செய்திமுரசு

கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்காக அவுஸ்ரேலியாவில் கவனயீர்ப்பு

கேப்பாபிலவு மக்களின் நிலமீட்புக்கான போராட்டம் 15 நாட்களாக தொடர்ந்துவருகின்றது. அரசதிகாரிகள் விடுவிப்பார்கள் என்றும் இராணுவத்தினர் விடுவிப்பார்கள் என்றும் மைத்திரி நேரில் வந்து விடுவிப்பார் என்றும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் அப்பகுதி மக்களால் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இதற்கு ஆதரவாக வன்னியிலும் திருமலையிலும் மட்டக்களப்பிலும் யாழிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதேபோன்று தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்ரேலியாவின் சிட்னியிலும் மெல்பேர்ணிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளன. நிகழ்வு பற்றிய விபரங்கள்: 6.00 PM ...

Read More »

பிராட்மேனுடன் ஒப்பிடுவது மிகப்பெரிய கௌரவம் – அஸ்வின்

பந்து வீச்சின் பிராட்மேன் என்று அவுஸ்ரேலியா முன்னாள் கப்டன் ஸ்டீவ்வாக் தன்னை ஒப்பிட்டது மிகப்பெரிய கவுரவம் என்று அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவர் 250 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் அதிவேகப் பந்தில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்தார். அஸ்வினின் பந்து வீச்சை அவுஸ்ரேலிய முன்னாள் கப்டன் ஸ்டீவ்வாக் வெகுவாக பாராட்டி இருந்தார். பந்து வீச்சின் பிராட்மேன் அஸ்வின் என்று தெரிவித்து இருந்தார். அவுஸ்ரேலிய முன்னாள் ...

Read More »

அவுஸ்ரேலிய பிரதமருக்கு ரணில் அழைப்பு!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்ரேலியா பிரதமர் மெல்கம் டிரன்புல்லுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்ரேலியாவிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  புதன்கிழமை கன்பெரா நகரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வைத்து அவுஸ்ரேலிய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியே போது அவர் இந்த அழைப்பை விடுத்தார். 1954 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் விஜயத்திற்கு பின்னர் இலங்கை ...

Read More »

புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் -அவுஸ்திரேலியாவில் ரணில்

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார். அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் மேலும் காணாமல் போனோர் குறித்து இனங்காண்பதற்கு காணாமல் போனவர்களுக்கான அலுவலம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவுஸ்திரேலியா சென்றுள்ள ...

Read More »

ரணிலின் பெயருக்கு முன் கலாநிதிப்பட்டம் பயன்படுத்தத் தடை!

அவுஸ்ரேலியாவுக்கு அதிகார பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்றையதினம் கீலோங்கிலுள்ள டீக்கின் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்தது. குறித்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜோன் ஸ்ரான்ஹோப் இந்தப் பட்டத்தை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கினார். நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் மற்றும் பிரதமராக இருந்து நாட்டின் கல்வி, பொருளாதார நிலை, மனித உரிமைகள் நிலையை உயர்த்துவதற்காக பாடுபட்டுவருவதற்காகவே இக்கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்கௌரவிப்பு பட்டமளிப்பு விழா நடைபெற்றதன்பின்னர், இந்த கலாநிதி பட்டத்தை, அதிகாரபூர்வ அல்லது தனிப்பட்ட விடயங்களில் ...

Read More »

விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் ரணில் சந்திப்பு

அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுனர் லிண்டா டேசாவும் பங்கேற்கவுள்ளார்கள். இதேவேளை  டிக்கீன் பல்கலைக்கழகம் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம். கல்வி என்பனவற்றை மேம்படுத்தவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் பிரதமர் ரணில் ...

Read More »

சுமந்திரன் படுகொலை சதி விவகாரம் – ரி.ஐ.டி. நடவடிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுச் எய்யப்ப்ட்டுள்ள முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களில் ஒருவரான வேலாயுதம் விஜேய் குமார் என்பவரை மீள பயங்கரவாத புலனாய்வாளர்களின் (ரி.ஐ.டி.) பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயங்கரவாத புலனயவுப் பிரிவின் வவுனியா அலுவலகம் ஊடாக கைது செய்யப்ப்ட்ட அவர் பொலிஸ் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள நிலையிலேயே எதிர்வரும் 20,21 மற்றும் 22 ...

Read More »

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தினால் ரணிலுக்கு கௌரவ கலாநிதிப் பட்டம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய கீலோங்கில் உள்ள டேய்கின பல்கலைக்கழகம் 14 ஆம் திகதி கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் 13 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார். வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும், பிரதமரின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலேயே கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்த முதல் சிறீலங்கா பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவே என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

விராட் கோலி மற்றும் இந்திய அணியை வீழ்த்த மெக்ராத் கூறும் ரகசியம்

விராட் கோலி மற்றும் இந்திய அணியை வீழ்த்துவதற்கு அவுஸ்ரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தனது ரகசியத்தை கூறியுள்ளார். இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்தி அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் சில ரகசியங்களை கூறியுள்ளார். அதில் ‘‘இந்தியா, இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான், துபாய் போன்ற துணைக் கண்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களால் பவுன்ஸ் பந்துகளை அடிக்கடி வீசமுடியாது. அதை போல் சீம் மற்றும் கேரி செய்ய ...

Read More »

அவுஸ்ரேலிய டெஸ்ட் வீரர் வோக்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

டான் பிராட்மேனுக்கு அடுத்தப்படியாக பேட்டிங் சராசரி வைத்திருக்கும் ஆடம் வோக்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவுஸ்ரேலிய அணியில் 2015-ம் ஆண்டு ஆடம் வோக்ஸ் தனது 35-வது வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே அவுட்டாகாமல் 130 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் அதிக வயதில் அறிமுகமாகி, அதே போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், இலங்கை தொடரில் மிகவும் மோசமாக விளையாடினார்கள். ...

Read More »