மென்வலு யுத்தம்!

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்து பத்து வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால் உண்­மையில் யுத்தம் முடி­வுக்கு வர­வில்லை. அது மறு­வ­டி­வத்தில் சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ்மக்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­டு­வ­தையே உணர முடி­கின்­றது.

ஆனால், இது ஆயு­த­மேந்­திய யுத்­த­மல்ல. பதி­லாக மென்­வலு சார்ந்த யுத்தம்.  ரத்தம் சிந்­தா­தது. எனினும் மோச­மா­னது. இன அழிப்பை அப்­பட்­ட­மான நோக்­க­மாகக் கொண்­டது. அந்த வகையில் பௌத்த மதத்தைத் திணிக்­கவும், தமிழ்மக்­களின் தாயக மண்ணைக் கப­ளீ­கரம் செய்­வ­தற்­கா­கவும் இந்த மென்­வலு யுத்தம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

இதில் ஒரு பக்கத் தாக்­குதல் மட்­டுமே தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. மறு­பக்கம், அந்தத் தாக்­கு­த­லுக்கு ஈடு கொடுக்க முடி­யாமல் தவிக்­கின்­றது; நிலை தடு­மாறி திகைத்து நிற்­கின்­றது.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் ஆயுத மோதல்­க­ளுக்குக் கார­ண­மா­ன இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண­வில்லை.  ரா­ணுவ மய­மான ஆட்சிப் போக்கில்  அதிக நாட்டம் கொண்­டி­ருந்த அந்த அர­சாங்­கத்தைத் தோற்­க­டித்து, நல்­லாட்­சியை உரு­வாக்­கிய மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கமும் அர­சியல் தீர்வு காண­வில்லை. பிரச்­சி­னை­க­ளுக்கு முடி­வேற்­ப­டுத்­த­வு­மில்லை.

இதனால், நாட்டில் நிரந்­தர அமை­திக்­கான வழித்­த­டங்கள் உரு­வா­க­வில்லை. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு உயிர் உடை­மைகள் மட்­டு­மல்­லாமல் பாரம்­ப­ரிய உறை­வி­டங்­க­ளையும், உரி­மை­க­ளையும் இழந்­துள்ள தமிழ் மக்­களின் வாழ்க்கை முழு­மை­யாக சீரா­க­வில்லை. யுத்த முடி­வுக்குப் பின்னர் ஏற்பட்­டி­ருக்க வேண்­டிய இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உண்­மை­யான நல்­லு­றவும், நல்­லி­ணக்­கமும், ஐக்­கி­யமும் ஏற்பட­வில்லை.

பாதிப்­புக்கள் மோச­மா­னவை

மாறாக ஆயுத ரீதி­யாக விடு­த­லைப்­ பு­லிகளை மௌனிக்க வைத்த பின்­ன­ணியில் சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான நிழல் யுத்தம், மென்­வலு வழி­மு­றையில் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த மென்­வலு யுத்தம் என்­பது ஆயுத மோதல்­களைப் போன்று நேர­டி­யாக மோது­வ­தல்ல; ரத்தம் சிந்தும் உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­வ­தல்ல; காய­ம­டை­தலால் உரு­வா­கின்ற பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வதும் அல்ல; இரு தரப்பு மோதல்­க­ளு­மல்ல. ஒரு தரப்பு தாக்­கு­த­லா­கவே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

ஆயுத மோதல்­க­ளின்­போது, மோதல்­களில் ஈடு­ப­டு­கின்ற இரு தரப்­புக்­க­ளிலும் உயி­ரி­ழப்­புக்­களும் சேதங்­களும் பாதிப்­புக்­களும் ஏற்­ப­டு­வது வழமை. அது பகி­ரங்­க­மான – வெளிப்­ப­டை­யான வன்­முறை சார்ந்­தது.

ஆனால் இந்த மென்­வலு யுத்தம் அல்­லது மென்­வலு தாக்­குதல் என்­பது ஒரு தரப்­பினால் மட்­டுமே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. அதன் பாதிப்­புக்கள் சிறு­பான்மை இன மக்­களின் சமூகரீதி­யா­னது, இனம்சார்ந்­தது, மதம்சார்ந்­தது, உள­வியல்ரீதி­யா­னது. மோச­மான உள நெருக்­கீ­டு­களை இந்த பாதிப்­புக்கள் ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன. இது வலியோர் முன்னால் மெலியோர் போன்ற நிலை­மைக்கு ஒப்­பா­னது.

