அவுஸ்திரேலியாவின் பிங்க் ஹோப் கேன்சர் பாதுகாப்புக் குழுமம் மற்றும் ஹெச்.சி.ஜி.தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்காக போட்டி ஒன்றை நடத்தவுள்ளது.
இந்த போட்டியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் பங்கேற்க முடியும்.
தாங்கள் நோயிலிருந்து மீண்டது எப்படி, அதற்காக எடுத்துக் கொண்ட சிகிச்சை முறைகள் பற்றி ஒரு மணிநேரம் வீடியோ ரெகார்ட் செய்து அனுப்ப வேண்டும்.
இந்த வீடியோ புற்றுநோயை எதிர்த்து போராடும் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும் என ஹெச்.சி.ஜி நிறுவனத் தலைவர் டாக்டர் பி.எஸ்.அஜெய்குமார் கூறியுள்ளார்.
அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் புற்றுநோயினால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் மற்ற நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை