்திக்கான உதவிகளை வேண்டி நிற்பதாக இதன் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.