ஆயுத மோதல்கள் இடம்­பெற்ற தரு­ணங்­களில் அரச படை­க­ளுக்கு ஏறக்­கு­றைய சம பலத்­துடன்  விடு­த­லைப்­பு­லிகள் காணப்­பட்­டனர். பல சந்­தர்ப்­பங்­களில் மேலோங்­கிய பல­முள்­ள­வர்­க­ளா­கவும் காணப்­பட்­டனர். யுத்த மோதல்கள் தொடர்­வ­தையும் இடை­ந­டுவில் தளர்­வ­டை­வ­தை­யும்­கூட, சில தரு­ணங்­களில் விடு­த­லைப்­பு­லி­களே தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக இருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் விடு­த­லைப்­பு­லி­களின் தளங்கள், இலக்­கு­களை நோக்கி நகர்ந்து முன்­னேறிச் சென்ற அரச படை­ய­ணி­களை முன்­னே­ற­வி­டாமல் தடுத்து அவர்­க­ளது முகாம்­களுக்குத் திரும்பிச் செல்­வ­தற்கு விடு­த­லைப்­பு­லிகள் தமது தாக்­குதல் பலத்தின் மூலம் நிர்ப்­பந்­தித்­தி­ருந்­தார்கள். இதனால்  ரா­ணுவ முகாம்­களை விட்டு அரச படைகள் வெளியில் வரு­வது விடு­த­லைப்­பு­லி­க­ளினால் தடுக்­கப்­பட்­டி­ருந்த நிலை­மையும் ஏற்பட்டிருந்தது.

பூனைக்குக் கொண்­டாட்டம்; எலிக்குத் திண்­டாட்டம்!

ஆனால் இந்த மென்­வலு யுத்­தத்தில் அதி­கார பலம், ஆயு­த­மேந்­திய படை­பலம் என்­ப­வற்­றுடன் எண்­ணிக்­கையில் மேலோங்­கிய நிலையில் அரச தரப்­பினர் மாத்­தி­ரமே வலிமை கொண்­ட­வர்­க­ளாகத் திகழ்­கின்­றனர். அதனால் தமிழ்மக்கள் மாத்­தி­ரமே பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். ஆதிக்­க­ மு­டை­ய­வர்­க­ளா­கிய அரச தரப்­பினர் பாதிக்­கப்­ப­டு­வ­தில்லை. இது பூனைக்குக் கொண்­டாட்டம்; எலி­க­ளுக்குத் திண்­டாட்டம் என்ற நிலை­மையை ஒத்­தது.

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் குறிப்­பாக நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் தமிழ்மக்கள் இதனால் மிக மோச­மான நிலை­மை­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். தமிழ்மக்­களின் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மான நிலையில் உரு­வாகி பத­வி­யேற்ற இந்த ஆட்­சி­யா­ளர்­களின் கைக­ளி­னா­லேயே அவர்கள் பல்­வேறு வழி­க­ளிலும் சமூக, பொரு­ள­ாதார, அர­சியல், மத ரீதி­யான வாழ்­வியல் நிலை­மை­களில் இம்­சிக்­கப்­ப­டு­கின்­றார்கள்.

ஆதிக்­கத்­திலும், அதி­கா­ரத்­திலும் மேலோங்­கிய நிலையில் தொடுக்­கப்­பட்­டுள்ள மென்வலு யுத்­தத்தில் எதிர்த் தரப்­பி­ன­ரா­கிய அர­சாங்­கத்தை சம பலத்­துடன் எதிர்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளாக அவர்கள் காணப்­ப­டு­கின்­றார்கள். அரச தரப்­பி­ன­ரு­டைய நெருக்­கீ­டு­களை எதிர்க்­கவோ, அவற்றைத் தடுத்து நிறுத்­தவோ முடி­யாத கையறு நிலை­மைக்கு ஆளாகி  இருக்­கின்­றார்கள். அதற்­கு­ரிய அர­சியல் பலம் அவர்­க­ளிடம் இல்­லா­தி­ருப்­பதே இதற்குக் காரணம்.

அர­சுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யுள்ள தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு, நெருக்­க­டிகள், கஷ்­டங்கள் ஏற்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் எல்லாம் பிரதி உப­காரம் எது­வுமே இல்­லாமல்,  அர­சாங்­கத்தைக் காப்­பாற்றி வந்­துள்­ளது.

