Home / செய்திமுரசு (page 758)

செய்திமுரசு

தெற்கில் என்னை பேயாகவும், பூதமாகவும் பார்க்கிறார்கள் -சி.வி.விக்னேஸ்வரன்

தெற்கில் தம்மைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரித்து பரப்புரைகளை மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடந்து வந்த 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நாளான நேற்று(2) மாலை நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ...

Read More »

“ஆஸ்திரேலியா” அருணகிரி எழுதிய நூல் இன்று வெளியீடு

இராமலிங்கர் பணி மன்றம், ஏவிஎம் இராஜேஸ்வரி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 51 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழாவில், இன்று 3.10.2016 திங்கட் கிழமை மாலை ஐந்து மணிக்கு, அருணகிரி எழுதிய ஆஸ்திரேலியா என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமை ஏற்கிறார்.வழக்கறிஞர் காந்தி முன்னிலை வகிக்கின்றார். இடம்-  ஏவிஎம் இராஜேஸ்வரி திருமண மண்டபம், இராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை. 

Read More »

அவுஸ்திரேலிய பிரஜா உரிமையுடையவர்களின் பெற்றோருக்கான விசா

அவுஸ்திரேலிய அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவரும் வகையில் புதிய தற்காலிக பெற்றோர் விசா ஒன்று எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜுலை முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது. அந்த வகையில், இந்த விசா தொடர்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 12 விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. புதிய தற்காலிக ...

Read More »

அவுஸ்ரேலியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்த ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (2)  2-வது நாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ரோசவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 22 ரன்னிலும், ரோசவ் ...

Read More »

மெல்பேர்ணில் உணர்வுடன் நடந்தேறிய தியாகதீப கலைமாலை நிகழ்வு-2016

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்களாக நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து 26-09-1987அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினமும் கலைமாலை நிகழ்வும் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 30-09-2016 வெள்ளிக்கிழமையன்று சென்யூட்ஸ் மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் 26-09-2001 அன்று புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான்வீதியில் சிறிலங்காப்படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ...

Read More »

அவுஸ்ரேலியா எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்

ஜோகன்னஸ்பர்க்கில் இன்று(2) நடைபெற்று வரும் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அம்லா இடம்பெறவில்லை. இது மிகப்பெரிய ஆச்சர்யம் அளிக்கிறது என்று முன்னாள் வீரர் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 295 ரன்களை சேஸிங் செய்யும்போது தென்ஆப்பிரிக்காவின் ...

Read More »

யாழ் மாணவி தேசிய சாதனை

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் 24வது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் யாழ்.தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தா(நடு) 3.41மீற்றர் உயரம் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ளார்.

Read More »

பூகோள அரசியலை விளங்கிக் கொள்ளாமல் ஒரு போதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது! – கஜேந்திரகுமார்

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ...

Read More »

வடமாகாணசபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் உயிரிழந்தார்!

வடமாகாசபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே சுகயீனம் அடைந்திருந்த அவர் இன்று(1) காலை முள்ளிவளைப் பகுதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியில் மாரடைப்பால் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Read More »

நாமல் ராஜபக்ச விபத்தில் காயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்த நாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார். இன்றைய தினம் அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைப்பகுதியில் ஏற்பட்ட சிறு காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Read More »