செய்திமுரசு

அவுஸ்ரேலியா எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்

ஜோகன்னஸ்பர்க்கில் இன்று(2) நடைபெற்று வரும் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அம்லா இடம்பெறவில்லை. இது மிகப்பெரிய ஆச்சர்யம் அளிக்கிறது என்று முன்னாள் வீரர் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 295 ரன்களை சேஸிங் செய்யும்போது தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்கள் டி காக் (178), ரொஸவ் (63) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ...

Read More »

யாழ் மாணவி தேசிய சாதனை

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் 24வது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் யாழ்.தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தா(நடு) 3.41மீற்றர் உயரம் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ளார்.

Read More »

பூகோள அரசியலை விளங்கிக் கொள்ளாமல் ஒரு போதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது! – கஜேந்திரகுமார்

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கை அரசியல் யாப்பு” நூலின் ...

Read More »

வடமாகாணசபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் உயிரிழந்தார்!

வடமாகாசபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே சுகயீனம் அடைந்திருந்த அவர் இன்று(1) காலை முள்ளிவளைப் பகுதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியில் மாரடைப்பால் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Read More »

நாமல் ராஜபக்ச விபத்தில் காயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்த நாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார். இன்றைய தினம் அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைப்பகுதியில் ஏற்பட்ட சிறு காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Read More »

இன்று நவராத்திரி- கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

நவராத்திரியின் 9 நாட்களிலும் அம்பிகையின் சக்தி பிரவாகமாய் பரவி இருக்க அதனை நம்முள் பெற்றுக் கொள்ளும் பூஜையாகக் கொண்டாடப்படுகின்றது. நவராத்திரி சரிதத்தினை முனிவர் நாரதர் சொல்லி ஸ்ரீ ராமபிரான் கடை பிடித்து சண்டிஹோமம் செய்து அம்பிகையின் அருளை பெற்று ராவணனை யுத்தத்தில் வென்றதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. துர்க்காதேவி மகிஷாசுரனுடன் (அரக்கன்) 9 நாட்கள் போரிட்டு வென்று மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரினை பெற்றதாக வரலாற்று கூற்றும் வழிபாடும் உள்ளது. நவராத்திரியின் 9 நாட்களிலும் அம்பிகையின் சக்தி பிரவாகமாய் பரவி இருக்க அதனை நம்முள் பெற்றுக் ...

Read More »

அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிர்ப்பு

அவுஸ்ரேலியாவில் உள்ள ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனம், பெண்கள் அணியும் லெக்கின்சில், இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிட்டு, விற்பனை செய்வதற்கு இந்துக்கள் தரப்பில் கண்டனமும், அதிருப்தியும் எழுந்துள்ளது. மேலும், இவ்வாறான லெக்கின்ஸ்களை அந்நிறுவனம் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. ஆயத்த ஆடைகளிலும், உள்ளாடைகளிலும் இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிட்டு, விற்பனை செய்வதில் சில வெளிநாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த செயலுக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் வருத்தம் தெரிவிப்பதும், மன்னிப்பு கோருவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த ...

Read More »

அவுஸ்ரேலியா – நியூசிலாந்து வங்கிக்குழுமத்தின் ஆசிய வர்த்தகங்கள் சிலவற்றை வாங்கவிருக்கும் DBS

DBS குழுமம், அவுஸ்ரேலியா-நியூசிலந்து வங்கிக் குழுமத்தின் ஆசிய வர்த்தகங்கள் சிலவற்றை வாங்கவிருப்பதாகக் கூறியுள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட ஐந்து ஆசியச் சந்தைகளில் சொத்து, சில்லறை வர்த்தகங்கள் கைமாறவிருக்கின்றன. தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவையில் DBS குழுமத்தின் பெரிய அளவிலான அந்த நடவடிக்கை, ஆசியச் சந்தையில் அவுஸ்ரேலியா- நியூசிலாந்து வங்கிக்கு முதல் குறிப்பிடத்தகுந்த பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதன் சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, தைவான், இந்தோனேசிய வர்த்தகங்கள், சுமார் 110 மில்லியன் வெள்ளிக்கு DBS குழுமத்துக்கு விற்கப்படும். ஆகப் பெரிய உள்ளூர் வங்கியான DBS வங்கி, ABN AMRO ...

Read More »

வடமாகாணத்தில் இராணுவத்தின் சிகை அலங்கரிப்பு நிலையங்கள்!

வவுனியாவில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் (சலூன்) நடத்துவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா சிகை அலங்கரிப்பாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பில் அதன் தலைவர் ஸ் ரீபன் கருத்து தெரிவிக்கையில், வவுனியா பம்பைமடு மற்றும் ஓமந்தை- நாம்பன்குளம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. நாம் பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழிலை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதால் எம்மில் பலர் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் பம்பைமடு இராணுவ முகாம் பொறுப்பதிகாரியுடன் ...

Read More »

மெல்பேர்ணில் இலவச Wi-Fi வசதி!

மெல்பேர்ண் மாநரின் பல பகுதிகளில் இலவச Wi-Fi சேவை நேற்று(29.09.2016) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 11மில்லியன் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்படும் இப்பரீட்சார்த்த திட்டத்தின் கீழ் மெல்பேர்ண் CBDயில் உள்ள அனைத்து தொடரூந்து நிலையங்கள் , Bourke St Mall, Queen Victoria Market, மற்றும் Melbourne Convention and Exhibition Centre இன் South Wharf Promenade ஆகிய இடங்களில் இலவச Wi-Fi வசதி வழங்கப்படுகிறது. இவ்வருட இறுதிக்குள் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் இந்தச் சேவை விஸ்தரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. TPG தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படும் இந்த ...

Read More »