அந்த வகையில் ஜே.வி­.பியின் நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையை, ஜூலை 11ஆம் திகதி  நடை­பெற்ற வாக்­கெ­டுப்­பின்­போது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு எதிர்த்து வாக்­க­ளித்து, தோல்வி அடையச் செய்­தது.  இதன் மூலம் அர­சாங்கம் பதவி இழக்­கின்ற ஆபத்தில் இருந்து தப்பிப் பிழைத்­தி­ருக்­கின்­றது.

நிபந்­த­னை­யற்ற ஆத­ரவும் கைகொ­டுக்­க­வில்லை

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்கும் தமிழ்மக்­க­ளுக்கும் இடையில் பதற்றம் மிகுந்த மோச­மான நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்­து­வ­தற்கு அர­சாங்கம் உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற நிபந்­த­னைக்­க­மை­யவே இந்த நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையின் போது அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாகக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டி­ருந்­தது.

ஆனால் நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை என்ற அரச பத­வியை இழக்கும் கண்­டத் திலிருந்து தப்­பி­விட்ட போதிலும், கல்­ முனை விவ­கா­ரத்­திற்கு அரச தரப்பில் உரிய நட­வ­டிக்கை உட­ன­டி­யாக எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

எதி­ரணி தரப்பில் இருந்த போதிலும், அரச ஆத­ரவு கட்­சியைப் போலவே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்டு வந்­துள்­ளது; வரு­கின்­றது. ஆனால் தமிழ்மக்­க­ளுக்கு எதி­ராகத் தொடுக்­கப்­பட்­டுள்ள மென்­வலு யுத்­தத்தைத் தடுத்துநிறுத்தி அதனால் பாதிப்­புகள் ஏதும் ஏற்­ப­டாத வகையில் செயற்­ப­டு­வ­தற்குக் கூட்­ட­மைப்­பினால் முடி­யாமல் போனது. இந்த மென்­வலு ஆக்­கி­ர­மிப்பு யுத்­தத்தில் தமிழ்மக்கள் தரப்பில் நில­வு­கின்ற பல­வீ­னத்­தையே சுட்­டிக்­காட்­டு­கின்­றது. .

நாட்டின் எதிர்க்­கட்சிப் பத­வியை வகித்­தி­ருந்த அள­வுக்கு அர­சியல் செல்­வாக்குப் பெற்­றி­ருந்த தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு தமிழ்மக்­க­ளுக்கு எதி­ராக மென்­வலு தந்­தி­ரோ­பாயரீதியில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­களில் செய­லற்ற ஒரு தரப்­பா­கவே திகழ்­கின்­றது. பெய­ர­ளவில் மாத்­தி­ரமே அது தமிழ் மக்­களின் அர­சியல் தலைமைப் பொறுப்பை வகிக்­கின்ற அவல நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

நீரா­வி­யடிப் பிள்­ளையார் கோவிலில் ஆக்­கி­ர­மிப்பு 

முல்­லைத்­தீவு மாவட்­டத்தை விடு­த­லைப்­பு­லிகள் தமிழ் மக்­க­ளது தாயக மண்ணின் இரு­தயப் பகு­தி­யாகக் கரு­தி­யி­ருந்­தார்கள். அந்த வகையில் அதனைப் போற்றிப் பேணி­யி­ருந்­தார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகக் கோட்­பாட்­டையும் தாயகப் பிர­தே­சத்­தையும் முறி­ய­டிப்­ப­தற்­காக முல்­லைத்­தீவில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை மேற்­கொள்­வ­திலும், பௌத்த மதத்தைத் தினிப்­ப­திலும் பேரி­ன­வாத சக்­திகள் தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றன.

