அவுஸ்ரேலியா – நியூசிலாந்து வங்கிக்குழுமத்தின் ஆசிய வர்த்தகங்கள் சிலவற்றை வாங்கவிருக்கும் DBS

DBS குழுமம், அவுஸ்ரேலியா-நியூசிலந்து வங்கிக் குழுமத்தின் ஆசிய வர்த்தகங்கள் சிலவற்றை வாங்கவிருப்பதாகக் கூறியுள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட ஐந்து ஆசியச் சந்தைகளில் சொத்து, சில்லறை வர்த்தகங்கள் கைமாறவிருக்கின்றன.

தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவையில் DBS குழுமத்தின் பெரிய அளவிலான அந்த நடவடிக்கை, ஆசியச் சந்தையில் அவுஸ்ரேலியா- நியூசிலாந்து வங்கிக்கு முதல் குறிப்பிடத்தகுந்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதன் சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, தைவான், இந்தோனேசிய வர்த்தகங்கள், சுமார் 110 மில்லியன் வெள்ளிக்கு DBS குழுமத்துக்கு விற்கப்படும். ஆகப் பெரிய உள்ளூர் வங்கியான DBS வங்கி, ABN AMRO வங்கியின் தனிப்பட்ட வாடிக்கையாளர் வங்கிச் சேவைக்கான ஆசிய வர்த்தகத்தையும் வாங்கத் திட்டமிடுவதாகக் கூறப்பட்டது.