எலும்­புக்­கூ­டு­க­ளும் – தமி­ழர் தாய­க­மும்!

இப்­போ­தெல்­லாம் வடக்கு – கிழக்­கில் புதை­யல் தோண்­டும் நட­வ­டிக்கைகள் தனி­யார் தரப்­பி­ன­ரா­லும், கொள்ளைக்காரர்­க­ளா­லும், ஏன் இரா­ணு­வத்­தி­ன­ரா­லும்கூட மேற்கொள்ளப்படு கின்றன. இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளில் இற‌ங்­கி­யி­ருப்­ப­தன் மூல­மான கைது­கள் , புதை­யல் இருக்கும் இடத்தைக் கண்டறியும் அதி நவீன உப­கர‌ண பறி­மு­தல் உத்தரவுகள் என எல்­லாமே பர­ப­ரப்­புச் செய்­தி­க­ளாக ஊட­கங்­க­ளில் வெளி­யாகி வரு­கின்­றன.

இவற்­றுக்­கெல்­லாம் மேல­தி­க­மாக, இப்­போது வடக்கு கிழக்­கில் புதை­யல் தோண்­டும்போது புதை­யல் கிடைக்­கி­றதோ இல்­லையோ, ஆனால் மனித உடல் எச்­சங்­க­ளும், எலும்­பு­கூ­டு­க­ளும் அதிக அள­வில் வெளியே தலை­காட்­டு­கின்­றன.

அண்­மை­யில் மன்­னார், கூட்­டு­றவு மொத்த விற்­பனை நிறு­வன வளா­கத்­தில் (ச.தொ.ச) கட்­டட விரி­வாக்­கத்­திற்­காக நிலம் தோண்­டப்­பட்­ட­போது, மனித எலும்­புக்­கூ­டு­கள் வெளி­வர ஆரம்­பித்­தன. அது நீதித்­து­றைக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்டு நீதி­மன்­றத்­தின் மேற்­பார்­வை­யில் தொடர்ந்­தும் அதே இடத்­தில் அகழ்­வுப் பணி­கள் இடம் பெற்று வரு­கின்­றன. இன்­னும் மனித உடல் எச்­சங்­கள் வெளி­வ­ரு­வது நின்­ற­பா­டா­கத் தெரி­ய­வில்லை.

பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ள மன்­னார் புதை­குழி எச்­சங்­கள்

கட்­டம் கட்­ட­மாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரும் அகழ்­வுப் பணி­க­ளின் போது, பல மனித எலும்­புக்­கூ­டு­கள் தென்­பட்­டுக் கொண்டே இருக்­கின்­றன. இந்தக் கட்­டுரை எழு­தப்­பட்­ட­வேளை வரை, மன்­னார் நீதி­மன்­றத்­தில் 52 பெட்­ட­கங்­க­ளில் மனித உடல் எச்­சங்­கள் பாது­காக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரிய வரு­கி­றது.இது சர்வசாதா­ர­ண­மா­கக் கரு­திக் கைவிட்­டுக் கடந்து போகக்­கூ­டி­ய­தொரு விட­ய­மு­மல்ல.

இந்த உடல் எச்­சங்­கள் பகுப்­பாய்­வுக்­காக கொழும்பு பல­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்­பப்­பட இருக்­கின்­றன. அந்­தப் பகுப்­பாய்வு முடி­வு­கள் கிடைத்­த­தன் பின்­னரே இந்த எலும்புக்­கூ­டு­கள் பற்­றிய மர்ம முடிச்­சுக்­கள் அவி­ழும்.

குறித்­த­ம­னித உடல் எச்­சங்­களை ஆய்­வு­செய்வ­தன்­மூ­லம் அவற்­றின் வயது , அவை புதைக்­கப்­பட்ட காலம், நிகழ்ந்த சம்­ப­வம், இறந்த அல்லது கொல்­லப்­பட்ட‌ கார­ணங்­கள் எல்­லாம் வெளிச்­சத்­துக்கு வரும். சில நேரங்­க­ளில் இந்த எச்­சங்­கள் குறித்த விவ­ரங்­கள் வெளிச்­சத்­துக்கு வராது தடுக்­கப்­ப­ட­வும் கூடும். பகுப்­பாய்வு அறிக்கை வெளி­வர முன்­னரே, அந்த எச்­சங்­கள் சம்பந்­த­மாக என்ன நிகழ்ந்­தி­ருக்­க­ லாம் என அலசி ஆராய்­வதே இந்­தக்­கட்­டு­ரை­யின் நோக்­க­மா­கும்.