இதில் வர­லாற்றுப் பழைமை வாய்ந்த நீரா­வி­யடிப் பிள்­ளையார் கோவிலில் அத்­து­மீறிப் பிர­வே­சித்து அங்கு ஒரு புத்தர் சிலையை நிறுவி பௌத்­த­வி­காரை அமைக்கும் பணி யில் பௌத்த சிங்­கள தீவி­ர­வாத சக்­திகள் முனைந்­தி­ருக்­கின்­றன. அர­சாங்­கத்தின் ஆசீர்­வா­தத்தில், பொலிஸார் மற்றும்  ரா­ணுவம் உள்­ள­டங்­கிய அரச படை­களின் பாது­காப்­பு­டனும் இந்த பௌத்த மதத் திணிப்பு நட­ வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

காலங்கால­மாக தமி­ழர்கள் வழி­பட்டு வந்த அந்த ஆல­யத்தில் வழி­பாட்டில் ஈடு­படச் சென்ற தமிழ் மக்களை அங்கு நிலை­கொண்­டிருந்த  பௌத்த பிக்கு ஒரு­வர் ­தடுத்து நிறுத்­தினார். அவ­ருக்கு பாது­காப்பு வழங்கி வரு­கின்ற பொலி­ஸாரும், அருகில் நிலை­கொண்­டுள்ள ரா­ணு­வத்­தி­னரும், அங்கு சென்ற தமிழ் மக்­களை அச்­சு­றுத்தி உள்­ளார்கள். பௌத்த பிக்கு என்ன சொல்­கின்­றாரோ அவ்­வாறே அங்கு செல்­கின்ற தமிழ் மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்­பதில் ஆயு­த­மேந்­தி­யுள்ள அந்த அரச படை­யினர் குறி­யாக இருந்து செயற்­ப­டு­கின்­றார்கள்.

இந்த விவ­காரம் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தை­யடுத்து, தமிழ்மக்கள் தமது வழி­பா­டு­களை மேற்­கொள்வ­தற்கு பௌத்த பிக்கு தடை ஏற்­ப­டுத்தக் கூடாது. புதிய நிர்­மாணப் பணி கள் எதுவும் இடம்­பெறக் கூடாது என்று உத்­த­ர­விட்­டி­ருந்­தது. ஆனால் நீதி­மன்ற உத்­த­ரவை உதா­சீனம் செய்த பௌத்த பிக்கும் பொலிஸார் மற்றும் ரா­ணு­வத்­தி­னரும் பௌத்த பிக்­குவின் பௌத்த மதத் திணிப்­புக்கு பேரா­த­ரவு வழங்கி தமிழ் மக்­களை அச்­சு­றுத்தி இம்­சித்­துள்­ளார்கள்.

நீரா­வி­யடிப் பிள்­ளையார் கோவிலில் பொங்­க­லிட்டு வழி­பாடு செய்து அந்த ஆல­யத்தில் தமக்கு இழைக்­கப்­ப­டு­கின்ற அநீ­திக்­காகப் பிரார்த்­திக்கச் சென்ற பெரும் எண்­ணிக்­கை­யி­லான தமிழ்மக்­க­ளையும் அந்த பௌத்த பிக்கு அரச படை­களின் ஆத­ர­வுடன் அச்­சு­றுத்தத் தவ­ற­வில்லை. ஆல­யத்­த­ருகில் பொங்­க­லி­டு­வ­தற்குக் கூட அவர் அனு­ம­திக்­காமல் அடா­வ­டி­யாக நடந்து கொண்­டி­ருந்தார். இந்தப் பின்­ன­ணி யில் அந்த ஆலயப் பகு­திக்கு பௌத்த மத உரிமை கோரி முல்­லைத்­தீவு நீதி­மன்றம் வழங்­கி­யி­ருந்த நிர்­மாணப் பணி­க­ளுக்­கான தடை உத்­த­ரவை நீக்கக் கோரி பௌத்த பிக்­குவும் அவரைச் சார்ந்­த­வர்­களும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் மனு தாக்கல் செய்­துள்ள காரி­யமும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது.

தெய்­வீகத் தலத்தில் பௌத்­தத்தி பெயரில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அவ­மானம் 

முல்­லைத்­தீவைப் போலவே, திரு­கோ­ண­மலை கன்­னியா வெந்­நீ­ருற்றின் புரா­தன பிள்­ளையார் கோவிலை இடித்து அழித்து அடா­வ­டி­யாக அங்கு பௌத்த தாது கோபுரம் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இங்­கேயும் பௌத்த பிக்­கு­களே பௌத்த மதத் திணிப்­புக்குத் தலைமை தாங்­கி­யுள்­ளனர்.

இதற்கு தொல்­பொருள் திணைக்­களம் முழு அளவில் ஆத­ரவு வழங்­கி­யுள்­ளது. –ரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி செய­ல­கத்தின் உத்­த­ர­வுக்­க­மைய பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­னரும் பாது­காப்பு வழங்க தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரே இந்த நிர்­மாணப் பணி­க­ளுக்குப் பொறுப்­பேற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளார்.

