கரோனா பெருந்தொற்று அன்றாட நடவடிக்கைகளில் நீக்கமற இடம்பிடித்துவிட்டது. 2021-ன் மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோற்று ஜோ பைடன் அதிபரானது. பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகல், ஐநாவின் உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க நிதியை விலக்கிக்கொள்ளுதல், ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து விலகல், வடகொரியாவுடன் மோதல் போக்கு என்று உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக ட்ரம்ப் கருதப்பட்டார். அவரது தோல்வி பலரையும் பெருமூச்சுவிட வைத்தது. ஆப்பிரிக்க-இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபரானது அமெரிக்க வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. இந்த ...
Read More »கொட்டுமுரசு
மனித வியாபாரம், ஆட்கடத்தலிலிருந்து உறவுகளைப் பாதுகாப்போம்!
மனித வியாபாரம் என்பது திட்டமிட்டு ஒழுங்கமைத்து செய்யப்படும் குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அப்பாவிகளை இலக்காக கொண்டு, தமது சுயநலத்துக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஏமாற்றி, மோசடி செய்து, வஞ்சித்து, சுரண்டுவதன் ஊடாக, மனித வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இருந்த போதிலும், ஆட்கடத்தல் என்பது தானே ஒருவர் முன்வந்து சட்டவிரோதமாக தமது நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு செல்வதாகும்.சட்டவிரோதமாகச் செய்யப்படும் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு அடுத்ததாக உலகில் இரண்டாவது மிகப்பெரிய குற்றத் தொழிலாக இந்த ஆட்கடத்தல் கருதப்படுகின்றது. மனித வியாபாரம் ஒருவர் ஏமாற்றப்படுவதையும் ஆட்கடத்தல் என்பது ஒருவரின் ...
Read More »ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!
எதிர்வரும் பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு. இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது ...
Read More »டூட்டூ: சமநீதியின் உரத்த குரல்
தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிரான இயக்கத்தில் முன்னணியில் நின்றவரும் சமாதானத்துக்காக நோபல் பரிசு வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூவின் மரணச் செய்தியை அடுத்து, பௌத்தத் துறவியும் அமைதிப் போராளியுமான தலாய் லாமா பேசிய வீடியோ ஒன்று பார்க்கக் கிடைத்தது. “எனது மரணவேளையில் உன்னை நான் நினைவில் வைத்திருப்பேன்” என்று தனது உயிர் நண்பரான டெஸ்மண்ட் டூட்டூவிடம் சொல்லும் வாக்கியம்தான். வேறு வேறு பண்பாடுகள், வேறு வேறு பின்னணிகளைக் கொண்ட இரு ஆளுமைகளிடையே இருந்த நிறைவான நட்பை மட்டும் இந்த வாக்கியம் தெரிவிக்கவில்லை. பிரிவினையில் போரிட்டு ...
Read More »யாழ். பல்கலை. முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளான மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களை பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பெருமெடுப்பில் சோதனைகளை முன்னெடுத்தனர். நூற்றுக்கணக்கான படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின் போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ...
Read More »உள்ளூராட்சி சபைகளில் நடப்பதென்ன?
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது காரைநகரில் ஒரு சுயேச்சைக் குழு போட்டியிட்டது. அப் பிரதேசத்தில் காணப்படும் சமூக வேறுபாடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயேட்சைக்குழுவாக அது தேர்தலில் போட்டியிட்டது. எனினும் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவான தமிழ்தேசிய நிலைப்பாட்டை அக்கட்சி வெளிப்படுத்தியது.தேசிய விடுதலை என்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதே என்பதனை அந்த தேர்தல் அறிக்கை தெளிவாக வெளிப்படுத்தியது. தேர்தலில் அச்சுயேச்சைக் குழு மூன்று ஆசனங்களைப் பெற்றது.எனினும் பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஏனைய கட்சிகளுடன் பேரம் பேச ...
Read More »அறிவியல் எழுத்தாளர் ராஜாஜி
தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் ஒருவர். ராமாயணக் கதையைக் குழந்தைகளும் படிக்கும் வகையில் அவர் எழுதிய ‘சக்கரவர்த்தித் திருமகன்’ புத்தகத்துக்கு 1958-ல் சாகித்ய விருது கிடைத்தது. பாரதக் கதையை ‘வியாசர் விருந்து’ என்ற பெயரிலும் உபநிடதங்களின் சாராம்சத்தை ‘உபநிஷதப் பலகணி’ என்ற தலைப்பிலும் அவர் எழுதியிருக்கிறார். தவிர, அறிவியல் பார்வையை வளர்க்கும் வகையில் ‘திண்ணை ரசாயனம்’ என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். அதே தலைப்பில் ‘கல்கி’ இதழில் தொடராக வெளிவந்த ஏழு கட்டுரைகள் 1946-ல் புத்தகமாக வெளிவந்தன. ஆங்கிலம் தெரிந்த ...
Read More »இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்!
பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசெம்பர் 26ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர். இலங்கையில் மட்டும் முப்பத்திஐயாயிரம் பேர் வரையில் கொல்லப் பட்டிருந்தனர். இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். கடற்கோள் நினைவுநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இயற்கைப் பேரிடரான கடற்கோளைத் தடுக்க முடியாது ...
Read More »தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே தமிழர் என்பதற்குப் பதிலாக திராவிடர் என்ற அடையாளத்தை வலியுறுத்தியவர் பெரியார். இன்று அவரே தாய்மொழியின் அடிப்படையில் தமிழரா என்ற கேள்விக்கு ஆளாகி நிற்கிறார். அந்தக் கேள்விக்குப் பதிலாக, பெரியார் தமிழ், தமிழர் உரிமைகளுக்காக நடத்திய போராட்டங்களும் ஆற்றிய பணிகளும் நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில், பத்திரிகையாளர் ப.திருமாவேலன் ஏறக்குறைய 1,600 பக்க அளவில் எழுதி, நற்றிணை பதிப்பகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டிருக்கும் ‘இவர் தமிழர் இல்லை என்றால் வேறு எவர் தமிழர்?’ என்ற தலைப்பிலான புத்தகம் ...
Read More »நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | ஓர் அகதி முகாமின் பின்கதவு புன்னகைகள்!
“உன்னைப் பற்றிக் கேட்ட கேள்வி எதுக்குமே நான் தெரியாது எண்டுதான் சொன்னனான் ராதா. நீ பயப்படாத. நீ கட்டாயம் வெளியில போயிருவாய். குழந்தையோட தனியா உள்ளுக்க வெச்சிருக்க மாட்டங்கள்.” மெல்போர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் வந்திருந்த நீதனைப் பற்றி மாத்திரமன்றி, சகல அகதிகளினதும் தலையில் புள்ளிவைத்து சித்திரம் வரைந்து, அவர்களின் பூர்வீகம், நட்சத்திரம் முதற்கொண்டு அனைத்தையும் தகவல்களாகச் சேகரித்துக்கொண்டிருந்தது ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறை. வெவ்வேறு முகாம்களில் வந்திருந்தவர்களின் படங்களைக் காண்பித்து, `இவரைத் தெரியுமா?’ – என்ற கணக்கில் ஏராளம் கேள்விகளைக் கொட்டி விசாரணைகளை ஆரம்பித்தார்கள். போரிலிருந்து ...
Read More »