பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஆவணி மாதம் 11ம் திகதி பதவி ஏற்கவிருக்கும் இம்ரான் கான் தொடர்பான சில குறிப்புகளுடன் இந்த பதிவு அமையவிருக்கிறது. 1952ம் ஆண்டு ஜப்பசி மாதம் 05ம் திகதி லாகூரில் பிறந்த இம்ரான் கான், 1971ம் ஆண்டு பாகிஸ்தான் அணி சார்பாக பேர்மிங்கத்தில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஆரம்பித்து, 1992ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்துடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையினை நிறைவு செய்து கொண்டார். இந்த இடைப்பட்ட 21 வருட காலத்தில் சகலதுறை ஆட்டக்காரராக, 88 டெஸ்ட், ...
Read More »கொட்டுமுரசு
மாற்றுத் தலைமையும் முதலமைச்சர் பதவியும்…. !
வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது மில்லியன் டொலர் பெறுமதி மிக்க கேள்வியாக எழுந்துள்ளது. தமிழ்த்தரப்பு அரசியல் ஓர் அரசியல் சுழலுக்குள் சிக்கி ஒரு தள்ளாட்டமான நிலைமைக்கு ஆளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும். உள்ளுராட்சித் தேர்தலுக்கு அடுத்தபடியாக நடைபெற வேண்டிய மாகாணசபைத் தேர்தல், இந்த வருட இறுதிக்குள் நடத்தப்படுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் திணைக்களம் தயாராக இருக்கின்ற போதிலும், அரச பங்காளிக்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில்; எழுந்துள்ள முரண்பாடுகளும், மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சிக்குரிய ...
Read More »முன்னாள் போராளிகள் என்ன ரோபாக்களா ? -வெற்றிச்செல்வி
முன்னாள் போராளிகள் என்ன ரோபாக்களா ? கரண்டில்லாமல் போன உடனே வேலை செய்யாமல் போய்விட்டார்களா? ஏன் நாங்கள் அவர்களைப் பாரபட்சமாக நடத்துகிறோம்? நீங்கள் போராட்டத்தில் நின்ற ஆட்கள் என்று சொல்லி, நாங்கள் ஏன் ஒதுக்கி வைக்கின்றோம்? எங்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது என்கிறார்கள். சமூகத்தோடு மீள் இணைக்கின்றோம் என்கிறார்கள். எந்த சமூகத்தோடு இணைக்கின்றார்கள்? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? எங்கள் சமூகம் எது? எனது தந்தை, தாய், அக்கா, என்னுடைய மாமன், மாமி, மச்சாள், என்னுடைய உறவுகள் என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு, அயலவர்கள், என்னுடைய ...
Read More »பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்!
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை; பொருளாதார அபிவிருத்தியால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது; ஜனாதிபதி செயலணியின் அமைப்பு உருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக உள்ளது. அதில் ஒரு பொருட்டாக, நான் இணைந்து கொள்வது தேவையற்றது: இப்படியான பல விடயங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பி உள்ளார். வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களது பொருளாதாரத் தேவைகளை மட்டும் நிறைவு செய்வதன் ஊடாக, அரசியல் உரிமைகளை, அரசியல் அபிலாஷைகளை அவர்களது மனங்களிலிருந்து மெல்ல அகற்றி விடலாம் என்ற ...
Read More »எலும்புக்கூடுகளும் – தமிழர் தாயகமும்!
இப்போதெல்லாம் வடக்கு – கிழக்கில் புதையல் தோண்டும் நடவடிக்கைகள் தனியார் தரப்பினராலும், கொள்ளைக்காரர்களாலும், ஏன் இராணுவத்தினராலும்கூட மேற்கொள்ளப்படு கின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதன் மூலமான கைதுகள் , புதையல் இருக்கும் இடத்தைக் கண்டறியும் அதி நவீன உபகரண பறிமுதல் உத்தரவுகள் என எல்லாமே பரபரப்புச் செய்திகளாக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக, இப்போது வடக்கு கிழக்கில் புதையல் தோண்டும்போது புதையல் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் மனித உடல் எச்சங்களும், எலும்புகூடுகளும் அதிக அளவில் வெளியே தலைகாட்டுகின்றன. அண்மையில் மன்னார், கூட்டுறவு மொத்த விற்பனை ...
Read More »தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது?
‘தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’…… இவ்வாறு கூறியிருப்பவர் வடமாகாண ஆளுநர் குரே. சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடந்த வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இதே கருத்துப்பட ...
Read More »நல்லாட்சியில் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்!
இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையால் பல ஆண்டுகளாக அந்த காணிகளை நம்பி தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைத்து அவர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகைய செயற்பாடு நல்லிணக்க முயற்சிகளை வெகுவாகப் பாதித்துள்ளது மட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கும் வழிவகுக்குத்துள்ளது. ஆனாலும் இலங்கையின் நிலைமாறுகால நீதி ...
Read More »உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா?
பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும். இதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி ...
Read More »கறுப்பு யூலையும் – முள்ளிவாய்க்காலும்!
கறுப்பு யூலை இனப்படுகொலையின் குறியீடுட்டுச் சின்னமாய் இக்கறுப்பு வெள்ளை நிழற்படம் அமைகிறது. கொழும்பு மாநகரில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்ட வேளை ஒரு சிங்கள அன்பரினால் எடுக்கப்பட்ட நிழற்படம் இது. கீர்த்தி பாலசூரிய என்ற எனது சிங்கள நண்பர் 12 நிழற்படங்கள் அடங்கிய கறுப்பு-வெள்ளை நிழற்பட சுருளை என்னிடம் சேர்ப்பித்தார். அந்த படங்களில் ஒன்றுதான் மேற்படி நிகழ்படமாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் செயலாளாராக இருந்த நண்பர் கீர்த்தி பாலசூரியாவும் அவரது அமைப்பும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையும், விடுதலைக்கான போராட்டத்தையும் வெளிப்படையாக ஆதரித்து செயற்பட்டனர். ...
Read More »பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நிவாரண இழப்பீடு கிடைக்கும்!
குடும்பமொன்று சமூகத்தில் பொருளாதார ரீதியிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேறிச்செல்வதற்காக தமது முழு முயற்சியையும் மேற்கொண்டு நகர்வுகளை முன்னெடுக்கும். அதில் வெற்றிபெறுகின்ற குடும்பங்களும் உள்ளன. முன்னேற்றமடையாத குடும்பங்களும் உள்ளன. எப்படியிருப்பினும் ஒரு குடும்பம் சமூகத்தில் ஒரு நல்ல வாழ்க்கைத்தரத்தை அடையவேண்டுமென்றால் கடின உழைப்புடன்கூடிய அர்ப்பணிப்பை வெளிக்காட்டவேண்டியது அவசியமாகும். ஆனால் அவ்வாறு அந்தக் குடும்பத்தினால் தனித்து அதனை செய்ய முடியாது. அதற்கு மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற அரசாங்கமும் பக்கபலமாக இருக்கவேண்டும். அதேபோன்று பொருளாதார ரீதியிலும் சமூக பாதுகாப்பு ரீதியிலும் கடின உழைப்பின் மூலம் முன்னேற்றமடைந்து வருகின்ற குடும்பங்கள் இயற்கை அனர்த்தங்கள் ...
Read More »