இதனைத் தட்டிக் கேட்டு, ஆட்­சே­பனை தெரி­விப்­ப­தற்கும், பிள்­ளையார் கோவிலில் பூஜைகள் செய்­வ­தற்­கு­மாகச் சென்ற தமிழ் மக்கள் பிர­தான வீதி­யி­லேயே பொலி­ஸா­ரினால் தடுத்து நிறுத்­தப்­பட்­டார்கள். பொலி­சா­ருக்கு உத­வி­யாக கலகம் அடக்கும் பொலி­சாரும் இரா­ணு­வத்­தி­னரும் அங்கு குவிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

தமது வழி­பாட்டு உரி­மையை வலி­யு­றுத்தி உள்ளே செல்ல முற்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி­மன்­றத்தின் தடை உத்­த­ரவைக் காட்டி தடுத்த பொலிஸார் தென்­க­யிலை ஆதீன குரு­மு­தல்வர் தவத்­திரு அடி­களார் மீதும், கன்­னியா பிள்­ளையார் கோவி­லுக்கு வர­லாற்று ரீதி­யான உரித்­து­டை­ய­வ­ரு­மா­கிய திரு­மதி கணேஸ் கோகி­ல­ராணி ஆகிய இரு­வரை மாத்­திரம் கோவி­லுக்குச் செல்­வ­தற்­கான அனு­மதி வழங்கி அவர்­களை பொலிஸார் பிர­தான வீதியில் இருந்து உள்ளே அழைத்துச் சென்­றனர்.

உள்ளே சென்ற அவர்கள் இரு­வ­ரையும் பொலிஸ் வாக­னத்தில் இருந்து கீழே இறங்­க­வி­டாமல் பிள்­ளையார் கோவில் பகு­தியில் ஏற்­க­னவே வந்து குழு­மி­யி­ருந்த சிங்­க­ள­வர்கள் கூச்­ச­லிட்டு தகாத வார்த்­தை­களில் திட்டி, அச்­சு­றுத்­தி­யுள்­ளார்கள். பொலி­ஸாரின் பாது­காப்பில் அவர்­க­ளு­டைய வாக­னத்தின் உள்ளே இருந்த தென்­க­யிலை ஆதீன குரு முதல்வர் மீதும் கோகி­ல­ராணி மீதும், அங்­கி­ருந்த காடை­யர்கள் குடித்துக் கொண்­டி­ருந்த எச்­சில்­பட்ட சுடு தேநீரை ஊற்றி தகுதி தரா­தரம் பாராமல் அவ­மா­னப்­ப­டுத்தி உள்­ளார்கள்.

கரு­ணை­யையும் அஹிம்­சை­யையும் போதிக்­கின்ற புத்த பெரு­மா­னுக்கு இந்­துக்கள் வணங்­கு­கின்ற ஒரு புரா­தன கோவிலை இடித்து பௌத்த தாது­கோ­புரம் அமைக்­கின்ற அடா­வ­டித்­த­னத்தின் வெளிப்­பா­டா­கவே இந்து மதத் தலைவர் ஒரு­வரும் இந்து மதத்தைச் சார்ந்த தெய்­வீகப் பணி­களில் ஈடு­பட்­டுள்ள ஒரு பெண்­ம­ணியும் இவ்­வாறு அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள்.

ஒரு தெய்­வீகத் தளத்தில் ஆயு­த­மேந்­திய படை­யி­ன­ரையும், காடையர் கூட்­டத்­தையும் துணைக்கு வைத்துக் கொண்டு இந்­துக்கள் மீது நடத்­தப்­பட்­டுள்ள இந்தத் தாக்­கு­தலும், ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அப­கீர்த்­தியும் உண்­மை­யான பௌத்த தர்­மத்தின் அடிப்­ப­டையில் எவ்­வாறு நியா­யப்­ப­டுத்த முடியும் என்று தெரி­ய­வில்லை.

பாது­காக்கப் போவது யார்…..?

