ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் சரியாக மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமென்றால், அதற்கு பிறகு இலங்கை அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்ற வெறுப்பூட்டும் போக்குகளுக்கு சிங்கள – பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று மாதகாலத்தில் அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான காரணிகளில் சிங்கள – பௌத்த மேலாண்மைவாதம் முதல்நிலை வகித்துவருகிறது. அதன் முன்னரங்க சேனைகளாக பிக்குமார் விளங்குகிறார்கள். அரசியலில் பிக்குமாரின் ஆதிக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வளர்ந்த ...
Read More »கொட்டுமுரசு
சந்தேகநபர்கள் தொடர்பான அறிக்கையை கோரியுள்ள சட்டமா அதிபர்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில், விரிவான அறிக்கையொன்றை தம்மிடம் வழங்குமாறு, சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா அறிவுறுத்தியுள்ளார். பதில் பொலிஸ்மா அதிபருக்கே, சட்டமா அதிபர், இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதற்கமைய, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் எத்தனை பேர், அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட காரணங்களை உள்ளடக்கிய தகவல்களை தமக்கு அனுப்புமாறு, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை இந்த மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சட்டமா அதிபரின் ...
Read More »கல்முனையும் கன்னியாவும்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழுமையான அதிகாரங்களுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தல் என்பது, அப்பிரதேச தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த விடயம் தொடர்பில், அப்பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களிடையே அபிப்பிராய பேதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அண்மையில் இந்த விடயம் சூடுபிடித்தது. இது, இன்று நேற்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையோ, இன்று நேற்று உருவான பிரச்சினையோ அல்ல. 1989ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட காலமாக அப்பிரதேச தமிழ் மக்களாலும் தலைமைகளாலும் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையாகும். இதுவரை காலமும் பதவிக்கு வந்த எந்த ...
Read More »மென்வலு யுத்தம்!
விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகின்றன. ஆனால் உண்மையில் யுத்தம் முடிவுக்கு வரவில்லை. அது மறுவடிவத்தில் சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ்மக்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதையே உணர முடிகின்றது. ஆனால், இது ஆயுதமேந்திய யுத்தமல்ல. பதிலாக மென்வலு சார்ந்த யுத்தம். ரத்தம் சிந்தாதது. எனினும் மோசமானது. இன அழிப்பை அப்பட்டமான நோக்கமாகக் கொண்டது. அந்த வகையில் பௌத்த மதத்தைத் திணிக்கவும், தமிழ்மக்களின் தாயக மண்ணைக் கபளீகரம் செய்வதற்காகவும் இந்த மென்வலு யுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் ...
Read More »உழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர்!
அண்ணாச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னை நகரிலுள்ள சிறிய கிராமத்தில பிறந்தவராவார். தனது 12 வயதில் இருந்து உழைக்க ஆரம்பித்தார். அப்போது போக்குவரத்து வசதி கூட இல்லாத அந்த அந்த கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னைக்கு வந்த ராஜகோபால், முதலில் ஒரு சிறிய ஹோட்டல் ஒன்றில் மேசை துடைக்கும் பணியாளராகவே தனது பணியை தொடங்கினார். பின்னர் ஹோட்டல் டீ மாஸ்டருடன் பழகி டீ போடுவது எப்படி என்பதை கற்று கொண்டு டீ மாஸ்டராக மாறினார். இதன் பின்னர் பலசரக்குக்டை ஒன்றை ...
Read More »கன்னியா: அடிபணியவைத்து அபகரிக்கப்படுகிறதா?
திருகோணமலை, கன்னியாவில் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிக்க முற்படும் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழர்கள் பெருந்திரளாக நேற்று முன்தினம் (16) அணிதிரண்டிருந்தனர். பாதுகாப்புத் தொகுதியினரின் பல்வேறு கெடுபிடிகள், சூழ்ச்சிகள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுக்கு மத்தியில், இனமத வேறுபாடுகள் கடந்து, தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டிருந்தமை புறமொதுக்கி விடக்கூடிய செய்தி அல்ல! இலங்கையின் பிரபல சுற்றுலாத் தலமாகக் காணப்படும் கன்னியா வெந்நீரூற்றுத் தலம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குள் இருப்பதுடன், பட்டினமும் சூழலும் நகர சபையே இதனை நிர்வகித்தும் வந்தது. இருப்பினும், 2015ஆம் ஆண்டு ...
Read More »விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது!
ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு; கேள்வி:- தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைமையொன்று அவசியம் என்பதில் உறுதியாக இருக்கின்றீர்களா? பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்னணியே மாற்றுத்தலைமை என்ற சொற்பதத்தினை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. எமது முன்னணி மட்டும் தான், போர் நிறைவடைந்ததன் ...
Read More »கூட்டமைப்பும் பேரம் பேசலும் சாணக்கியமும்!
மீண்டும் ஒருமுறை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காப்பாற்றி இருக்கிறது. இது தொடர்பில், பரவலாகப் பிரதானமான இருவேறுபட்ட கருத்துகள், தமிழ் மக்களிடையே நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தவறி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்து, தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட தமிழ் மக்களிடமிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தொடர்ந்து விமர்சித்துவரும், தீவிர தமிழ்த் தேசியவாதிகள் என்று ...
Read More »மஹிந்த ராஜபக்ஷவுக்குப் புரிந்ததா?
சுகவீனமடைந்திருந்த பிள்ளையைப் பார்க்கச் சென்ற தந்தையை, சுட்டுக் கொல்வது தான், இராணுவம் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் முறையா?” என்று சில நாள்களுக்கு முன்னர், ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ. ‘அக்மீமன உபானந்த வித்தியாலய’ என்ற பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், உதய பிரதீப்குமார என்பவர் பலியானதை அடுத்தே, மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். முன்னாள் கடற்படை சிப்பாயான பிரதீப்குமாரவின் பிள்ளை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். அந்தப் பிள்ளைக்குச் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகப் பாடசாலையில் இருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்தே, ...
Read More »மக்கள் பணத்தை மடிக்குள் புதைத்த மாநகரசபை முதல்வர்!
யாழ் மாநகரசபை முதல்வரின் பிரத்தியோகப் பாவனைக்கு என யாழ் மாநகரசபை நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட மடிக் கணனியின் பெறுமதி 6 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா என கண்டறியப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையிலேயே யாழ் மாநகரசபையினால் குறித்த விடயங்கள் தொடர்பில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரத்தியோகமாக தொழில்முறை சார்ந்து பயிற்றுவிக்கப்பட்ட வீடியோ படத் தொகுப்பாளர்கள் பயன்படுத்தக்கூடிய வசதிகளை உள்ளடக்கிய மிக அதிக பெறுமதிவாய்ந்த குறித்த Apple ; MR924PA/A மடிக்கணனி சாதாரண அலுவலக தேவைக்கு பயன்படுத்துவதற்காக யாழ் மாநகர முதல்வரினால் ...
Read More »