மன்­னார் எனப்­ப­டு­வது வடக்­கின் தமி­ழர் தாயகப் பரப்­பா­கும்.இந்த மாவட்­ட­மும், கடந்த போர் இடம்­பெற்ற காலத்­தில் பல வடுக்­க­ளை­யும், நேரடி, மறை­முக போர்­க­ளுக்கு முகம் கொடுத்த பகு­தி­யா­கும். எனவே அதன் விளை­வு­க­ளின் அறு­வ­டை­யா­கக் கூட இந்த மனித உடல் எச்­சங்­கள் அமை­ய­லாம்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் போராட்­டம் இன்று 500 நாள்­க­ளை­யும் கடந்து சென்று கொண்­டி­ருக்­கும் சமாந்­தர காலப்­ப­கு­தி­யில், இந்த மனி­தப் புதை­குழி எச்­சங்­கள் வெளி­வந்­தி­ருப்­பது, காலத்­தின் தன்­னாக்க வெளிப்­ப­டுத்­து­கையோ அல்­லது காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளின் கண்­ணீ­ருக்­கான நீதி­யின் விடை­யா­கவோ கூட அமை­ய­லாம்.

போர் இடம்­பெற்ற காலத்­தில் பல தமிழ் இளை­ஞர்­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­டி­ருந்­தி­ருக்­கி­றார்­கள், போர் முடி­வ­டைந்த காலப்­ப­கு­தி­யில்­கூட, பலர் காணா­மல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்று காணா­மல் ஆக்­கப்­ப­டோரைக் கண்­ட­றி­யும் ஆணைக்­குழு கூடத் தக­வல் வெளி­யிட்­டி­ருக்­கி­றது, அத்­தோடு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான போராட்­டங்­க­ளில் கலந்­து­கொள்­கின்ற உற­வி­னர்­க­ளி­னால் காண்­பிக்­கப்­ப­டு­கின்ற ஒளிப்­ப­டங்­கள் கூட ஏரா­ள­மா­ன­வர்­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­துக்கு சான்­றாக அல்­லது சிற‌ந்த மாதி­ரி­யொன்­றா­க (சாம்­பி­ளாக) அமை­கி­றது. இந்த அகழ்­வுப் பணி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்ட எலும்­பு­கூ­டு­கள் அதற்­கான விடை­களை அல்­லது அது யாராக இருக்­கும் என்ற விடையை மர­ப­ணுச் சோத­னை­கள் மூலம் தந்­து­வி­ட­லாம்.

இரு மனித எலும்­புக்­கூ­டு­கள் ஒன்­றை­யொன்று பற்­றிப் பிடித்த நிலை­யில்…

அத்­தோடு மட்­டு­மல்­லாது, கடை­சி­யாக மன்­னார் அகழ்­வின் போது ஒரு குழிக்­குள் இரு மனித எலும்­புக்­கூ­டு­கள் ஒன்றை ஒன்று பற்றிப் பிடித்த நிலை­யில் தோற்­ற­ம­ளித்­த­தாக ஒளிப்­பட ஆதா­ரங்­க­ளு­டன் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அந்த எலும்­புக்­கூட்டை நிதா­ன­மாக ஆழ­மாக அவ­தா­னித்­தால் அதி­லும் ஏதோ ஒரு விட­யம் புலப்­பட்டு வெளிப்­ப­டு­கி­றது., அந்த எலும்­புக்­கூட்­டின் தலைப்­ப­குதி ஏதோ ஒன்றை வெளி­யு­லக்­குக்­குச் சொல்ல எத்­த­னிக்­கி­றது போலி­ருக்­கி­றது.

