இறந்தவர்களை என்னால் மீள கொண்டுவரமுடியாது!

இலங்கையின் கொடுரமான நீண்ட கால உள்நாட்டு போரின் போது காணாமல் போன தங்களின் உறவுகள் குறித்த வார்த்தைக்காக தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையை சிதறடித்துள்ள இலங்கை ஜனாதிபதி இந்த விவகாரம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளிற்கு அக்கறையற்ற மறுப்பை வெளியிட்டுள்ளார்.

காணாமல்போனவர்கள் இறந்துவிட்டனர் அவர்களை என்னால் உயிருடன் கொண்டுவரமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் துயரமான ஒரு அத்தியாயத்தை முடித்துவைப்பதற்கு விரும்பும் அரசாங்கம் காணாமல்போன இலங்கையர்களிற்கு மரண சான்றிதழை வழங்க முயல்கின்றது.

ஆனால் 2009 இல் முடிவிற்கு வந்த இலங்கை யுத்தத்தில் காணாமல்போன அனைவரினது குடும்பத்தவர்களும் இந்த விவகாரம் முடிவிற்கு வந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள தயாரில்லை.

சிலர் இத்தனை வருடங்களாக தாங்கள் தங்கள் உறவுகளை தேடியமை வீணாகிப்போய்விடவில்லை என தெரிவித்து அரசாங்கத்தின் இந்த முயற்சியை நிராகரித்துள்ளனர்.

21 வருடங்களின் பின்னரும் எனது மகன் உயிருடன் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவிக்கின்றார் விசாகா தர்மதாச. இவரின் மகன் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டுப்போரின் போது காணாமல் போயிருந்தார்.

நான் மகனின் உடலை பார்க்கவில்லை, நான் இன்னமும் அவரிற்காக காத்திருக்கின்றேன் என விசாகா தர்மதாச தெரிவிக்கின்றார்.

இலங்கை உள்நாட்டு போரின் காயங்களால் பாதி;க்கப்பட்டுள்ளது.

இலங்கை முன்னோக்கி நகரமுற்படுகின்ற போதிலும்,பாரிய அழிவுகள் படுகொலைகளின் நினைவுகள் மேலெழும்புகின்றன,

வணிகவளாகங்களையோ அல்லது பாரிய ஹோட்டல்களையோ கட்டுவதற்கான அகழ்வு பணிகள் இடம்பெறும்போது பாரியபுதைகுழிகளும் ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படுவது வழமையான விடயமாக காணப்படுகின்றது.

தற்போது யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தினைமுடிவிற்குகொண்டுவருவதன் மூலம் ஜனாதிபதி ராஜபக்ச நாட்டிற்கு புதிய யுகத்தினை ஏற்படுத்த முயல்கின்றார். காணாமல்போனவர்கள் குறித்த கோப்புகளை முடிவிற்கு கொண்டுவர அவர்முயல்கின்றார்.

இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தின் இறுதி காலங்களில் ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக விளங்கினார்.அவர் கிளர்ச்சியை ஒடுக்கி யுத்தத்திற்கு முடிவிற்கு கொண்டுவந்தவேளை அவர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.எனினும் தான் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை எந்த தவறையும் செய்யவில்லை என ஜனாதிபதி தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றார்.

இலங்கையில் காணாமல்போன அனைவரும் யுத்தத்துடன் தொடர்புபட்டவர்கள் இல்லை.துப்பாக்கிகள் அமைதியான பின்னர், ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் ஆட்சி பொறுப்பிலிருந்தவேளை பல பத்திரிகையாளர்களும் மாற்றுக்கருத்துடையவர்களும் காணாமல்போனார்கள்.ராஜபக்சபாதுகாப்பு செயலாளராகவும்,அவரது சகோதாரர் ஜனாதிபதியாகவும் ஒரு தசாப்தகாலமாக பதவி வகித்தனர்.

அந்த குடும்பத்தவர்கள் 2015 இல் தேர்தலில் தோல்வியடைந்தனர். 2017 இல் சிஐடியினர் நீதிமன்றத்தில் ராஜபக்ச கொலைக்கும்பல்களை இயக்கினார்,அவை எதிராளிகளை இலக்குவைத்தன என தெரிவித்திருந்தனர். அவர் அதனை நிராகரித்திருந்தார்.

2015 இல் அவரது குடும்பம் தோல்வியடைந்தவேளை, காவல்துறையினர் இலங்கையின் கடற்படையை சேர்ந்தவர்களின் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்தனர்.

இவர்கள் 11 இளைஞர்களை கொழும்பி;ல் கடத்தி கொலை செய்தனர் என விசாரணையாளர்கள் தெரிவித்திருந்தனர்.<
கடந்த 10 வருடங்களிற்கு மேலாக 11 பேரினது பெற்றோரும் நீதிமன்றங்களிற்கு சென்று விசாரணையாளர்கள் தெரிவிப்பiதை செவிமடுத்து வந்தனர்.

அவர்கள் தங்கள் பிள்ளைகள் உயிருடன் உள்ளனர் என்ற நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை.

எனது மகன் உயிருடன் இருக்கின்றார் நான் அவரை தேடிக்கொண்டிருக்கின்றேன்,என தெரிவிக்கின்றார் 11 பேரில் ஒருவரின் தாயாரான ஜெனீவர் வீரசிங்க. எனது மகனின் வழக்கு இன்னமும் தொடர்கின்றது நான் அதன் முடிவிற்காக காத்திருப்பேன் என அவர் தெரிவிக்கின்றார்.

நான் மரணச்சான்றிதழை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ஜெனீபர் வீரசிங்க தெரிவிக்கின்றார். காணாமல் போனவர்களை தேடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என இலங்கை ஜனாதிபதி ஐநாவின் பிரதிநிதியுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களில் அனேகமானவர்கள் விடுதலைப்புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்களே என தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்கள் மோதலின் போது இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு ; மரணச்சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கை எடு;க்கப்படும் என ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் சில குடும்பங்களிற்கு இது போதுமானதல்ல, அவர்கள் உடல்கள் போன்ற வலுவான ஆதாரங்களை கோருகின்றனர் இலங்கை அரசாங்கம் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனையை- துயரத்தை சாதாரணமாக நிராகரித்துவிட்டு மரணச்சான்றிதழை வழங்க முடியாது என்கின்றார் கொழும்பை தளமாக கொண்ட சர்வதேச மன்னிப்புசபை ஆராய்ச்சியாளர் தயகி ருவான்பத்திரன .

இது சட்டவிரோதமானது மாத்திரமல்ல கவலைக்குரியது என அவர் குறிப்பிடுகின்றார். அரசாங்கம் வலுவான சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார் .

நியுயோர்க் டைம்ஸ்
தமிழில் – ரஜீபன்