கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்காக அவுஸ்ரேலியாவில் கவனயீர்ப்பு

கேப்பாபிலவு மக்களின் நிலமீட்புக்கான போராட்டம் 15 நாட்களாக தொடர்ந்துவருகின்றது. அரசதிகாரிகள் விடுவிப்பார்கள் என்றும் இராணுவத்தினர் விடுவிப்பார்கள் என்றும் மைத்திரி நேரில் வந்து விடுவிப்பார் என்றும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் அப்பகுதி மக்களால் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

இதற்கு ஆதரவாக வன்னியிலும் திருமலையிலும் மட்டக்களப்பிலும் யாழிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இந்தவகையில் அவுஸ்ரேலியாவின் சிட்னியிலும் மெல்பேர்ணிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளன.

நிகழ்வு பற்றிய விபரங்கள்:

6.00 PM – 07.00 PM
Friday 17/02/2017

Sydney Venue:

12 Portico Parade Reserve,
Toongabbie, NSW 2146
(Front of the station)

Melbourne Venue:

Dandenong Library,
225 Lonsdale St, Dandenong VIC 3175

ஒரு குரலில் ஒலிப்போம்!! எங்கள் நிலம் எங்களுக்கானது!!!

தொடர்பு:
TCC Australia

unnamed (19)