அந்த எலும்­புக்­கூட்டை உற்­றுப்­பார்க்­கும்­போது, தலைப்­ப­கு­தி­யா­னது ஒரு கோணத்­தி­னூ­டாக பார்த்து குர­லெ­டுத்­துக் கத­று­வது போல தோற்­ற­ம­ளிக்­கி­றது. அது­வும் அது இன்­னொ­ரு­வ­ரோடு இணைக்­கப்­பட்­டும் காணப்­ப­டு­கி­றது,

மன்­னார் புதை­குழி விவ­கா­ரத்­தில் வெளி­யா­கும் பல­த­ரப்­பட்ட ஊகங்­கள்

இதன் மர்­மம் என்­ன­வென வெளிப்­ப­டுத்­தப்­பட்டே ஆக வேண்­டும், ஒரு­வேளை துன்­பு­றுத்­தப்­பட்டு கத­றிய நிலை­யில் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம், அல்­லது பலர் கைகள் கயி­று­க­ளால் பிணைக்­கப்­பட்டு கூட்­டா­கக் கொல்­லப்­பட்­டி­ருக்­கக்­கூட வாய்ப்­பி­ருக்­க­லாம், அல்­லது குற்­று­யி­ரு­டன் புதைக்­கப்­பட்­டி­ருக்­க­லாம், என ஊகங்­களை அடுக்­கிக் கொண்டே போக­லாம்.

இது மனிதப் படு­கொ­லை­யின் உச்ச விளிம்பு நிகழ்­வு­க­ளாகக்கூட அமைந்­தி­ருக்­க­லாம். அல்­லது அவற்­றின் பகுப்­பாய்வு முடி­வு­கள் அண்­மைய காலச் சம்­ப­வ­மாக அல்­லாது 200 முதல் 500 வரை­யான வரு­டங்­க­ளுக்கு முற்­பட்­ட­தா­கக் கூட இருக்­க­லாம் என்­ப­தும் வியப்­புக்கு உரி­ய­தொன்­றல்ல.

ஏனெ­னில், இலங்கை தீவு அந்­நி­யர்­க­ளான போர்த்­துக்­கீ­சர், ஒல்­லாந்­தர், ஆங்­கி­லே­யர் என்­போர் ஆளு­கைக்கு உள்­ளா­கி­யிருந்தபோது கரை­யோரப் பிர­தே­சங்­களே அந்த அன்­னி­யர்­க­ளது முத­லா­ளு­கைக்­கும், இராச்­சிய நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் உள்­ளா­கி­யி­ருந்­தமை வர­லாற்­றுப் பதி­வு­கள்.

மன்­னார் பகு­தி­யா­னது, இந்து சமுத்­தி­ரத்­தின் கேந்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த துறை­மு­கங்­க­ளை­யும் கோட்­டை­க­ளை­யும் கொண்­டி­ருந்­தது, இந்த ஆளுகை போராட்ட சூழல்­க­ளில் கைதி­கள், புரட்சி செய்­தோர், படை­யெ­டுப்­புக்­க­ளில் கொல்­லப்­பட்­டோர், குற்­றச் செயல்­க­ளுக்­காக கொல்­லப்­பட்­டோர் இவ்­வாறு புதைக்­கப்­ப ட்­டு­மி­ருக்­க­லாம். அவற்­றின் எச்­சங்­க­ளா­கக்­கூட இவை அமை­ய­லாம், இத்­த­கைய ஊட­கங்­க­ளுக்­கெல்­லாம், அந்த உடல் எச்­சங்­க­ளின் பகுப்­பாய்­வின் மூலம், எலும்­புக்­கூ­டு­கள் மண்­ணில் புதை­யுண்­டி­ருந்த கால இடை­வெ­ளியே விடை­ய­ளிக்கப் போகி­றது.

இது போன்­ற­தொரு நிகழ்­வாக அண்­மை­யில் உக்­ரைன் நாட்­டில் கல்­ல­றை­யொன்­றில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இணைந்த நிலை­யான மனித எலும்­புக்­கூ­டொன்று உல­கத்­தின் கவ­னத்தைப் பெரு­ம­ள­வில் ஈர்த்­தி­ருந்­தது.