நீரா­வி­யடி, கன்­னியா மட்­டு­மல்ல. யாழ்ப்­பாணம் நாவற்­கு­ழி­யிலும் பௌத்த மதத்­தி­ணிப்­பாக மிகப் பெரிய பௌத்த விகா­ரை­யொன்று அர­சாங்­கத்தின் வழி­காட்­டலில் அமைக்­கப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, கன்­னியா சம்­ப­வத்தைத் தொடர்ந்து நீரா­வி­யடி பிள்ைளயார் ஆல­யத்தில் கட்­டப்­பட்­டி­ருந்த நந்­திக்­கொ­டி­களை, அங்கு நிலை­கொண்டு பௌத்த திணிப்பில் ஈடு­பட்­டுள்­ள­வர்கள் கிழித்­தெ­றிந்து அட்­ட­காசம் புரிந்­துள்­ளார்கள்.

இந்த பௌத்த மதத் திணிப்பு நட­வ­டிக்­கை­களும் இந்து மதத்­திற்கு எதி­ரான அடா­வ­டித்­த­னங்­களும் தமிழ் மக்­களின் தாயகப் பிர­தே­ச­மா­கிய வடக்கு கிழக்­கையும் கடந்து மலை­ய­கத்­திலும் பர­வ­லாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. மத்­திய

மாகாணம் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்ள கந்­தப்­பளை தோட்­டத்து மாட­சாமி கோவி­லுக்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரின் துணை­யுடன் சென்ற பௌத்த பிக்கு ஒருவர் அங்கு பௌத்த கொடியை ஏற்­றி­யுள்ளார்.

அடா­வ­டித்­த­ன­மான இந்தச் செயலால் அங்கு பதற்ற நிலைமை ஏற்­பட்­டது. அந்தப் பிர­தேச மக்கள் இந்தக் கொடி­யேற்­றத்­தினால் பதற்றமும் ஆத்­தி­ரமும் அடைந்­தனர். இது தொடர்பில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. சம்­பவ இடத்­திற்குச் சென்ற பொலிஸ் உய­ர­தி­காரி மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் நிலை­மை­களைக் கேட்­ட­றிந்­த­துடன் அங்கு ஏற்­றப்­பட்ட பௌத்த கொடியும் அகற்­றப்­பட்­டது.

பொலி­ஸா­ரி­னதும், இரா­ணு­வத்­தி­ன­ரதும் பாது­காப்­புடன் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற இத்­த­கைய அநா­க­ரி­க­மான பௌத்த மதத் திணிப்பு நட­வ­டிக்­கை­களை சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான இன அழிப்பு நோக்கம் கொண்ட மென்­வலு சார்ந்த யுத்தம் என்று கூறு­வதில் தவ­றி­ருக்க முடியாது.

மதங்களுக்கிடையில் போட்டிகள் இருக்கலாம். மோதல்கள் இருக்கலாம். அவைகள் இருதரப்புக்களையும் சேர்ந்தவர்களினால் முன்னெடுக்கப்படுபவை. ஆனால் இங்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரும், தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சராகிய ஜனாதிபதியின் நேரடி பொறுப்பில் உள்ள, சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான பொலிஸாரும், நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான இராணுவத்தினரும் நேரடியாக இந்த பௌத்த மதத் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் இது பௌத்த மதத் திணிப்புக்காக தமிழ் மக்கள் மீது சத்தமின்றி பிரகடனப்படுத்தப்பட்ட மென்வலு யுத்தமே அன்றி வேறொன்றுமில்லை.

ஆளுமையும் செயல் வல்லமையும் அற்ற அரசியல் தலைமையைக் கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு எதிரான இந்த மென்வலு யுத்தத்தில் எதிர்வரும் காலங்களில் என்னென்ன வகையிலான பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டி இருக்குமோ என்பது தெரியவில்லை.

ஞானசார தேரர், அத்துரலிய ரத்தன தேரர் போன்றோரின் சிங்களவர்களுக்கு மட்டுமே இந்த நாடு சொந்தம் என்ற கோரிக்கையிலான இனவாத, மதவாத கருத்துக்களையும், இந்த ஆட்சியில் பௌத்த பிக்குகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

ராஜபக் ஷவின் கருத்துக்களையும் கண்டும் காணாதது போன்று அமைதியாக இருக்கின்ற இந்த நல்லாட்சி அரசில் அரசியல் ரீதியாக இந்த மென்வலு யுத்தத்திற்கு முடிவேற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்டு நெருக்குதல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகியுள்ள தமிழ் மக்களை வெளிச்சக்தி ஒன்றினாலேயே பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.

பி.மாணிக்கவாசகம்