மெல்பேர்ணில் இலவச Wi-Fi வசதி!

மெல்பேர்ண் மாநரின் பல பகுதிகளில் இலவச Wi-Fi சேவை நேற்று(29.09.2016) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

11மில்லியன் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்படும் இப்பரீட்சார்த்த திட்டத்தின் கீழ் மெல்பேர்ண் CBDயில் உள்ள அனைத்து தொடரூந்து நிலையங்கள் , Bourke St Mall, Queen Victoria Market, மற்றும் Melbourne Convention and Exhibition Centre இன் South Wharf Promenade ஆகிய இடங்களில் இலவச Wi-Fi வசதி வழங்கப்படுகிறது.

இவ்வருட இறுதிக்குள் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் இந்தச் சேவை விஸ்தரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

TPG தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படும் இந்த இலவச Wi-Fiஐப் பயன்படுத்துவதற்கு தனிப்பட்ட Login எதுவும் தேவைப்படாது. அத்துடன் இலவச சேவையென்பதால் விளம்பரங்களும் அவ்வப்போது தோன்றி தொந்தரவு செய்யாது.

ஒரு நாளைக்கு ஒரு கருவியில் 250MB data வரை பயன்படுத்த முடியும்.

இதேவேளை எங்கெங்கெல்லாம் இலவச Wi-Fi வசதி இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள www.vic.gov.au/wifi என்ற இணைப்பிற்குச் செல்லுங்கள்.