சட­லங்­கள் புதைக்­கப்­பட்ட காலத்தை பகுப்­பாய்வு முடி­வு­கள் உறு­தி­செய்­தால் பல மர்­மங்­க­ளுக்கு விடை கிட்­டும்

அந்த எலும்­புக்­கூ­டு­கள் ஆணும் பெண்­ணும் இணைந்­த­வா­றான‌ நிலை­யில் காணப்­பட்­டன, அது 3000 ஆண்­டு­கள் பழ­மை­யான எலும்­புக்­கூ­டு­கள். அதில் ஆண் எலும்­புக்­கூ­டொன்­று­டன் பெண் மிக பாச­மாக, இயல்­பாக இருப்­பது போலத் தோன்­று­கி­றது.

அந்த எலும்­புக்­கூ­டு­களை ஆராய்ச்சி செய்த உக்­ரைன் நாட்டு தொல்­லி­யல் ஆராய்­சி­யா­ளர்­க­ளது கருத்­துப்­படி, எலும்­புக்­கூ­டு­கள் இருக்­கும் நிலையை நோக்­கும்­போது, கண­வன் மனை­வி­யு­டைய எலும்­புக்­கூ­டு­கள் என்­றும், இரண்­டும் இறந்த பின்­னர் ஒன்­றா­கப் புதைக்­கப்­ப­ட­வில்லை என்­றும், அதில் சாவின் பின் இயல்­பாக புதைப்ப‌து போன்று புதைக்­கப்­ப­ட­ வில்லை என்று தோன்­று­வ­தா­க­வும், கண­வன் இறந்த பின் உயிர்வாழ மன­மில்­லாத நிலை­யில் கண­வன் மீது கொண்ட அன்பு கார­ண­மாக மனை­வி­யா­ன­வள் அடுத்த பிற­வி­யில் தனது அந்தக் கணவனுடன் சேர்ந்து வாழ­லாம் என்ற எண்­ணத்­தி­ல், மெல்­லச் சாக­டிக்­கும் விசத்தை அருந்­திய பின்­னர் கண­வ­னின் உட­லுக்கு அரு­கில் படுத்து, அவ­ரது தலைக்கு கீழாக வலது கையை வைத்து கட்­டி­ய­ணத்து, கண­வ­னின் முகத்­து­டன் தனது முகத்­தைச் சாய்த்து தனது கால்­க­ளி­ரண்டையும் கண­வன் கால்­க­ளின் மீது போட்டு, இடது கையை அவ­ரது மார்பு மீது வைத்­த­வாறு , இயல்­பாக, விசத்­தின் வீரி­யத்­தால் மயக்­க­ம­டைந்து உயிர் துறந்­தி­ருக்­கி­றார் என்ற முடி­வுக்கு ஆய்­வா­ளர்­கள் வந்­தி­ருந்­த­னர்.

அந்த பெண்ணே இத்­த­கைய முடிவை விரும்பி மேற்­கொண்­டுள்­ளார் என்­றும், இறப்­பின் பின்­னர் இப்­ப­டி­யான இயல்­பான உடல்­க­ளின் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­திப் புதைப்­பது இய­லாத காரி­யம் என்­றும் உக்­ரைன் நாட்டு தொல்­லி­யல் ஆய்­வா­ளர்­கள் கூறு­வ­தோடு, குறித்த அந்­தப் பெண் தனது கண­வன்மீது கொண்­டி­ருந்த பாசத்தை எண்­ணித் தாம் மெய்­சி­லிர்ப்­ப­தா­க­வும் கூறி­ யுள்­ள­னர். இந்­தச்­சம்­ப­வம், உண்­மைக் காத­லுக்கு ஒரு சான்­றாக இருப்­பி­னும், இங்கு ஏன் இது குறித்து குறிப்­பிட நேர்­கிற தென்­றால் , ஒரு எலும்­புக்­கூடு இருக்­கும் நிலையை வைத்து குறித்த அந்த ஆணி­னதோ அல்­லது பெண்­ணி­னதோ இறப்­புப் பற்­றி­யும், இற‌க்­கும் போதான சூழல் அமை­வு­கள் பற்­றி­யும், குறித்த எலும்­புக்­கூட்­டுக்­கு­ரிய நபரோ, பெண்­ம­ணியோ இறந்த காலம், நேரம், வயது, ஆணா அல்லது பெண்ணா அல்­லது கர்ப்­ப­வ­தியா, கன்­னியா , என்ன இனம் , என்ன மொழி பேசி­னார்­கள் என்­ப­ன­வற்­றைக் கண்­ட­றி­யும் நவீன விஞ்­ஞான யுகத்­தில் தான் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்.

