விராட் கோலி மற்றும் இந்திய அணியை வீழ்த்த மெக்ராத் கூறும் ரகசியம்

விராட் கோலி மற்றும் இந்திய அணியை வீழ்த்துவதற்கு அவுஸ்ரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தனது ரகசியத்தை கூறியுள்ளார்.

இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது.

இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்தி அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் சில ரகசியங்களை கூறியுள்ளார். அதில் ‘‘இந்தியா, இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான், துபாய் போன்ற துணைக் கண்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களால் பவுன்ஸ் பந்துகளை அடிக்கடி வீசமுடியாது. அதை போல் சீம் மற்றும் கேரி செய்ய இயலாது.

ஓகே. அப்படியென்றால் நீங்கள் விக்கெட்டுக்களை வீழ்த்துவது எப்படி?. பந்து புதிதாக இருக்கும்வரை கேரி இருக்கும். அந்த நேரத்தில் ஸ்லிப் திசையில் சிறப்பாக நின்று விக்கெட்டுக்களை வீழ்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் பந்து சற்றும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. அந்த நேரத்தில் சீம், கேரிங், ரிவர்ஸ் ஸ்விங் இருக்காது. அப்போது ரன்களை எவ்வளவு கட்டுப்படுத்த முடியுமோ? அந்த அளவிற்கு ரன்களை கட்டுப்படுத்த வேண்டும்.

ஆடுகளம் சற்று பழையதாகிய பின் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக தயார் ஆகும். அந்த நிலையில் பந்துவீச்சு மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படி பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்போது பந்து வீச்சாளர்களுக்கு சற்று ஆதரவாக இருக்கும். அந்த நேரத்தில் தாக்குதல் பந்து வீச்சில் ஈடுபட வேண்டும்.

நீண்ட ஸ்பெல் பந்து வீச தயாராகி, நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டுக்களை வீழ்த்த பார்க்க வேண்டும். இதுதான் துணைக் கண்டத்தில் என்னுடைய மனநிலை’’ என்றார்.