அண்ணாச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னை நகரிலுள்ள சிறிய கிராமத்தில பிறந்தவராவார்.
தனது 12 வயதில் இருந்து உழைக்க ஆரம்பித்தார். அப்போது போக்குவரத்து வசதி கூட இல்லாத அந்த அந்த கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னைக்கு வந்த ராஜகோபால், முதலில் ஒரு சிறிய ஹோட்டல் ஒன்றில் மேசை துடைக்கும் பணியாளராகவே தனது பணியை தொடங்கினார்.
பின்னர் ஹோட்டல் டீ மாஸ்டருடன் பழகி டீ போடுவது எப்படி என்பதை கற்று கொண்டு டீ மாஸ்டராக மாறினார். இதன் பின்னர் பலசரக்குக்டை ஒன்றை தொடங்கினார். அப்போது பகல் வேளையில் கடைக்கு வந்த ஒருவர் அண்ணாச்சி சமான்களை சீக்கிரம் தாருங்கள். இங்க ஹோட்டல் கூ ட இல்லை என்று கூறியுள்ளார்.
1981 ஆம் ஆண்டு தனது கடைக்கு வந்த நபர் கூறிய வார்த்தைகள் ராஜ கோபால் மனதில் ஹோட்டல் திறக்கும் எண்ணத்தை விதைத்தது. அதே ஆண்டில் டிசம்பர் மாதம் இன்னொருவர் நடத்தி வந்த கமாட்சி பவன் ஹோட்டலை விலைக்கு வாங்கி ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தார்.
இந்த ஹோட்டலை பின்னர் சரவணபவன் என பெயர் மாற்றினார். படிப்படியாக ஹோட்டல் சரவணபவனின் கிளைகள் முளைத்தன. ஹோட்டல் தொழிலில் ராஜகோபால் உச்சத்தை தொட்டார்.
சென்னையில் 25 கிளைகள் உட்பட உலகம் முழுவதும் 46 கிளைகள் இப்போது உள்ளன. சைவ உணவு என்றாலே சரவணபவன் ஹோட்டல் தான் என சொல்லும் அளவுக்கு தரமான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
தீவிர முருக பத்தரான ராஜகோபால் கிருகானந்த வாரியாரின் சீடனாகவும் விளங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கச்சினா விலையில் வனத்திருப்பதி என்ற பிரமாண்ட கோயிலை நிர்மாணித்தார்.
இந்நிலையில் தான் ஜோதிடர் ஒருவர் மூன்றாவதாக திருமணம் செய்தால் நீங்கள் மேலும் உச்சத்திற்கு செல்லாம் என்று ஆலோசனை கூற ராஜகோபாலின் வாழ்க்கையே புரண்டுபோனது .
1990 களில் கடைசி காலங்களில் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ஜீவ ஜோதி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
ஆனால் ஜீவஜோதி இதற்கு சம்மதிக்கவில்லை. அதற்கு மாறாக சரவணபவன் ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். குறித்த பெண் திருமணமான அடுத்த சில நாட்களிலே அவரது கணவரை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்று கொலை செய்து விடுகிறது.
விசாரணையில் கணவரை ராஜகோபால் சொல்லி தான் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. அதன் பின் சிறையில் அடைக்கப்பட்ட ராஜகோபால் ஒரு வழியாக போராடி 2003 ஆம் ஆண்டு ஜூலை பிணையில் வெளியே வந்தார். ஆனால் அவரால் வழக்கில் இருந்து நிரந்தரமாக வெளியே வரமுடியவில்லை.
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது.
இதை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தியதுடன் கடந்த ஜூலை 7 ஆம் திகதி சரணடையுமாறு உத்தரவிட்டது.
நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் சரணடைய இயலாது எனக் கூறி கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ராஜகோபால். தொடர்ந்து உடல்நல பிரச்சினையால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால், நேற்று உயிரிழந்தார்.
கடும் உழைப்பால் பெரும் புகழ் பெற்றவர், ஒரே ஒரு தவறால், வாழ்நாள் சரிவைச் சந்தித்தார்.