மர்­மங்­கள் என்றோ ஒரு நாள் துலங்­கியே ஆகும்

இதை ஏன் இங்கு குறிப்­பிட வேண்­டி­யுள்­ள­தெ­னில், மன்­னார் புதை­கு­ழி­யில் சிக்­கிய எலும்­புக்­கூட்­டின் முக­பா­வம் பல செய்­தி­க­ளைச் சொல்­கி­றது, அத­னு­டன் இன்­னொரு எலும்­புக்­கூடு இயல்­பாக பிணைந்­தி­ருக்­கி­றது அல்­லது பற்­றிப்­பி­டித்­தி­ருக்­கி­றது, இந்­நி­லை­களை வைத்து முடி­வு­களை நாம் எடுக்­க­லாம். அவை பல்­வேறு வகைப்­பட்ட ஊட­கங்­க­ளின் முடி­வில் மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டும். ஆனால் இந்த எலும்­பு­கூ­டு­கள் உண்­மை­யான பகுப்­பாய்­வுக்கு உட்­பத்­தப்­ப­டும்­போது அது எந்த ஆண்­டுக்­கு­ரி­யது? அவற்­றுக்­கு­ரிய ஆண் அல்­லது பெண், இறந்த ஆண்டு, இறக்­கும் போது அவர்­க­ளது வயது, குண்­டடி பட்டு இறந்­துள்­ளனரா? எலும்­பு­க­ளில் உடை­வு­கள் உள்­ளனவா? உடை­வு­கள், இறப்­புக்கு சற்று முன் சித்­தி­ர­வ­தை­யின்­போது ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­வையா? சம்­ப­வம் எவ­ரு­டைய ஆட்­சிக் காலத்­தில் இடம்­பெற்­றுள்­ளது? அதன் மர­பணுச் சோதனை மூலத்தை அறிந்­தால், அவை எவரு­டைய, எவர்­க­ளு­டைய உறவினர் அல்லது மகன் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உற­வு­க­ளின் மர­பணு மாதி­ரி­க­ளு­டன் ஒப்­பிட்டு தீர்க்­க­மான விஞ்­ஞான உண்­மை­க­ளின் அடிப்­ப­டை­யில் முடி­வு­களை எட்ட முடி­யும்.

இத்­த­கை­ய­தொரு முடிவை எட்­டு­வ­தற்கு முத­லில் பகுப்­பாய்வு முடி­வு­கள் உண்­மை­யாக இருக்க வேண்­டும், உண்­மை­யாக இருந்­தா­லும், அது அர­சி­யல் அல்­லது வேறு தலை­யீ­டு­கள், தடை­க­ளின்றி வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

எனவே புதை­கு­ழி­க­ளில் இத்­தனை கால­மும் மறைந்து போயி­ருந்த மர்­மங்­கள் துலங்­கும்­கா­லம் வெகு தொலை­வில் இல்லை. ஆனால் உண்மை உறு­திப்­ப­டுத்தப்படவேண்­டி­யி­ருந்­தால், குறித்த மனித உடல் எச்­சங்­கள் குறித்த பகுப்­பாய்­வு­கள் நேர்­மை­யா­ன­வி­தத்­தில், பக்­கச்சார்­பற்ற வகை­யில், அர­சி­யல் தலை­யீ­டு­கள் எது­வு­மின்றி இடம்­பெற்­றாக வேண்­டும்.
அத்­த­கை­ய­தொரு நீதி­யும் நேர்­மை­யு­மான பகுப்­பாய்­வு­கள் பல உண்­மை­களை வெளிக்­கொ­ண­ரும் வகை­யில் அமைய இட­முண்டு.

நன்றி- உதயன்