முழு உலகத்துக்குமே நெருக்கடியான நேரம். இலங்கைக்கும் ஒரு வகையில் நெருக்கடியான நேரமாகவே உள்ளது. ஆனாலும் ;கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் அநாவசிய பயம் கொள்ள வேண்டாம். எனினும் நாம் தயாராக இருக்க வேண்டும். இது பரவுவதைத் தடுப்பதற்கு ;நாம் ; உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். மக்கள் சுத்தமாக இருப்பதுடன் சுகாதார அமைச்சின் ஊடாக விடுக்கின்ற அறிவுறுத்தல்களைப் பின்பற்றினால் இந்த கொரோனா வைரஸ் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றும் ...
Read More »கொட்டுமுரசு
இளைஞர்களைத் தற்கொலைப் பாதையிலிருந்து காப்பாற்ற பெற்றோர்கள் என்ன செய்யலாம்?
சில நாட்களுக்கு முன்பு, தலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று, தாய் முடிவெட்டிவிடச் சொன்னதால், பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி செய்திகள் வெளியாகின. அதைப் பற்றிய தகவல்கள் மனதைப் பிய்த்தன: ‘கணவனைப் பிரிந்து ஒரே மகனுடன் வாழும் தாய், மகனும் தற்கொலை செய்துகொண்டதால் தனி மரமானார்’. அந்தத் தாயின் துயரத்துக்கு நடுவே, இன்றைய ஆராய்ச்சிகள் சொல்லும் உண்மைகளும் முக்கியம்: இது தலைமுடி பற்றிய விஷயம் இல்லை. ஒரு முழு மனிதனாகத் தன்னை உருவாக்கிக்கொண்டிருந்த, தன் வாழ்வின் முடிவுகளைத் தானே எடுக்க விரும்பிய, ...
Read More »உலகையே அச்சுறுத்தும் கரோனா!
சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடிய வைரஸ் சீனா மட்டுமன்றி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. மத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹான். அந்த நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசித்தனர். கடந்த டிசம்பர் இறுதியில் அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்தது. வைரஸ் பரவுவதைத் தடுக்க வூஹான் நகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், ...
Read More »சீனாவுக்கே பூமராங்காக திரும்பிய ‘பயோ-வெப்பன்’?
சீனாவை உலுக்கி எடுத்துவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேரும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன உலகிற்கு தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர்-ஆயுதங்களை(பயோ-வெப்பன்) உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயல்படுத்தி வந்தது. அங்கிருந்து பரவி இருக்கலாம் என்று தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் ...
Read More »தான தர்ம அரசியல்?
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் ஒரு நடன அரங்கேற்றம் இடம்பெற்றது. இதன்போது மண்டபத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடமெல்லாம் படைவீரர்கள் காணப்பட்டார்கள். ஏன் என்று விசாரித்தபோது தெரியவந்தது அந்த வைபவத்தில் படை உயரதிகாரிகளும் பங்குபற்றுகிறார்கள் என்பது. அந்த நடன அரங்கேற்றம் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் கீழ் இயங்கும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உடையது. மகாதேவா ஆச்சிரமத்தில் படைத்தரப்பினர் பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறார்கள் என்றும் எனவே அந்த நடன அரங்கேற்றத்தில் அவர்களும் அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. சிறுவர் இல்லங்களுக்கு மட்டுமல்ல சமூகத்தின் பல்வேறு ...
Read More »சிறுகதையிலிருந்து நாவலுக்கு: ஐந்து எழுத்தாளர்களின் அனுபவங்கள்…!
களைகட்டிய சென்னைப் புத்தகக்காட்சியில் இலக்கிய நூல்கள் புது வேகம் கூட்டியிருக்கின்றன. இம்முறை பல எழுத்தாளர்கள் நாவல்களோடு களம் இறங்கியிருந்தார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. சிறுகதைகளுக்குள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தவர்களில் பலரும் இந்த முறை நாவலின் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். முதல் நாவலை வெளியிட்டிருக்கும் சிறுகதையாசிரியர்களில் ஐவர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்… சுரேஷ்குமார் இந்திரஜித்- ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலாசிரியர் சுமார் நாற்பது ஆண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு, நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளர் உருவானார். அவர் குறுநாவல் ...
Read More »இன்னும் விலகாத மர்மம்…..!
இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா – நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான் அதிபர் டோஜோ. இதையடுத்து 18.08.1945 அதிகாலையில், தன்னுடைய உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேருடன் ...
Read More »இறந்தவர்களை என்னால் மீள கொண்டுவரமுடியாது!
இலங்கையின் கொடுரமான நீண்ட கால உள்நாட்டு போரின் போது காணாமல் போன தங்களின் உறவுகள் குறித்த வார்த்தைக்காக தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையை சிதறடித்துள்ள இலங்கை ஜனாதிபதி இந்த விவகாரம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளிற்கு அக்கறையற்ற மறுப்பை வெளியிட்டுள்ளார். காணாமல்போனவர்கள் இறந்துவிட்டனர் அவர்களை என்னால் உயிருடன் கொண்டுவரமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் துயரமான ஒரு அத்தியாயத்தை முடித்துவைப்பதற்கு விரும்பும் அரசாங்கம் காணாமல்போன இலங்கையர்களிற்கு மரண சான்றிதழை வழங்க முயல்கின்றது. ஆனால் 2009 இல் முடிவிற்கு வந்த இலங்கை யுத்தத்தில் காணாமல்போன அனைவரினது ...
Read More »‘வாங்கோ ராசா வாங்கோ’
ஒரு நாட்டின் உண்மையான சோதனைக்காலம் என்பது, அந்த நாட்டில் நிகழ்ந்த யுத்த கொடூரங்களையே குறிப்பிடலாம். அந்த யுத்தகாலப் பகுதியே, அந்தத் தேசம் நோய்வாய்ப்பட்ட காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது. இலங்கை நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டத்தில், அதிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்ற நோக்கிலேயே (பாதுகாப்பு), 1980களின் தொடர்ச்சியான காலகட்டங்களில், தமிழ் இளைஞர்கள் அடைக்கலம் தேடி, தாய் மண்ணைத் துறந்து, அந்நிய தேசங்களுக்குச் சென்றனர். தமிழ், சிங்கள முரண்பாடுகள், ஆயுதப் போராக தோற்றம் பெற்ற அக்காலப்பகுதியில், ‘சுவர் இருந்தால் மட்டுமே, சித்திரம் வரையலாம்’ என்ற அடிப்படையில், அது ஏற்றுக் கொள்ளக் ...
Read More »அரசியல் தீர்விற்கான வெளியாரின் அழுத்தங்களும் மகிந்தவின் தவறான புரிதலும்!
சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழ் செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றார். இதன் போது அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்திருக்கின்றார். வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினைக்கான தீர்வை இந்தியா தரவேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை – தீர்வு எம்மிடமே உள்ளது. அதனை உள்நாட்டுக்குள்தான் தேட வேண்டும் அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தமில்லை என்றவாறு குறிப்பிட்டிருப்பதான, செய்திகளை பார்க்க முடிந்தது. இதில் பங்குகொண்ட ஒரு செய்தியாளர் தனது முகநூலில் பின்வருமாறு ...
Read More »